Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

டீடாக்ஸ் ஜூஸ்!


Discussions on "டீடாக்ஸ் ஜூஸ்!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    டீடாக்ஸ் ஜூஸ்!

    டீடாக்ஸ் ஜூஸ்!

    தேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி, புதினா - கால் கைப்பிடி, தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, எலுமிச்சை - 1/2 பழம், உப்பு அல்லது தேன் - தேவையான அளவு.

    செய்முறை: எலுமிச்சையைச் சாறு எடுத்து, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி ஆகியவற்றோடு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, மிக்*ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இதனுடன், எலுமிச்சைச் சாறு மற்றும் தேவைப்பட்டால் உப்பு அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.


    பலன்கள்

    *கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவில் வைட்டமின் ஏ சிறிதளவும், உடலுக்கு ஊட்டமளிக்கும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸும் உள்ளன. எலுமிச்சைச் சாறு சேர்க்கப்படுவதால், வைட்டமின் சி கிடைக்கும்.

    *பல்வேறு விதமான ஆன்டிஆக்ஸிடன்ட் இந்த ஜூஸில் இருந்து கிடைக்கும்.

    *மிட் மார்னிங் எனப்படும் காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையில், இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது.

    *குழந்தைகளுக்கு, தேன் அல்லது வெல்லம் போன்றவை சேர்த்துக் கொடுப்பது நல்லது. வெல்லம் சேர்க்கும்போது, குழந்தைகளுக்கு இரும்புச்சத்து கிடைக்கும்.

    *சர்க்கரை நோயாளிகள் தேன், உப்பு போன்றவற்றைத் தவிர்த்துப் பருகுவது நல்லது. சிறுநீரக நோயாளிகள் உப்பு தவிர்த்து, தேன் சேர்த்துப் பருக வேண்டும்.

    *சிறந்த டீடாக்ஸ் ட்ரிங்க் இது. வடிகட்டிப் பருகினால், சத்துக்கள் பெருமளவு குறைந்துவிடும். எனவே, வடிகட்டாமல் குடிப்பதே நல்லது.

    Similar Threads:

    Sponsored Links
    kkmathy and RathideviDeva like this.

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: டீடாக்ஸ் ஜூஸ்!

    Very good sharing, Latchmy.


  3. #3
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: டீடாக்ஸ் ஜூஸ்!

    useful sharing sis TFS



    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  4. #4
    sharamsn's Avatar
    sharamsn is offline Commander's of Penmai
    Real Name
    sharmi begam
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    puducherry
    Posts
    1,344

    Re: டீடாக்ஸ் ஜூஸ்!

    Very good sharing.TFS

    SMILE TO SOLVE PROBLEM

    SILENCE TO AVOID PROBLEM

    sharmi begam...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter