அற்புத மூலிகை துளசி!

மூலிகைச்செடியான துளசியை சர்வரோக நிவாரணி என்பார்கள். இதற்கு ஆன்மிக மகத்துவமும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. மனித உடலின் ராஜ உறுப்புகளான இதயம், நுரையீரல், மூளை, ஈரல் மற்றும் சிறுநீரகம் போன்றவற்றைப் பாதுகாத்து, வலிமையாக்கி செயல்பட வைக்கும் அற்புத சக்தி படைத்தது துளசி. தினமும் 5 முதல் 10 துளசி இலைகளுடன் 2, 3 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு, வெதுவெதுப்பான நீர் அருந்தி வந்தால்... கொலஸ்ட்ரால் கரைவதோடு, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வரும். கூடவே... நுரையீரலில் சளி, இருமல் சேராது. சுவாசம் சீராகும். கல்லீரல் சிதைவாகாமல் செயல்படும். மூளையின் செல்கள் புத்துணர்ச்சி பெற்று செயல்படும்.
துளசியைப் பொதுவாக நாம் அருந்தும் டீயில் சேர்த்துச் சாப்பிடலாம். இல்லையென்றால் காபி, டீயை தவிர்த்து துளசி தேநீர் தயாரித்து பருகலாம். துளசி இலைகளைப் பறித்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி பால், சர்க்கரை, சிறிதளவு ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் நன்னாரி, சீரகம், சோம்பு (பெருஞ்சீரகம்) ஆகியவற்றை சுவைக்கு ஏற்ப சேர்த்து, வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால்... நோய்கள் வரும் முன் தடுத்துக்கொள்ளலாம்.

Similar Threads: