சைவத்துக்கு மாறும்போது...

டல்பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என ஏதாவது ஒரு காரணத்துக்காக அசைவ உணவுப் பிரியர்கள், சைவ உணவுக்கு மாறும் சூழல் ஏற்படலாம். இப்படி, திடீரென மாறும்போது, உடலில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். சிலருக்குக் கண்களில் பூச்சி பறக்கும்; மெல்லும்போது தாடை அசைவு கடினமாக இருக்கும்; உடல் எடை குறையும்; ஒருவரது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப, இந்த விளைவுகள் மாறுபடும்.
முழுமையான புரதச்சத்துக்கள் அசைவ உணவுகளில்தான் கிடைக்கின்றன. அசைவ உணவுகளில் இருக்கும் அத்தியாவசிய அமினோஅமிலங்கள், உடலின் வளர்ச்சி, திசுக்களின் வளர்ச்சி போன்றவற்றுக்கு உறுதுணையாக இருக்கின்றன.
உடல் எடை குறையும். இதனுடன் சோர்வு, தலைக் கிறுகிறுப்பு, நடுக்கம் ஆகியவை வரலாம். நம் வயிற்றினுள் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவிலும் மாறுபாடு ஏற்படலாம். அதாவது, இதுவரை சாப்பிட்ட அசைவ உணவால் உருவான கட் பாக்டீரியா (Gut bacteria), உடனடியாக மாறும். இந்த மாற்றத்தால் வயிற்று உப்புசம், வாயுப் பிரச்னை போன்றவை ஏற்படலாம். இவை மெதுவாக மாறி, வயிறு இயல்புநிலைக்குத் திரும்ப சில மாதங்கள் ஆகும்.

அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறும்போது கொழுப்புச்சத்துக்கள் குறைவதால், இதயம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளின் தீவிரமும் குறையும்.

சுவையை உணரும் திறன் மாறும். அசைவ உணவுகள் சுவைத்துப் பழகிய நாவுக்கு சைவ உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டிய சூழல் வரும்போது, சுவை உணரும் திறன் அளவு குறைந்துபோகலாம். துத்தநாகம் என்ற தாதுஉப்பு அசைவ உணவுகளில் அதிகமாக இருப்பதால், சுவை அதிகமாக இருக்கும். சைவ உணவுகளில் துத்தநாகம் குறைவாக இருப்பதால், உடல் உறிஞ்சிக்கொள்ளும் திறன் குறைந்துவிடும். எது சாப்பிட்டாலும் சுவை குறைவாக இருப்பது போன்ற உணர்வு தெரியும்.

வைட்டமின் பி12, அசைவ உணவுகளில் அதிகம் கிடைக்கும். சிவப்பு அணுக்கள் உருவாகத் தேவைப்படும் வைட்டமின் இது. இரும்புச்சத்து உடலில் குறைவதால், ரத்தத்தின் அளவும் குறையத் தொடங்கும். வளர்சிதை மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு ரத்தசோகையும் ஏற்படலாம். தோல் வெளிர் நிறமாக மாறிப்போகலாம்.பாதிப்பைத் தவிர்க்க!

பால் மற்றும் பால் பொருட்கள், ஓட்ஸ், கார்ன் ஃபிளேக்ஸ், சோயா போன்றவற்றைச் சாப்பிடலாம்.

பாதாம், வால்நட், நிலக்கடலை போன்ற நட்ஸ் வகைகளை தினமும் ஒரு கப் எடுத்துக்கொள்ளலாம்.

தினை, சாமை போன்றவற்றில் அதிக அளவில் புரதம் இருக்கிறது. எனவே, தினசரி உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சோயா பால், சோயா பீன்ஸ், சோயா பனீர், சோயா டோஸ்ட் ஆகியவை சிறந்தவை.

கீரைகள், பருப்பு, பயறு வகைகள் சாப்பிடும்போது, தயிரோ, மோரோ இதனுடன் சேர்த்துச் சாப்பிடவே கூடாது. ஏனெனில், கால்சியம் சத்து உடலில் இரும்புச்சத்து உருவாகும் வாய்ப்பைக் குறைத்துவிடும்.

நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சைச் சாறு போன்ற டைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தவற்றை உணவுக்குப் பின் சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் இரும்புச்சத்துக்களை கிரகிக்கத் தொடங்கும். உடலில் ஹெச்.பி அளவு குறையாமல் தடுக்கும். சத்துக்கள் குறைபாடின்றி ஆரோக்கியமாக உடலைப் பராமரிக்க முடியும்.


Similar Threads: