Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By chan
  • 1 Post By sumitra
  • 1 Post By gkarti

இருமல், சளியை போக்கும் துளசி, தனியா


Discussions on "இருமல், சளியை போக்கும் துளசி, தனியா" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    இருமல், சளியை போக்கும் துளசி, தனியா

    இருமல், சளியை போக்கும் துளசி, தனியா

    பனிக்காலத்தில் அடிக்கடி இருமல், சளி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதை போக்கும் வகையில் துளசி, தனியா ஆகியவற்றை பயன்படுத்தி குடிநீர் தயாரிப்பது குறித்து நாம் பார்ப்போம். நெஞ்சக சளியை போக்கும் துளசி குடிநீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: துளசி, ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம். ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். இதில், 2 பிடி அளவு துளசி, 2 ஏலக்காய், 5 லவங்கம், பச்சை கற்பூரம் சேர்த்து சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து குடிக்கவும். இந்த குடிநீர் நெஞ்சக சளியை அகற்றுவதோடு இருமலை குணமாக்கும். காய்ச்சல், உடல் வலி சரியாகும். செரிமான கோளாறுகள் சீராகும்.

    துளசி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. துளசியை அடிக்கடி எடுத்துக்கொண்டால் முக வசீகரம் உண்டாகும். ரத்தம் சுத்தமாகும். உடல் ஆரோக்கியம் பெறும். பச்சை கற்பூரம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. ஏலக்காய் வாயு தொல்லையில் இருந்து விடுபட வைக்கும். லவங்கம் சீதள நோய்களை சரிசெய்யும்.


    தனியாவை பயன்படுத்தி வறட்டு இருமலை போக்கும் குடிநீர் தயாரிக்கலாம். தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வறுத்த தனியா பொடி, பனங்கற்கண்டு சேர்த்து சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து பின்னர் குடிக்கலாம்.

    ஒரு டம்ளர் தண்ணீருக்கு கால் ஸ்பூன் தனியா, கால் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்கலாம். இந்த குடிநீரை குடித்தால் வறட்டு இருமல், தொண்டை வலி சரியாகும்.

    உள் உறுப்புகள் பலமாகும். நுரையீரல் கோளாறுகளுக்கு மருந்தாகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட தனியாவுக்கு வயிற்று புண்களை ஆற்றும் தன்மை உண்டு. குளிர்ச்சியை தரக்கூடியது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்க கூடியது.


    வயிற்றுபோக்கை தடுக்கும் பதிமுகத்தை பயன்படுத்தி குடிநீர் தயாரிக்கலாம். கேரளாவில் அதிகம் பயன்படுத்தும் மூலிகை பதிமுகம். ஆரோக்கியமான குடிநீருக்கு பயன்படும் பதிமுகம், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மர செதில்கள் மாதிரி இருக்கும். ஒரு டம்ளர் வென்னீருக்கு சிறிது பதிமுகம் சேர்க்கவும்.

    சுமார் ஒரு மணிநேரம் ஊறவைத்தபின் அது சிவப்பு கலரில் இருக்கும். இந்த குடிநீர் வயிற்றுபோக்கு ஏற்படாமல் தடுக்கும். ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவல்லது. குடிநீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் உடையது. நோய் எதிர்ப்பு சக்தி உடையதாக அமைகிறது. தோல்நோய் வராமல் தடுக்கிறது


    Similar Threads:

    Sponsored Links
    sumitra and gkarti like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: இருமல், சளியை போக்கும் துளசி, தனியா

    Hi Chan, thank you for sharing this useful information!

    chan likes this.

  3. #3
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,144

    Re: இருமல், சளியை போக்கும் துளசி, தனியா

    Noted Lakshmi.. TFS

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter