Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

இஞ்சியின் மகத்துவம் - Benefits of Ginger


Discussions on "இஞ்சியின் மகத்துவம் - Benefits of Ginger" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    இஞ்சியின் மகத்துவம் - Benefits of Ginger

    இஞ்சியின் மகத்துவம்

    இஞ்சி அஞ்சறைப் பெட்டியில் இருக்க வேண்டிய ஒரு அற்புதமான அருமருந்து. இன்றைய எண்ணமுடியாத ஆங்கில மருந்துகள் வெளிவருவதற்கு முன்பே, இஞ்சியை சித்த மருத்துவத்தில், நம் முன்னோர்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தி உள்ளனர்.

    காலையில் தேநீரில் சிறிதளவு இஞ்சிச்சாறும், மதியம் சாப்பாட்டில் மோருடன் ஒரு துண்டு சுக்கைப் பொடித்துச் சேர்த்தும், இரவில் ஒரு டீஸ்பூன் கடுக்காய்த் தூளைப் பாலில் கலந்தும் 48 நாட்கள் தவறாது சாப்பிட்டால், முதுமையை வெல்லலாம் என்கிறது சித்த மருத்துவம்.

    இஞ்சி, நல்லமிளகு, சீரகம்... இந்த மூன்றையும் ஒன்றாக அரைத்து உட்கொண்டால் பித்தம், வாதம், பசியின்மை, அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொல்லை, புளித்த ஏப்பம், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, குளிர் ஜுரம், காய்ச்சல் ஆகியவை நீங்கும். வாரத்திற்கு ஒரு நாள் இஞ்சிச்சாறு அருந்தினால் உடல் அசதி நீங்கும். இஞ்சியைத் தோல் நீக்கி வில்லையாக நறுக்கி, பின்னர் நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி நுரை வற்றியவுடன் இறக்கி ஆற வைத்துத் தலைக்குத் ேதய்த்துக் குளித்தால் உடலுக்கு வலிமை தரும்.

    விழா தினங்களில் இஞ்சியை ஒரு மங்களப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இஞ்சியில் ஒரு கூட்டு வைத்து பந்தியில் பரிமாறினால், அது 108 கூட்டு வைத்துப் பரிமாறியதற்குச் சமம். திருமண வீடுகளிலும், ஏனைய சுப நிகழ்வுகளிலும் இஞ்சிக் கூட்டு, ஒரு இன்றியமையாத இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது.

    அமாவாசை நாட்களில் - குறிப்பாக ஆடி, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை ஆகிய நாட்களில் பந்தியில் இஞ்சி முக்கிய அங்கம் வகிக்கும்.

    குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை இஞ்சிச்சாறு கொடுத்தால், அது ஒரு கிருமி நாசினியாகச் செயல்படும். குளிர்காலங்களில் இஞ்சி, நல்லமிளகு, தனியா, கருப்பட்டி, தும்பை, துளசி, தூதுவளை ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் காபித் தூளையும் கலந்து இஞ்சி காபியாகக் குடித்தால், உடல் அலுப்புக்கும், அசதிக்கும் ஒரு அரிய மருந்தாக அமையும்.


    Similar Threads:

    Sponsored Links
    kkmathy and Amirporkodi like this.

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: இஞ்சியின் மகத்துவம் - Benefits of Ginger

    Very good info, Letchmy.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter