காலையில் பரீட்சை நேரத்தில் பால் வேண்டாமே
பி ளஸ் 2 தேர்வு நேற்று துவங்கியுள்ளது. தேர்வு சமயத்தில், மாணவர்களுக்கான டிப்ஸ் தருகிறார் மருத்துவர் ரேச்சல் ரேபேக்கா பிலிப். இரவு நீண்ட நேரம் கண் விழித்துப் படிப்பதால், உடலின் உஷ்ணம் அதிகரிக்கும்.

கண்களில், இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் விட்டால், உடல் சூடு தணியும். தினமும் தலை, உள்ளங்கைகள், பாதங்களில் சில துளிகள் விளக்கெண்ணெயை தேய்த்துக் குளிக்கலாம். தொடர்ந்து படிக்காமல், ஒரு மணி நேரத்திற்கு, ஒரு முறை சிறிது நேரம், 'பிரேக்' எடுத்துக் கொள்ள வேண்டும். தேர்வுக்கு எவ்வளவு தான் தயாராக இருந்தாலும், ஒருவித பதற்றமும், பயமும் இருப்பதை தவிர்க்க இயலாது. எனவே, காலை அல்லது மாலை குறைந்தது, 10 நிமிடங்களாவது, உடற்பயிற்சியை செய்வது அவசியம். பால் பொருட்கள் அஜீரணத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால், காலையில் பால் குடிப்பதை தவிர்த்து, இரவு நேரத்தில் குடிக்கலாம்.Similar Threads: