இளமையைக் கூட்டும் இளநீர்

* வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அதிக அளவு நீர்ச் சத்து உடலில் குறையும். இதனைச் சமாளிக்க, இளநீர் அருந்தலாம். இளநீரில் உள்ள எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்க உதவும்.

* ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க இளநீர் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.

* இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால், கூடுதல் ரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் இது நல்ல மருந்து.

* பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

* கால்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாது உப்புக்களின் கலவை அதிகமாக இருப்பதால், சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கும்.

* முகத்தில் பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்டால், இளநீரை இரவில் படுக்கும்போது முகத்தில் தடவி, காலையில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால், தோல் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.

* இதில் உள்ள செலினியம் போன்ற ஆன்டிஆக்ஸிடென்ட்கள், புற்றுநோய்த் திசுக்களுக்கு எதிராகவும் செயல்படும்.

* இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு இளமையையும் அள்ளித்தரும் அற்புத காயகல்பம். இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால், முதுமைத் தோற்றத்தை தடுக்கும். காலையில் இளநீர் குடிப்பது மிகவும் நல்லது.

* இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால், உடலில் எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இளநீர் பருகலாம்.

தினமும் ஓர் இளநீர் குடித்துவந்தால்.வாழ்நாள் முழுவதும் தெம்புடனும் உற்சாகத்துடனும் வலம் வரலாம்