Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By chan
  • 2 Post By chan
  • 1 Post By mall.2307

முட்டை... முழுமையான தகவல்கள்!


Discussions on "முட்டை... முழுமையான தகவல்கள்!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    முட்டை... முழுமையான தகவல்கள்!

    முட்டை... முழுமையான தகவல்கள்!


    மலிவான விலையில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒர் உணவு முட்டை. ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், வைட்டமின் ஏ, டி, இ, கே, பி5, பி12, பி2, பி6 மற்றும் கால்சியம் என இதில் இருக்கும் சத்துப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒருவர், சரியான உணவு பட்டியலை தயார் செய்யும்போது, அதில் முட்டையும் இருக்கும் பட்சத்தில் 'டயட் லிஸ்ட்' முழுமை பெறும்.

    1. முட்டையை வாங்கும் முன் சுத்தமாக, வெள்ளையாக உள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும். பழைய முட்டையாக இருந்தால், மைல்டான பழுப்பு நிறத்தில் தெரியும். முட்டையை வாங்கியதும் ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம். ஆனால், 3 வாரத்துக்கு மேல் வைக்கக் கூடாது.

    2. முட்டையை ப்ரிட்ஜில் வைப்பதே நல்லது. அதுவும் முட்டை வைப்பதற்குரிய இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். ஏனெனில், அந்த இடத்தில்தான் முட்டைக்குத் தேவையான தட்பவெப்ப நிலை கிடைக்கும். முட்டை கெடாமலும் பாதுகாக்கும்.

    3. முட்டையைக் கையில் எடுக்கும் போது அதிகக் கவனம் தேவை. கை நழுவி கீழே விழுந்தால் அதில் இருக்கும் நுண்கிருமிகளும், துர்நாற்றமும் வீட்டின் சூழலையே மாற்றிவிடும். கை, நகங்களில் பட்டால் கூடப் பரவத் தொடங்கும்.

    4. ஒரு பவுலில் முட்டையின் அளவை விட இரண்டு மடங்கு தண்ணீரை நிரப்பி அதில் முட்டைகளைப் போடுங்கள். ஃப்ரெஷ்ஷான முட்டை எனில் நீரில் ப்ளாட்டாகச் சாய்ந்து இருக்கும். பழைய முட்டையாக இருந்தால் முட்டையின் கூர்மையான நுனி பகுதி பாத்திரத்தில் பட்டு நிற்கும் நிலையில் காணப்படும். எந்த முட்டையாவது மிதந்தால் அதைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

    5. ஒரு முட்டையைக் கையில் எடுத்து காது அருகில் வையுங்கள். மென்மையாக அதனை 'ஷேக்' பண்ணுங்கள். பிறகு, 10 நொடிகள் காது அருகிலே முட்டையை வைத்திருங்கள். சத்தம் எதுவுமே வரவில்லை எனில் அது நல்ல முட்டை. எதாவது சின்னச் சத்தம் வந்தால் அவற்றைச் சமைக்காமல் விட்டுவிடுவது நல்லது.

    6. முட்டையைத் தோசை தவாவில் உடைத்து ஊற்றும் போது மஞ்சள் கரு சிறிது மேலெழும்பி இருந்தால் அது ப்ரெஷ். அதே மஞ்சள் கரு கொஞ்சம் தளர்வாகக் கீழே அமுங்கி இருந்தால் அது கொஞ்சம் பழைய முட்டை எனக் கண்டுபிடித்து விடலாம்.

    7. முட்டையில் சால்மோநெல்லா (Salmonella) என்ற கிருமியும், மற்ற கிருமிகளும் இருக்கும் என்பதால் பச்சையாகச் சாப்பிடவே கூடாது. சமைக்கப்பட்ட முட்டையைச் சாப்பிடுவதே நல்லது.

    8. சமைக்கப்பட்ட முட்டையை 2 மணி நேரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும். முட்டையை எந்த முறையில் வேண்டுமானாலும் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால், மிகச் சிறந்த தேர்வாக இருப்பது வேக வைக்கப்பட்ட முட்டையே.

    9. குளிர்ச்சித் தன்மை இல்லாத சூழலில் முட்டையைப் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்தால் வாங்கிய 3 நாட்களுக்குள் சமைத்து விட வேண்டும். மூன்று நாட்களுக்கு மேல் வெளியில் வைத்திருக்கும் முட்டையைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.




    Sponsored Links
    Last edited by chan; 1st Apr 2016 at 04:03 PM.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: முட்டை... முழுமையான தகவல்கள்!

    முட்டை கெட்டுவிட்டதா? இல்லையா? என கண்டுபிடிக்கும் வழிமுறைகள் !!!


    காய்கறி, இறைச்சி போன்றவற்றை அதன் வெளித் தோற்றம் மற்றும் வாசனையை வைத்தே அது கெட்டுவிட்டதா, இல்லையா என அறிந்துக் கொள்ளலாம். ஆனால், முட்டையை அவ்வாறுக் கண்டறிவது மிகவும் கடினம். முட்டை கெட்டப் போனாலும், நன்றாக இருந்தாலும் வெளிப்புற வெள்ளை ஓட்டில் எந்த விதமான மாறுபாடும் தெரியாது. வாசனையும் பெரிதாக வராது. ஆனால், சில வழிமுறைகளை வைத்து நீங்கள் வாங்கின முட்டை கெட்டுவிட்டதா? இல்லையா என கண்டரிந்துக் கொள்ளலாம்...
    மிதக்கும்

    ஒரு முட்டையை அதை விட இரண்டு மடங்கு அதிகமான தண்ணீர் நிறைத்த பாத்திரத்தில் போடவும். முட்டை பாத்திரத்தின் அடி பாகத்திற்கு சென்றாலோ அல்லது பாத்திரத்தின் பக்கவாட்டு பகுதியை ஒட்டி இருந்தாலோ அந்த முட்டை நன்றாக தான் இருக்கிறது என்று அர்த்தம். ஒருவேளை, அந்த முட்டை தண்ணீரில் மிதந்தவாறு இருந்தால் அந்த முட்டை கெட்டுவிட்டது என்று அர்த்தம்.


    வெள்ளை நிறம்

    முட்டை நன்றாக தான் இருக்கிறதா என அறிவதற்கான மற்றொரு முறை, ஒருவேளை நீங்கள் முட்டையை உடைத்து பயன்படுத்துவதாக இருந்தால். வெள்ளை கருவின் நிறத்தை வைத்துத் அது நன்றாக இருக்கிறதா என தெரிந்துக் கொள்ளலாம். தெளிவான வெள்ளை நிறமாக இருந்தால் முட்டை நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அதன் நிறத்தில் ஏதேனும் வேறுபாடு தெரிந்தாலோ அல்லது நிறம் மங்கி இருந்தாலோ முட்டை கெட்டுவிட்டது என்று அர்த்தம்.



    சலசலவென்ற சத்தம் - ச்லோஷிங்
    முட்டையை உங்களது காதருகே வைத்து ஆட்டிப்பார்த்தல், ஒரு விதமான சலசலவென்ற சத்தம் வரும் (பாட்டிலில் பாதி தண்ணீர் நிறைத்து மேலும், கீழும் ஆட்டினால் வரும் சத்தம் போல) இவ்வாறு சத்தம் வந்தால், அந்த முட்டை முற்றிலுமாக கெட்டுவிட்டது என்று அர்த்தம்.



    கலங்கிய நிலையில் மஞ்சள் கரு முட்டையை உடைத்துப் பார்க்கும் போது, மஞ்சள் கரு வட்டமாக இல்லாமல் சிதறியோ அல்லது கலங்கிய நிலையில் இருந்தால் முட்டை கெட்டுவிட்டது என்று அர்த்தம்.



    கருத்து எனவே, மேற்கூறிய முறைகளை வைத்து, நீங்கள் பயன்படுத்தும் முட்டை நல்ல நிலையில் உள்ளதா அல்ல கெட்டுப் போய்விட்டதா என எளிதாக கண்டறிந்து பயன்படுத்தலாம். இது, உங்கள் உடல் நலத்திற்கும் நல்லது.




    Parasakthi and gkarti like this.

  3. #3
    mall.2307's Avatar
    mall.2307 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    WORLD
    Posts
    135

    Re: முட்டை... முழுமையான தகவல்கள்!

    Thanks for the information

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter