கல்லீரல் பிரச்னையைத் தவிர்க்கும் வால்நட்

இதில், ஒமேகா 3 நிறைந்துள்ளதால், ஆன்டி-இன்ஃப்ளமேட்டரியாகச் செயல்படும். ஆஸ்துமா, ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், எக்ஸிமா, சொரியாசிஸ் பிரச்னைகளைக் கட்டுப்படுத்த உதவும்.

ஒமேகா 3 உள்ளதால், மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இதில், லடோனின் இருப்பதால் ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

`எல் ஆர்ஜினைன்’ என்ற கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளதால், ரத்தக் குழாய்களின் விரிவடையும் தன்மையை மேம்படும்.

ஏ.எல்.ஏ (Alpha-Linolenic acid) நிறைந்துள்ளதால், திடீர் இதயத் துடிப்பு முடக்கம் எனப்படும் சடர்ன் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படாமல் காக்கும்.

மலமிளக்கியாகச் செயல்பட்டு, மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

பாலிஃபீனல் நிறைவாக உள்ளதால், கல்லீரல் பிரச்னையைத் தவிர்க்கும்.

மார்பகம் மற்றும் பிராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.

தினமும், 75 கிராம் சாப்பிட்டுவர, விந்து கெட்டிப்படும். உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


Similar Threads: