Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 3 Post By chan
  • 1 Post By gkarti

கோடைக்கு ஏற்ற கீரைகள்!


Discussions on "கோடைக்கு ஏற்ற கீரைகள்!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கோடைக்கு ஏற்ற கீரைகள்!

    கோடைக்கு ஏற்ற கீரைகள்!


    வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. ஆகவே, நாம் உண்ணும் உணவுகள் வெயிலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கும் விதமாக பார்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக, அன்றாடம் நாம் உணவுகளில் கீரைகளை சேர்த்துக்கொண்டாலே போதும். பசலைக்கீரையை பருப்புடன் சேர்த்தோ தனியாகவோ கடைந்து சாப்பிட்டு வந்தால்... நீர் எரிச்சல், நீர்க்கட்டு, உடல்சூடு போன்றவை சரியாகும். அதுமட்டுமல்லாமல், வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் கோளாறை பசலைக்கீரை சரிசெய்வதோடு சொறி, சிரங்கையும் குணப்படுத்தும்.

    வெந்தயக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தால், நீர் எரிச்சல் குணமாகும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யும்.

    மணத்தக்காளிக்கீரையை வாரம் 2 நாள் வீதம் பருப்புடன் சேர்த்து கடைந்தோ, தனியாகவோ அல்லது சூப், ஜூஸ் ஆகவோ சாப்பிட்டு வந்தால் வயிற்று நோய்கள். வாய்வுக்கோளாறு, குடல்புண், மூத்திர எரிச்சல் போன்றவை சரியாகும். முன்கூட்டியே சாப்பிட்டால், மேற்சொன்ன கோளாறுகள் வருவதில் இருந்து காத்துக்கொள்ள முடியும்.

    இதேபோல் பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் தணியும். அத்துடன், கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல் போன்ற கண் சம்பந்தமான பிரச்னைகளும் சரியாகும்.

    சிறுகீரையை பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்… பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும்.



    Sponsored Links
    kkmathy, lincy and gkarti like this.

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,116

    Re: கோடைக்கு ஏற்ற கீரைகள்!

    Same here Lakshmi.. Twice a Week Vachudraanga.. Thanks for Sharing

    chan likes this.

  3. #3
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: கோடைக்கு ஏற்ற கீரைகள்!

    Good info, Letchmy.


  4. #4
    lincy's Avatar
    lincy is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Nagercoil
    Posts
    2,766

    Re: கோடைக்கு ஏற்ற கீரைகள்!

    Good Sharing...



    With Love,
    Lincy

    நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. - Martin Luther King Jr


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter