Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 2 Post By chan
  • 1 Post By chan
  • 1 Post By chan
  • 1 Post By chan
  • 1 Post By chan
  • 1 Post By ahilanlaks

ஆப்ரிகாட் - Health Benefits of Apricot


Discussions on "ஆப்ரிகாட் - Health Benefits of Apricot" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    ஆப்ரிகாட் - Health Benefits of Apricot

    அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்



    நாம் உட்கொள்ளும் பழங்கள் அனைத்து நாட்களிலும் கிடைக்கக்கூடியதாகவும், மிகவும் குளிர்ச்சியினால் சளித்தொல்லை மற்றும் மலச்சிக்கலை தவிர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் அனைத்து தரப்பினரும் உட்கொள்ளும் வண்ணம் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அன்றாட உணவில் ஏதேனும் ஒரு வகையில் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. அதேபோல் நாகரீகத்தில் பாரம்பரியமிக்க நாமும் பழங்களை அடிக்கடி உட்கொள்வது அவசியம்.

    அதிக சத்து நிறைந்த, அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் (Apricot Fruits – தமிழில் சர்க்கரை பாதாமி என்று அறியப்படுகிறது), பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன.

    இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிறபழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.

    பூர்விகம்
    இந்த பழங்கள் ஆரம்பத்தில் ஐரோப்பாவிற்கு ஆர்மேனியாவிலிருந்து கிரேக்கர்களால் கொண்டு வரப்பட்டது. கிரேக்கர்கள் அப்போது சுரியனின் தங்க முட்டைகள் என்று அழைத்துனர். இது ஆர்மேனியாவிலிருந்து வந்ததால் இதன் தாவரவியல் பெயர் புருனஸ் ஆர்மெனைக்கா என்றாகியது. எனிதும் இதன் தாயகம் சீனாவாகும்.

    இவைகள் தற்போது துருக்கி, ஈரான், இத்தாலி, பிரான்ஸ், ஸபெயின், ரஷ்யா, கிரீஸ், அமெரிக்கா மற்றும் சீனாவில் அதிகமாக உற்பக்தியாகுகின்றன.

    Energy 48 Kcal
    Carbohydrates 11 gms
    Dietary fiber 2 gms
    Fats 0.4 gms
    Protein 1.4 gms
    Vitamin A 96 ug
    Beta Carotene 1094 ug
    Lutein Zeaxanthin 89 ug
    Vitamin B1 0.03 mg
    Vitamin B2 0.04 mg
    Vitamin B3 0.6 mg
    Folate 9 ug
    Vitamin B5 0.24 mg
    Vitamin B6 0.054 mg
    Vitamin C 10 mg
    Vitamin E 0.89 mg
    Vitamin K 3.3 ug
    Calcium 13 mg
    Magnesium 10 mg
    Iron 0.4 mg
    Phosphorus 23 mg
    Potassium 259mg
    Sodium 1 mg
    Manganese 0.077 mg
    Zinc 0.2 mg

    தோல் நோய்களை நீக்கும்:

    இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப் பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்தவல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஏ என்னும் சத்து அதிகமாக உள்ளது. எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். மேலும் இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது.

    நரம்புகளை வலுப்படுத்தும்:


    பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல், என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது.

    நோய் எதிர்ப்பு சக்தி:
    மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சில வகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசித்துக் கொள்ளலாம்.
    பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும், தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    கண்பார்வை தெளிவாகும்:
    வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப்படுத்துகிறது. தினமும் 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும், கட்டுப்படுத்தப்படும்.
    மலை வாழைப்பழம் 1, ஆப்ரிகாட் 4 ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தயிர் அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் படுக்கும் பொழுது சாப்பிட்டு வர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.




    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 27th Apr 2016 at 01:38 PM.
    girija chandru and ahilanlaks like this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: ஆப்ரிகாட் - Health Benefits of Apricot

    பல நோய்களுக்கு மருந்தாகும் ஆப்ரிகாட் பழங்கள் - அறிவோம்!


    அதிக சத்து நிறைந்த, அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் (Apricot Fruits -தமிழில் சர்க்கரை பாதாமி என்று அறியப்படுகிறது), பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன.


    FILE

    இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிறபழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.

    பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.

    தோல் நோய்களை நீக்கும்:இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப் பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்தவல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

    Last edited by chan; 27th Apr 2016 at 01:41 PM.
    ahilanlaks likes this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: ஆப்ரிகாட் - Health Benefits of Apricot

    ஆப்ரிகாட் - உலர்பழம்



    பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது. தோல்நோய்களை நீக்கும் இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.

    வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. நரம்புகளை வலுப்படுத்தும் பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சிலவகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம்.

    பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும் தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கண்பார்வை தெளிவாகும் வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப் படுத்துகிறது. தினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும் கட்டுப்படுத்தப்படும். மலைவாழைப்பழம்-1, ஆப்ரிகாட்-4 ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தயிர்-அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரவில் படுக்கும்பொழுது சாப்பிட்டுவர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.

    ஆப்ரிகாட் பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை எவ்வகையிலும் பாதிக்காமல், அதன் நீர்ச்சத்துக்களை மட்டும் ஆவியாக்கி உலர வைப்பதால் கிடைப்பது தான் உலர் ஆப்ரிகாட் பழங்கள். இப்பழங்களின் ஊட்டச்சத்துக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாததினால், மேலும் பலவித நன்மைகளை உலர் ஆப்ரிகாட்களிலிருந்து நீங்கள் பெறலாம். இப்பழங்களில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

    ஒரு கப் உலர் ஆப்ரிகாட்டில் சுமார் 158 மைக்ரோகிராம் அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது. இந்த உலர் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடல்லாமல், பலவகையான நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தியையும் உடலுக்கு வழங்க வல்லவை.

    இயற்கையின் அருங்கொடையான இந்த பழத்தைப் பற்றிய 12 சிறந்த நற்பயன்களைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.

    இரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான செம்பும் இதில் நிறைந்துள்ளது. தினசரி உணவில் உலர்ந்த ஆப்ரிகாட்களை சேர்த்துக் கொள்வது, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கினால் அவதிப்படும் பெண்களுக்கு நன்மை பயக்கக்கூடியதான இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் நல்லது.

    உலர் ஆப்ரிகாட்கள் பொட்டாசியத்தின் மிகச்சிறந்த மூலாதாரமாக விளங்குகின்றன. தாதுப்பொருளான பொட்டாசியம், திரவ சமநிலையை சீராக்கக்கூடிய எலக்ட்ரோலைட்டாகத் திகழ்வதோடு, தசை செயல்பாடு மற்றும் இதயத்துடிப்பை ஒழுங்காக்குவதற்கும் உதவுகிறது.

    உலர் ஆப்ரிகாட்கள் கூர்மையான கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ போன்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆன வைட்டமின் ஏ சத்து, கட்டற்ற மூலக்கூறுகளை அகற்றுவதோடு, உயிரணுக்கள் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்தை பேணி காப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. கட்டற்ற மூலக்கூறுகளின் அழிவு, மனித கண் விழியாடியை பாதித்து, கண்புரை நோய்கள் அல்லது வேறு ஏதேனும் வகையில் கண்களுக்கு பாதிப்பு உண்டாக்கும். உலர் ஆப்ரிகாட் உட்கொள்வது கண்புரை நோய் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறை கணிசமாகக் குறைக்கும்.

    காசநோய், ஆஸ்துமா மற்றும் மார்புச்சளி உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளை நிவர்த்திக்கக்கூடிய ஆற்றல், உலர் ஆப்ரிகாட்களின் ஆரோக்கிய நற்பலன்களுள் ஒன்றாகும்.


    பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை.

    இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

    பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது.

    ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஏ என்னும் சத்து அதிகமாக உள்ளது. எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். மேலும் இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது.

    அதாவது இதனை சாப்பிட்டால், சருமத்தை பாதுக்காக்கும் வகையில் ஒரு படலத்தை உருவாக்கும். ஆகவே 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்துக் கொண்டு, அதில் சிறிது தயிர் ஊற்றி, கலந்து, பின் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் இதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்தும் தடவலாம்.


    ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம். 10 நிமிடம் வெந்தால் போதுமானது.

    பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும் தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும்.


    Last edited by chan; 27th Apr 2016 at 01:46 PM.
    ahilanlaks likes this.

  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: ஆப்ரிகாட் - Health Benefits of Apricot

    ஒரு பழம்... ஓஹோன்னு வாழ்க்கை!



    சிறு வயதிலேயே தோன்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பா
    ர்வைகுறைபாடு,தோல் நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தியின்மை, ரத்தசோகை, பெண்களுக்கு மாத விலக்கு கோளாறுகள், மகப் பேறின்மை போன்ற பல நோய் களும் எதிர்கால குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடுகின்றன. குழந்தைப்பருவத்திலேயே

    ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் தோன்றிவிடுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறுவகையான பழங்களையும், காய்கறிகளையும் உண்டுவந்த நமது பாரம்பரியமானது துரித உணவினாலும், சமைத்த உணவினாலும் நிலை தடுமாறி, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள இயலாமல், சத்து மாத்திரைகளையும் சத்து டானிக்குகளையும் சிறுவயது முதலே எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

    பிறந்த குழந்தைகள் கூட தாய்ப்பாலை குடிக்கும் முன்பே சொட்டு மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கிவிடுகின்றன. புராணங்களிலும், வேதங்களிலும் பல்வேறு வகையானபழங்களையும் அவற்றின் பயன்களையும் நாம் புரிந்துகொள்ளும் வண்ணம் கதைகளாக சொல்லியுள்ளனர். மாம்பழம், நெல்லி, ஆப்பிள், நாவல் போன்ற பல பழங்களும், பல்வேறு வகையான சத்துக்களை உள்ளடக்கியுள்ளன.


    நாம் உட்கொள்ளும் பழங்கள் அனைத்து நாட்களிலும் கிடைக்கக்கூடியதாகவும், மிகவும் குளிர்ச்சியினால் சளித்தொல்லை மற்றும் மலச்சிக்கலை தவிர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் அனைத்து தரப்பினரும் உட்கொள்ளும் வண்ணம் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

    சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அன்றாட உணவில் ஏதேனும் ஒரு வகையில் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. அதேபோல் நாகரீகத்தில் பாரம்பரியமிக்க நாமும் பழங்களை அடிக்கடி உட்கொள்வது அவசியம். பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கி, தோலுக்கு நல்ல நிறத்தையும், மினுமினுப்பையும் தருவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கண் பார்வையை தெளிவாக்கி, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுத்து, இதயத்தை காக்கும் அற்புத பழம் ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சு.


    புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப்படுத்துகிறது. இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் ரத்த உற்பத்தியை அதிகரிக்கின்றன.

    வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது.

    தினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும் கட்டுப்படுத்தப்படும். மலைவாழைப்பழம்-1, ஆப்ரிகாட்-4 ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தயிர்-அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரவில் படுக்கும்பொழுது சாப்பிட்டுவர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.



    -டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை, 98421 67567.


    Last edited by chan; 27th Apr 2016 at 01:58 PM.
    ahilanlaks likes this.

  5. #5
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: ஆப்ரிகாட் - Health Benefits of Apricot

    பார்வை கூர்மைக்கு அப்ரிகாட்


    சூரியனின் தங்க முட்டை என்று கிரேக்க மொழியில் அழைக்கப்படும் ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் நிறைந்த பழம் அப்ரிகாட். பழத்துக்கு எந்த பாதிப்பும் இன்றி நீர்ச்சத்து மட்டும் வெளியேற்றப்படுகிறது.

    சத்துக்கள் பலன்கள்: கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட சத்துக்கள் இதில் நிறைவாக உள்ளன. இதில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால், ரத்த அணுக்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இது ரத்த சோகையை வராமல் தடுக்கும். ரத்த சோகை வந்தவர்களுக்கு அருமருந்தாகவும் அப்ரிகாட் இருக்கிறது. எனவே, பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்வது பெரிதும் பயனளிக்கும். குடலில் தேவையற்ற பொருட்கள் தங்குவதை வெளியேற்றி செரிமான மண்டலத்தைத் தூய்மைப்படுத்துகிறது.

    காய்ச்சல், தீராத தாகம் உள்ளவர்களுக்கு இந்தப் பழத்தை தண்ணீரில் கலந்து சிறிது தேன் கலந்து கொடுத்தல் நல்ல பலன் கிடைக்கும்.

    அப்ரிகாட் பழத்தை சருமத்தில் வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம். சூரிய கதிர்வீச்சல் சருமம் பாதிக்கப்படுவதில் இருந்து இது பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு சருமப் பிரச்னைகளில் இருந்து தீர்வு அளிக்கிறது. இதில் அதிக அளவில் வைட்டமின் ஏ உள்ளதால், நல்ல கூர்மையான பார்வைக்கு உதவியாக இருக்கிறது. மேலும், மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்டாக செயல்பட்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். மேலும் இந்தப் பழத்தைச் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இதய நோய்களுக்கான வாய்ப்பு குறைகிறது. கெட்ட கொழுப்பு அளவு குறைகிறது. சில வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் இந்த பழம் செயல்படுகிறது.


    தேவை: சாப்பிடுவதற்கு முன்பு 3 உலர் அப்ரிகாட் பழத்தைச் சாப்பிடுவது செரிமான மண்டலத்தைத் தூண்டி உணவு நன்கு செரிமானம் ஆக உதவுகிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பக்காலத்தில் இனிப்பு உள்ளிட்டவற்றைச் சாப்பிடுவதற்குப் பதில், உலர் அப்ரிகாட் சாப்பிடுவது நல்ல சிற்றுண்டியாக இருக்கும்.

    Last edited by chan; 27th Apr 2016 at 02:07 PM.
    ahilanlaks likes this.

  6. #6
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: ஆப்ரிகாட் - Health Benefits of Apricot

    Thanks a lot for the detailed info useful share ji

    chan likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter