Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

இளைக்க ஆசையா... இதையெல்லாம் சாப்பிடுங்க!


Discussions on "இளைக்க ஆசையா... இதையெல்லாம் சாப்பிடுங்க!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    இளைக்க ஆசையா... இதையெல்லாம் சாப்பிடுங்க!

    இளைக்க ஆசையா... இதையெல்லாம் சாப்பிடுங்க!


    ‘‘எடையைக் குறைக்க... `அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக் கூடாது' என்றுதான் பரிந்துரைக்க வேண்டும் என்பதில்லை. இங்கே நான் சொல்லப்போவது, எடையைக் குறைக்க சாப்பிட வேண்டிய காய்கறிகள் மற்றும் பழங்கள் பற்றி!’’ என்று, வெயிட் லாஸுக்கு விரும்பத்தக்க வழி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் தாரணி.
    அன்னாசிப்பழம்
    ரத்த சுத்திகரிப்புக்கும், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதற்கும், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதற்கும் சிறந்த மருந்து... அன்னாசிப்பழம். அதனால் உடலில் கொழுப்புகள் சேராமல் தடுத்து ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும்.

    கேரட்

    பீட்டா கெரொட்டீன் சத்து அதிகளவு உள்ள, குறைந்த அளவு கலோரி கொண்ட கேரட்டை தினமும் ஒன்று பச்சையாக சாப்பிட்டு வந்தால்... உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ளலாம்; ஆரோக்கியமும் கிடைக்கும்.

    கீரைகள்

    கீரையில் இன்சால்யபிள் ஃபைபர் உள்ளது. குறைந்த அளவு எடுத்துக் கொண்டாலே பசி உணர்வை அடக்கிவிடும். இதனால் தேவைக்கு அதிகமாக உண்பதைத் தவிர்க்கலாம். தினமும் ஏதாவது ஒரு கீரை சாப்பிட்டு வந்தால்... நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்றவற்றைப் பெறலாம்.

    வாழைத்தண்டு

    வாழைத்தண்டில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன. ஆனால், அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது உடலை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும். இதை அப்படியே வேகவைத்து தயிர்பச்சடி செய்து சாப்பிடலாம்.

    தண்ணீர்க் காய்கள்

    பூசணிக்காய், சுரைக்காய், சௌசௌ போன்ற காய்களில் சால்யபிள் ஃபைபர் அதிகம் உள்ளது. இது உடலில் கொழுப்புகளாக அல்லாமல் நீர்ச்சத்தாகச் சேர்ந்து ஆரோக்கியம் தரும். மேலும் தேவையில்லா கொழுப்புகள் உடலில் சேராமல் தடுத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். இந்தக் காய்களை சிறிது பருப்பு சேர்த்து கூட்டாக செய்து சாப்பிடலாம்.

    மாதுளை

    தினமும் வெறும் வயிற்றில் மாது ளையை சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, தேவையில்லாத கொழுப்புகள் நீக்கப்படும்.

    கொய்யா

    கொய்யாப்பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டு வர... ஜீரணத்தன்மை அதிகரிக்கும். இதனால் உடலில் கொழுப்பு தங்காமல்... ஃபிட்டாக இருக்கலாம்.

    பப்பாளி

    பப்பாளியில் உள்ள இன்சால்யபிள் ஃபைபர், பசி உணர்வு அடிக்கடி ஏற்படா மல் தடுக்க உதவும். காலை உணவுடன் பப்பாளி பழம் சாப்பிட்டால்... தேநீர், ஸ்நாக்ஸ் என்று மனம் தேடாது. வெயிட் நம் கன்ட்ரோலில் இருக்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 7th Jun 2016 at 08:28 PM.
    honey rose likes this.

  2. #2
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    8,988

    Re: இளைக்க ஆசையா... இதையெல்லாம் சாப்பிடுங்க!

    thanks for the sharing sis


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter