Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

அகத்திக்கீரையின் நன்மைகள்


Discussions on "அகத்திக்கீரையின் நன்மைகள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    அகத்திக்கீரையின் நன்மைகள்

    உடலுக்கு குளிர்ச்சி தரும் அகத்திக்கீரை



    அகத்தி கீரையை பயன்படுத்தி உடல் வெப்பத்தை குறைக்கும் உணவு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அகத்தி கீரை, சின்ன வெங்காயம், வர மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கலந்த பசை, மஞ்சள் பொடி, அரிசி ஊறவைத்த தண்ணீர், சமையல் எண்ணெய், உப்பு.ஒரு பாத்திரத்தில் அரிசி நீரை ஊற்றவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது மஞ்சள் பொடி, அகத்தி கீரை சேர்க்கவும். கொதித்தபின் சமையல் எண்ணெய்யை ஊற்றவும். இதனுடன் வெங்காயம் மற்றும் சீரகம் சேர்ந்த பசை உப்பு சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய்யுடன், சின்ன வெங்காயம், கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து, அகத்தி ரசத்தை தாளிக்கவும். இதை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். அகத்தி கீரை உடலுக்கு நன்மை தரக்கூடியது. இதை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடையும். ஈரல் பலம் பெறும். உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெள்ளரி சாலட் தயாரிக்கலாம். வெள்ளரி பிஞ்சுடன் சுவைக்காக சிறிது உப்பு, புளிப்பில்லாத தயிர் சேர்த்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி அடையும். இதுபோன்ற உணவுகளை சாப்பிடும்போது கோடைகால நோய்கள் நம்மை தாக்காது.


    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails அகத்திக்கீரையின் நன்மைகள்-img_1276.jpg  
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter