Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

உடல் உஷ்ணத்திற்கு மணத்தக்காளி


Discussions on "உடல் உஷ்ணத்திற்கு மணத்தக்காளி" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    உடல் உஷ்ணத்திற்கு மணத்தக்காளி

    உடல் உஷ்ணத்திற்கு மணத்தக்காளி



    உடல் உஷ்ணம் அதிகமானால் வாய் புண், கண் எரிச்சல், தூக்கமின்மை ஏற்படும். இப்பிரச்னைகளை தடுக்க மணத்தக்காளி சூப் தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு, மஞ்சள் பொடி, சமையல் எண்ணெய், உப்பு. அரிசியை ஊறவைத்து அதன் தண்ணீரை மட்டும் எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய் விடவும்.

    எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, வரமிளகாய், சின்னவெங்காயம் போடவும். மணத்தக்காளி கீரை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், அரிசி நீரை விட்டு கொதிக்க வைக்கவும். சிறிது மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கலந்த பசையை சேர்க்கவும். இந்த சூப்பை குடித்துவர தலைவலி, கண் எரிச்சல், பித்தம் போன்றவை சரியாகும். மணத்தக்காளி உஷ்ணத்தை குறைக்கிறது.கோடைகாலத்தில் ஏற்படும் உஷ்ணத்தால் உடலின் வெப்பம் கூடுகிறது.

    இதனால் கல்லீரல் செயல்பாடுகள் அதிகரிக்கும். பித்தம் அதிகம் உற்பத்தியாவதால் கோடைகாலத்தில் மஞ்சள் காமாலை வர அதிக வாய்ப்புள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும் கிர்ணி பழம் ஜூஸ் தயாரிக்கலாம். கிர்ணி பழம் இந்த சீசனில் எளிதாக கிடைக்கும். கிர்ணி பழத்துடன் குளிர்ந்த பால், சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழம் கிர்ணி. இதை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் குறையும்.


    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails உடல் உஷ்ணத்திற்கு மணத்தக்காளி-mana-fea.jpg  
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter