Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3Likes
 • 2 Post By sumathisrini
 • 1 Post By sudhar

ஆரோக்கியம் தரும் பீன்ஸ்


Discussions on "ஆரோக்கியம் தரும் பீன்ஸ்" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #1
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,585

  ஆரோக்கியம் தரும் பீன்ஸ்

  ஆரோக்கியம் தரும் பீன்ஸ்-beans.jpg

  மனிதர்களுக்குத் தேவையான அனைத்து உயிர்ச் சத்துக்களும் கீரை, காய், கனி, விதை இவற்றில் உள்ளன. இதில் மனிதன் தினமும் உணவுக்காக அதிகம் உபயோகிப்பது காய்களையே..
  வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும். இதனாலே நம் முன்னோர்களும், அவதாரப் புருஷர்களும் சைவ உணவை வலியுறுத்தி வந்தனர்.


  அத்தகைய காய்களில் பீன்ஸ் வகையும் ஒன்று. இது அவரை இனத்தைச் சேர்ந்தது. பீன்ஸை இங்கிலீஷ் காய் என்பர். காரணம் ஆங்கிலேயர்கள் தங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும் காய்களில் இதுவும் ஒன்று.


  பீன்ஸ் குச்சி போல் நீண்டு சற்று பருத்து காணப்படும். பயறு வகை காய்களைப் போல் விதைகள் உள்ளிருக்கும்.


  பச்சையாக பறித்த பீன்ஸில் கலோரி அளவு குறைவாக உள்ளது. இது எளிதில் சீரணமாகக்கூடியது. வைட்டமின், தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது


  100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோயைக் குணப்படுத்தும் தன்மை பீன்ஸ்க்கு உண்டு என்று அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


  இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது.


  இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையச் செய்கிறது. அதுபோல் ப்ளேவனாய்டு பாலிபினோலிக்

  ஆண்டி ஆக்ஸிடென்ட், லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.


  பீன்ஸில் வேதிப் பொருள் நிறைந்திருப்பதால் இது சருமத்தையும், கண்களையும், புறஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து தடுக்கிறது.


  இதிலுள்ள ஞூணிடூச்tஞுண், வைட்டமின் பி 12 உடன் இணைந்து கருவுற்ற பெண்களுக்கு கருவில் குழந்தை நன்கு வளரவும், நரம்பு பாதிப்புகள் ஏதும் பாதிக்காதவண்ணமும் தடுக்கிறது.


  பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.


  பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. மக்னீசியம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்குகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.


  பீன்ஸில் உள்ள இசோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாது உடலுக்கு வலுவைக் கொடுக்கும் தன்மை கொண்டது.


  பீன்ஸை சிறிதாக நறுக்கி நீரில் கொதிக்கவைத்து, அந்த நீரை அருந்தி வந்தால் வாய்ப்புண் வயிற்றுப்புண் குடல்புண் ஆறும்.


  பீன்ஸை பொரியலாகச் செய்து சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.


  மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.


  பீன்ஸ் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இரத்தக் குழாய் அடைப்புகளைப் போக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. இதய அடைப்பு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

  மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, அதிக உடல் எடையைப் போக்குகிறது.


  பீன்ஸை கொதிக்கவைத்து ஆறிய நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.


  பீன்ஸ் சருமத்தைப் பாதுகாக்கும். வியர்வையைத் தூண்டும்.


  தொண்டைப்புண், வறட்டு இருமல், நாவறட்சி இவற்றைப் போக்கும்.


  கை, கால் நடுக்கத்தைப் போக்கும்.


  நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும்.


  பல் வலியைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து, வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றத்தை சீராக வைத்திருக்கும்.


  நீண்ட நாள் ஆறாத புண்களின் மீது, பீன்ஸ் வேகவைத்த நீரை ஆறவைத்து புண்களைக் கழுவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.


  பீன்ஸை பொரியல், அவியல், சாம்பார் என பலவாறு சமைத்து உண்ணலாம்.

  பீன்ஸைப் பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியம் பெறுவோம்.

  Similar Threads:

  Sponsored Links
  Parasakthi and sudhar like this.

 2. #2
  Parasakthi's Avatar
  Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
  Real Name
  Parasakthi KS
  Gender
  Female
  Join Date
  May 2010
  Location
  Coimbatore
  Posts
  21,954
  Blog Entries
  94

  Re: ஆரோக்கியம் தரும் பீன்ஸ்

  பீன்ஸ் la ivlo benefits iruka,,,,, Thanks for this info sumi ka


 3. #3
  sudhar's Avatar
  sudhar is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Apr 2011
  Location
  chennai
  Posts
  2,044

  Re: ஆரோக்கியம் தரும் பீன்ஸ்

  sumathi sis....
  now 1ly I came 2 know these much information......abt beans....
  very nice...information....

  Last edited by sudhar; 20th Dec 2011 at 12:33 PM.
  sumathisrini likes this.
  In reality there is only Now. If you know how to handle this moment you know how to handle the whole eternity-Jaggi vasudev .

  regards
  Sudha.R

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter