Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

வெள்ளை முட்டை... பிரவுன் முட்டை எது பெஸ்ட்?


Discussions on "வெள்ளை முட்டை... பிரவுன் முட்டை எது பெஸ்ட்?" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,554

    வெள்ளை முட்டை... பிரவுன் முட்டை எது பெஸ்ட்?

    வெள்ளை முட்டை... பிரவுன் முட்டை எது பெஸ்ட்?



    கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது நம் தாத்தா காலத்துக் குழப்பம்... இது ஒருபுறம் இருக்க சூப்பர் மார்க்கெட்டில் வெள்ளை நிற முட்டைகளை ஒரு டிரேவிலும், பிரவுன் நிற முட்டைகளை இன்னொரு டிரேவிலும் வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். காலங்காலமாய் வெள்ளை முட்டைகளைச் சாப்பிட்டு பழகிய நமக்கு, பிரவுன் முட்டைகள் கோழி முட்டைகள்தானா என்றோர் சந்தேகம் வரும். சிலர் "பிரவுன் முட்டைகள்தான் விலை அதிகம். எனவே, அதில்தான் சத்துக்கள் அதிகம்" என்பார்கள். இதெல்லாம் உண்மைதானா?

    எப்படி சரியான முட்டையை வாங்குவது, எது சரியான முட்டை என குழப்பம் இருக்கும்.

    இதுகுறித்து சென்னை, கோழி இன ஆராய்சி நிலையத்தின் பேராசிரியர் ஏ.வி.ஓம்பிராகாஷ் அவர்களிடம் இதுபற்றி கேட்டோம்.
    இதெல்லாம் கோழியைப் பொருத்த விசயம் பாஸ்!முட்டை, வெள்ளை நிறம், பிரவுன் நிறம் என்பன எல்லாம் கோழிகளைப் பொருத்த விசயங்கள்.

    பொதுவாக, வெள்ளை லெக்கான் இனத்தைச் சார்ந்த கோழிகள் வெள்ளை முட்டைகளையும், செந்நிற கொண்டைகள் கொண்ட அமெரிக்கன், இங்கிலீஷ், ஏசியின் கோழியின வகைகள் பிரவுன் முட்டைகளையும் இடுகின்றன. (நாட்டுக்கோழிகள் சற்றே பழுப்பு நிறமான வெள்ளை முட்டைகள் இடுபவை, அதனால்தான் கலப்படக்காரர்கள் அளவில் சற்று பெரிய பிராய்லர் கோழி முட்டைகளை, டீத்தூள் டிகாக்‌ஷனில் முக்கி, நாட்டுக்கோழி முட்டைகள் என விற்கின்றனர்) மற்றபடி, பிரவுன் முட்டைகளோ வெள்ளை முட்டைகளோ இதன் ஊட்டச்சத்து மதிப்பில் எந்த வித்யாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    "அப்படியானால், பிரவுன் முட்டைகள் ஏன் விலை அதிகமாக உள்ளன?""

    பிரவுன் முட்டைகள் வெள்ளை முட்டைகளைவிடவும் அளவில் சற்று பெரியவை. எனவே, அதன் விலையும் அதிகமாக உள்ளது அவ்வளவே."

    "முட்டை ஓடுகளில் வித்யாசங்கள் உள்ளனவா?"

    "நிறத்தைத் தவிர வெள்ளை முட்டையின் ஓட்டுக்கும், பிரவுன் முட்டையின் ஓட்டுக்கும் எந்த வித்யாசமும் இல்லை. சிலர், பிரவுன் முட்டையின் ஓடுகள் தடிமனானவை என்பார்கள். இதுவும் தவறு. அளவில் சற்றுப் பெரியவையே தவிர, தடிமனில் வித்யாசம் கிடையாது."

    "மஞ்சள் கருவில் வேறுபாடு இருக்குமா?"


    "இருக்காது. சிலர் பிரவுன் முட்டைகளின் மஞ்சள்கரு, வெள்ளை முட்டைகளைவிடவும் மஞ்சளாக இருக்கும் என்பார்கள். இது தவறு. பொதுவாக, கோழி சாப்பிடும் உணவுக்கும் அதன் மஞ்சள்கருவுக்கும் மட்டுமே தொடர்பு உண்டு. அதாவது, மக்காச்சோளம், சேந்தோபில் நிறமிகள், கீரை வகைகள், கீழா நெல்லி, அசோலா, போன்றவற்றைத் தீவனத்தில் கலந்து அளிக்கும்போது கருவின் மஞ்சள்தன்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மற்றபடி, கோழி முட்டையின் ஓட்டின் நிறத்துக்கும் மஞ்சள்கருவின் நிறத்துக்கும் தொடர்பு இல்லை."



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 23rd Aug 2016 at 02:53 PM.
    honey rose likes this.

  2. #2
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    643

    Re: வெள்ளை முட்டை... பிரவுன் முட்டை எது பெஸ்ட்

    Useful details

    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  3. #3
    honey rose's Avatar
    honey rose is offline Guru's of Penmai
    Real Name
    Divya Bharathi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    6,636

    Re: வெள்ளை முட்டை... பிரவுன் முட்டை எது பெஸ்ட்

    useful sharing,tfs sis


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter