மல்டி கிரெய்ன் ரொட்டி சாப்பிடுங்க...தேவையானவை:
கோதுமை, கார்ன் ஃப்ளவர், கேழ்வரகு, கருப்பு கொண்டைக்கடலை, உப்பு - தேவைக்கேற்ப, தண்ணீர்- சிறிதளவு.

மேற்சொன்ன தானியங்களை நைஸாக அரைத்து மாவாக்கி, நன்றாக சலித்தபின் சப்பாத்தி மாவு போல தேய்க்கவும். தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும். சுவையும் சத்தும் நிறைந்த இந்த மல்டி கிரெய்ன் ரொட்டியை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதற்கு இணை உணவாக, காய்கறிக் கூழை தயாரித்துப் பரிமாறலாம்.
பலன்கள்: தானிய ரொட்டி, பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர உதவும். சோளத்தில் வைட்டமின்கள், ராகியில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துகள், பருப்பு வகைகளில் புரதம் என அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுவதால், எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.Similar Threads: