User Tag List

Like Tree5Likes
 • 3 Post By ahilanlaks
 • 1 Post By safron
 • 1 Post By Mary Daisy

எந்த கீரை எதற்கு நல்லது!


Discussions on "எந்த கீரை எதற்கு நல்லது!" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #1
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  எந்த கீரை எதற்கு நல்லது!

  பல நூறு கீரை வகைகள் நமது நாட்டில் உள்ளது. ஆனால் நாம் பயன்படுத்துவது மிகச் சிலவே. கீரைகளின் நன்மைகள் அற்புதமானது. தினமும் ஒரு கீரை சாப்பிட்டால் நூறு வயது வரை எந்த நோயும் உங்களை தாக்காது.

  கீரைகளை பொதுவாக எண்ணெயில் வதக்குவதைவிட வேக வைத்தே சாப்பிட வேண்டும். அதிலுள்ள சத்து
  கள் எளிதில் அழிந்துவிடும் என்பதால் மூடி வைத்து சமைக்கக் கூடாது. 8 நிமிடங்கள் மேல் இலை வேகத் தேவையில்லை தண்டுகளை வேக வைக்க பத்து நிமிடங்கள் போதும்.

  கீரைகள் நோய்களை தடுக்கவும் உபயோகமாகிறது. எளிதில் கிடைக்கக் கூடிய சிலவகை கீரைகளின் நன்மைகளையும், சத்துக்களையும் இங்கே காண்போம்.

  அரைக் கீரை :
  இந்த கீரையில் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளன. பலவீனத்தைப் போக்கும். இந்தக் கீரையைப் பழுப்பு இலைகள் இல்லாமல் சுத்தமாக ஆய்ந்து கழுவிவிட்டு, உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அரைக் கீரையில் வைட்டமின் ஏ,சி இரண்டும் அதிக அளவில் இருக்கின்றன. புரதச் சத்து, கால்சியம், நார்ச் சத்துக்களும் அதிக அளவில் இருக்கின்றன.

  இதனை அடிக்கடி உபயோகித்து வந்தால் உடலின் எல்லா பாகங்களும் சீரான வளர்ச்சியை பெறும். தேக பலமும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். மலச்சிக்கலை போக்கி குடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவும். இதயத்திற்கு வலிமையை தரும். உடல் நலக் குறைவினால் துன்பப்படுபவர்கள் இந்தக் கீரையை கடைந்தும், மிளகு ரசத்தையும் உணவில் சேர்த்து கொண்டால் சத்தான உணவாகும்.

  பசலைக் கீரை :
  இரும்புச் சத்து நிறைந்த இச்சாறு எளிதில் ஜீரணம் ஆகும். ஹீமோகுளோபினைக் கூட்டும். அமிலத்தன்மை குறைகிறது. மூல வியாதி, உடல் சூடு, மூலச்சூடு, மலக்கட்டு நீங்கும். மூத்திரக்கடுப்பு, சிறுநீர் வியாதிகள் விலகும். கண்கள் சத்துக்கள் பெறுகின்றன. உடல் பருமன், தொப்பையைக் குறைக்கின்றன. உடல் பளபளப்புக்கு பசலைக்கீரை சாறு பருகலாம்.

  மணத்தக்காளிக் கீரை :
  மணத்தக்காளி கீரையை உணவுடன் சேர்த்து உண்ண உடம்பு குளிர்ச்சி அடையும். வாரம் ஒரு முறை இக்கீரையை உண்டுவர, கடுமையான உழைப்பு காரணமாக உடலின் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்றியைப் போக்கலாம்.

  இதயத்திற்கு வலிமை ஏற்றும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெற உதவும். கண்பார்வையும் தெளிவு பெறும். வயிற்றுநோய், வயிறு பெறுக்கம், வாய்புத் தொல்லை உடையவர்கள், வாரம் இருமுறை மணத் தக்காளிக் கீரையை சமைத்து உண்டு வர, நோய் கட்டுபட்டு குணமாகும்.

  முருங்கைக் கீரை :
  முருங்கைக் கீரையில் விட்டமின், புரோட்டின், கால்சியம், மாங்கனிஸ், மணிச்சத்து, இரும்பு போன்ற முக்கிய சத்துக்கள் நிரம்பப் பெற்றிருக்கின்றன. முருங்கைக் கீரையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன.

  வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்ணுக்கு ஒளியூட்டக்கூடியது முருங்கைக்கீரை. முருங்கைக் கீரையை வாங்கி நன்றாக ஆய்ந்தெடுத்து பருப்பு சேர்த்தோ, சேர்க்கா மலோ சமைத்துச் சாப்பிட, தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

  வெந்தயக் கீரை :
  வெந்தய கீரை மலச்சிக்கலை போக்குகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இந்த கீரையில நார் சத்து, இரும்புச் சத்து,கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது.

  வெந்தய கீரை தோல் நோய்களை குணமாக்கும் வல்லமை உடையது. இது இரத்தத்தை பெருக்கி உடலை வலிமையாக்கும். வயிற்றுப் புண், வாய்வு தொல்லை ஆகியவற்றை போக்கும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தும். சர்க்கரை வியாதிக்கு மிகவும் நன்மைகளைத் தரும்.


  Sponsored Links
  Mary Daisy, gkarti and safron like this.
  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 2. #2
  safron's Avatar
  safron is offline Citizen's of Penmai
  Real Name
  sumy
  Gender
  Female
  Join Date
  May 2016
  Location
  srilanka
  Posts
  625

  Re: எந்த கீரை எதற்கு நல்லது!

  Hi bhuvi ka hw r u??
  Very useful sharing thanks kaa

  ahilanlaks likes this.
  Sumy..
  உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

 3. #3
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: எந்த கீரை எதற்கு நல்லது!

  Quote Originally Posted by safron View Post
  Hi bhuvi ka hw r u??
  Very useful sharing thanks kaa

  Welcome Sumy....

  I`m fine ma, how are you?


  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 4. #4
  Mary Daisy's Avatar
  Mary Daisy is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Daisy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Ever green city
  Posts
  5,048
  Blog Entries
  4

  Re: எந்த கீரை எதற்கு நல்லது!

  useful sharing . . .. .

  ahilanlaks likes this.

 5. #5
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: எந்த கீரை எதற்கு நல்லது!

  Quote Originally Posted by Mary Daisy View Post
  useful sharing . . .. .
  Thank you Mary

  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter