Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By safron
  • 1 Post By sumathisrini
  • 1 Post By ahilanlaks

Health Benefits of Snake Gourd - புடலங்காய்!


Discussions on "Health Benefits of Snake Gourd - புடலங்காய்!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Health Benefits of Snake Gourd - புடலங்காய்!


    புடலை தொடர்ந்து பயன்படுத்தினால் சூட்டை குறைக்கும். நல்ல பசி உண்டாகும். வயிற்றுபொருமலை போக்கும். வயிற்று பூச்சியை நீக்கும். இதன் காய், வேர், இலை மருத்துவகுணமுடையது என்றாலும் நாம் பயன்படுத்துவது காயை மட்டும்தான்.


    புடலங்காயை நமது முன்னோர்கள் நீண்டகாலமாக உணவாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதில் சிறப்பு என்ன தெரியுமா? புடல் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகின்றனர். புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். பிஞ்சுகாயை மட்டுமே பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் வீதம் முறை விட்டு 48 நாட்கள் சாப்பிட மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும். பொதுவாக புடலங்காயில் தண்ணீர் சத்து அதிகமாக உள்ளதால் சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிறையும்.


    எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும். அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுக்குள்வரும். இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.


    புடலின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
    புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும். கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும். புழுவெட்டு உள்ளவர்கள் பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் புடலங்கொடியின் இலையை அரைத்து தலையில் தடவிவர புழுவெட்டு மறையும். தொடர்ந்து காயை உணவாக சாப்பிட்டுவர பொடுகு நீங்கும்.


    பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைபடுதலை குணமாக்க புடலங்காயை குழம்பு வைத்து சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கும். மிகவும் மெலிந்த உடல் கொண்டவர்கள் சூட்டு உடம்புக்காரர்கள் அடிக்கடி புடலங்காயை சாப்பாட்டில் சேர்த்து வர உடல் மெலிவு மாறி உடல் பருமனடையும். குடல்புண் உள்ளவர்களுக்கு அடிக்கடி வாயில் புண்ஏற்படும். இவர்கள் வாரம் ஒரு முறை புடலங்காயை எந்த வகையிலாவது உணவில் சேர்த்து கொண்டு வந்தால் வாய்ப்புண் குடல் புண், தொண்டை புண் ஆறும். உணவு செரிக்காமல் இருப்பவர்கள் புடலங்காயை கூட்டு செய்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். இத்தகைய சிறப்பு கொண்ட புடலையை அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. சாப்பிட்டால் சொறிசிரங்கு கரப்பான் நோய்கள் ஏற்படும். இதைத்தான் என்கின்றார் அகத்தியர். உணவுக்கு மட்டுமே பயன்படும் என்ற புடலங்காயை ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களை அளித்தனர் நமது முன்னோர்கள். உணவே மருந்து என்ற முறையில் அளவறிந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Health Benefits of Snake Gourd  - புடலங்காய்!-snake%25u00252bgourd.jpg  
    safron likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    615

    re: Health Benefits of Snake Gourd - புடலங்காய்!

    Ivlo use irukka..:rolleyes tfs kaa

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,179

    Re: Health Benefits of Snake Gourd - புடலங்காய்!

    Thanks Bhuvana for sharing health benefits of Snake Gourd.

    ahilanlaks likes this.

  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: Health Benefits of Snake Gourd - புடலங்காய்!

    Quote Originally Posted by safron View Post
    Ivlo use irukka..:rolleyes tfs kaa
    Welcome Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: Health Benefits of Snake Gourd - புடலங்காய்!

    Quote Originally Posted by sumathisrini View Post
    Thanks Bhuvana for sharing health benefits of Snake Gourd.
    Welcome Sumi ka

    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter