சிறுநீரக பாதிப்பு உள்ளானவர்களுக்கான ஸ்பெஷல் கீரை இது....வெந்தயக் கீ்ரையில், இரும்பு சத்து, நார்ச்சத்துக்கள் ஓரளவு இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின் மிகுதியாக இருக்கின்றன. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸும் நிறைய இருக்கிறது. தாது உப்புக்களில் பொட்டாஷியம் குறைந்த அளவும், மெக்னீஷியம், தாமிரம், மாங்கனீஷ், துத்தநாகம், சல்பேட், குளோரைடு ஆகியவை ஓரளவும் இருக்கின்றன. சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்களும் தங்கள் உணவில் இந்தக் கீரையை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். மிகவும் குளிர்ச்சியைத் தரக்கூடியது. எல்லோருக்கும் ஏற்ற வெந்தயக் கீரையை மசியல் செய்து சாப்பிடலாம்.
Similar Threads: