மலச்சிக்கலைத் தடுக்கும் சம்பா கோதுமை!

சம்பா கோதுமை குறைந்த கிளைசெமிக் எண் கொண்டது என்பதால், சர்க்கரை நோயாளிகள் அவ்வப்போது சாப்பிட ஏற்றது. காய்கறிகளுடன் சேர்த்து, சம்பா கோதுமை உப்புமா செய்து தந்தால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
சம்பா கோதுமையில் நார்ச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. இது, செரிமானம் மேம்பட உதவும். செரிமானக் கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கலைத் தடுக்கும்.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின் சத்துக்கள் ஓரளவு நிறைந்துள்ளன. அனைவருமே சாப்பிட ஏற்றது. சம்பா கோதுமையைக் கஞ்சியாக வைத்துக் குடித்தால், உடல் வலுவாகும்.

குழந்தைகளுக்கு சிறிய வயதில் இருந்தே சம்பா கோதுமை ரெசிபிக்களை கொடுத்துப் பழக்கலாம்.Similar Threads: