டிசம்பர், ஜனவரியில் பனங்கிழங்கு சீசன் நடை பெறுகிறது. தைப்பொங்கல் அன்று, வழிபாட்டில் படைக்க வேண்டிய முக்கியப் பொருட்களில் ஒன்றாக பனங்கிழங்கு உள்ளது. பழங்களில் இருந்து விதைகளைத் தனியே எடுத்து மணலில் விதைப்பர். இந்த விதை முளைத்து 3 அல்லது 4 மாதங்களில் கிழங்கை வெட்டி எடுப்பர். இந்தப் பனங்கிழங்கில் ஸ்டார்ச் சத்து மிகுந்து உள்ளது. இந்த பனங்கிழங்கை வேக வைத்தும், அனலில் வாட்டியும் உண்பர். இலங்கையில் பனங்கிழங்கின் உற்பத்தி அதிகமாக இருப்பதால், அவற்றை சீசனின் போது, வேக வைத்து சிறு துண்டுகளாக வெட்டி உலர்த்தி ஆண்டு முழுவதும் பயன்படுத்துவர். பனங்கிழங்கை மாவாக்கியும் உணவாகப் பயன்படுத்துவர். பனங்கிழங்கை தூய்மை செய்து அதனை நீர் சேர்த்து காய்ச்சி கண் மறைப்பு, காமாலை போன்றவற்றுக்கு மருந்தாகத் தருவர்.

Similar Threads: