How to follow basic food facts?
Discuss here on How to follow basic food facts? within the Healthy and Nutritive Foods forums, part of the Health forum; Eating food is an integral part of human life. Eating food is so simple. But there are lots of facts ...
-
4th Feb 2012, 08:10 PM #1
How to follow basic food facts?

Eating food is an integral part of human life. Eating food is so simple. But there are lots of facts involved every single activity we perform during eating. Mom used to scold children about watching television and reading books during eating.
We can watch such an incident in every home. But such scolding has an inner meaning. When we do some other work during eating, our concentration and energy goes into that work. So the food will not digest properly. There are so many such facts. Let us take a look at them.
Do maintain a daily routine for eating. Do not change the eating times every day. Practice yourself for a proper routine. Before starting to eat wash your hands, legs and mouth. Clearly wipe your hands and legs before eating. Do not talk and read during eating.
Do not keep our door open when you are eating. Do not wear slippers during eating. Do not eat when sun rises and sun set. At such times digestive power will be very less. So not eat immediately after bathing. Especially it is common with wet clothes. And do not bath immediately after eating.
Do not eat under moonlight. When you are planning to eat out at full moon day, do not eat alone. Eat with few companions. Do not eat in dark, when light is not there. Do not intervene for some other work during eating. Focus only on eating.
Do not eat when you are sad, tensed or angry. Do not place your left hand on the floor while eating. Who not hold your plate on hand during eating? Do not add excess of tamarind, salt, chilies in your food. Do not stand while eating.
Do not eat very fast. Chew the food well. This will improve digestion and also provides good exercise for the mouth, teeth and cheeks. It also adds glow to the face. Start your food with sweets. Do not eat sesame foods at night. Leave away some food in the plate. Eating in banana leaf is good for overall health.
- Malvika SampathWith Regards,
Sumathi Srini
“Nothing is impossible as impossible itself says i'm possible”
-
9th Feb 2012, 11:56 AM #2
Re: How to follow basic food facts?
Idly, Dosai கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன்

என்ன! தலைப்பைப் பார்த்து பயந்து விட்டீர்களா? ஆம், இது பெரிய உண்மை. பரோட்டா மைதாவினால் செய்த பண்டம். அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லதல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரிதளவில் ஷேர் செய்யபட்ட ஒரு ஆர்டிக்கிள். பரோட்டாவாவது நமது பாரம்பரிய உணவு அல்ல, மற்றும் அதை இளைஞர்கள்தான் உண்ணுவார்கள்.
ஆனால் இப்பொழுது நமது ஒரு வயது குழந்தை முதல் வயதானவர்கள் வரை உண்பது "இட்லி" எனப்படும் ஒரு தமிழனின் உணவு. இதுபோக பேஷன்ட்களும், அறுவை சிகிச்சை செய்தவர்களும் மற்றும் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் எந்த ஒரு பேஷன்டுக்கும் பரிந்துரைக்கும் முதல் உணவு இட்லி எனப்படும் வேகவைத்த "ரைஸ் பேன்கேக்". இந்த ஆர்டிக்கிளை நான் எழுதவேண்டும் எனப் பலமாதங்கள் நினைத்தும் ஏனோ சிலபல காரணங்களால் அது நடக்காமல் போனதற்கு ஒரு முக்கியக் காரணம் அதற்குத் தேவையான ஆராய்ச்சி விஷயங்கள் இப்பொழுதுதான் சமீபமாகக் கிடைத்தது. ஆம், நான் கூறும் இந்த விஷயங்கள் 100% சதவிகிதம் உண்மை. இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை. இதையே கடையில் வாங்கிச் சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. “கடை மாவு” பற்றித்தான் இந்த ஆய்வுக் கட்டுரை.
ஆம், ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் கிரைண்டர் வந்தது. அதுவும் பரவாயில்லை. வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிப் போனது. சமீபமாக ஒரு முக்கியத் திருப்புமுனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டி தொட்டி, அண்ணாச்சிக் கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர். முன்பாவது திடீர் டிஃபன் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி, ஒடிப்போய் ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு தெருமுனை கடையில வாங்கி வா" அப்படின்னு சொல்லி, வந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து, அது முடியும் வரை போகும். இப்ப பேச்சலர்ஸ்கூட செய்கின்றனர். இந்த மாவு ஒரு “உயிர்க்கொல்லி - ஸ்லோ பாய்ஸன்” என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் பயங்கரத்தை இப்பொழுது கூறுகிறேன் கேளுங்கள். விழிப்புணர்ச்சியைப் பரப்புங்கள்.
1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு Wet Flour (ஈரப்பத மாவிற்கு) ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சிக் கூடத்திலும் சோதனை செய்யப்படவில்லை.
2. இந்த மாவு சில மட்டமான அரிசியும் உளுந்தும் முக்கியமாக, புண்ணுக்குப் பயன்படும் “போரிங் பவுடர்” மற்றும் “ஆரோட் மாவு” போடுவதால் மாவு புளிப்பு வாசனை கண்டிப்பாக வராது. அதுபோக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதைச் செய்கின்றனர். இதேமாதிரி வீட்டில் அரைத்த மாவை ரெண்டுநாள் வைத்து மூணாவதுநாள் முகர்ந்து பாருங்கள். புளிப்பு வாசைனையும் வரும். தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதைத் தவிர்க்கத்தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரண்டி அளித்தும் ஒரு வாசனை வராமல் இருக்கக் காரணம் இந்த புண்ணிற்குப் போடும் Boring Powder-ம் ஆரோட் மாவும்தான்.
3. முக்கியமாக இந்தக் கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணிநேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12 – 18 மணிநேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்தக் கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு பல சமயம் இந்தச் சிறு கருங்கல் துகள்களால்தான் சமீபமாக நிறைய பேருக்கு சிறுநீரகத்தில் கல் உண்டாகிறது. ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணிநேரம் அரைத்தல் வெறும் 6 மாதம்தான். கொத்திப் போட்டாலும் அடுத்த மூணு மாதம்தான் மேக்ஸிமம்.
4. உங்களுக்கு நன்கு தெரியும், சமையல் செய்யும் ஆட்கள் கை அடிக்கடி அலம்ப வேண்டும் மற்றும் நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்தத்தையும் இவர்கள் பேணுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில் சேர்ந்து கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகளால் ஈஸியாக உங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்கு இதுதான் காரணம்.
5. கிரைண்டரை எனக்குத் தெரிந்து தாய்மார்கள் பயன்படுத்தத் தயக்கம் காட்டுவது இரண்டு விஷயங்களுக்காக. 1. கிரைண்டரை சுத்தம் செய்யும் கஷ்டம், 2. கல்லைத் தூக்கிப்போட வேண்டும். பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம். சிறுகுடும்பம், அதனாலயே கடையில் மாவு வாங்குகிறது. ஆனால் இவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு முடிந்தும் கழுவுவதில்லை. அதனால் அந்தக் கிரைண்டரின் கிருமி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாகப் பயன்படுத்த ஒவ்வொரு முறையும் வெந்நீர் (Hot Water) ஊற்றித்தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒருமுறை கழுவினாலே அதிகம். மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்தத்தன்மை போய்விடும்.
6. என்னதான் நல்ல அரிசி, உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர்தான் ஊற்றி மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்தத் தண்ணீரை உபயோகப்படுத்துகின்றனர் என்பதுகூடத் தெரியாது. எனக்கு தெரிந்த தகவல்படி இவர்கள் Bore Well தண்ணீர் மற்றும் உப்பு தண்ணீரை ஊற்றும் காரணம் உப்புப் போடவேண்டிய வேலை இல்லை.
7. அந்தக்கால ஃபார்முலாபடி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தைப் போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை Antibiotic, உடம்பு உஷ்ணம், வாய் நாற்றம், அல்சருக்கு இது ஒரு நல்லபொருள். ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.
8. கிரைண்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ஆனால், இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள். அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான் கலக்கும்.
9. கிரைண்டர் ஓட அந்த மத்தியக் குழவியை இணைக்கும் ஒரு செயின். அந்தச் செயினை இவர்கள் கழட்டிவிட்டு ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பார்கள். ஒன்று சத்தம் வராமல் இருப்பதற்கும் மற்றும் மாவு கை தள்ளி விடாமல் அரையும் டெக்னிக்குக்காக. அந்த பெல்ட் தண்ணீர் பட்டுப் பட்டு பெல்ட் துகள்களும் இந்த மாவில்தான் கலக்கும்.
10. இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ்நாட்டு Climate-படி இதை ஃப்ரீசரில்தான் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில்தான் இதை வைக்கின்றனர். இப்ப இருக்கின்ற கரண்ட் “கட்” பிரச்சினையில் இந்த மாவு கண்டிப்பாகப் பாய்ஸனாகிறது.
இந்த மாவில் நிறைய இடங்களில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிரைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி சிலருக்கு உடனே பிரச்சினையும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உருவாகிறது. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால்தான் கொஞ்சமாவது கட்டுப்படும். அதனால் தயவுசெய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரண்டியில் ஈரமான இட்லி, தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதைத் தவிருங்கள். உலர்ந்த மாவு பரவாயில்லை. இதேமாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் ஷேர் செய்யும் தாய்மார்களும் கண்டிப்பாகக் கவனம் தேவை. இப்பொழுது இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில் அல்ல. அதனால் சென்னை மாநகராட்சி ரெய்டு செய்து மாவு அரைக்கும் இடங்களில் எல்லாம் கையகப்படுத்துகிறது. தயவுசெய்து இதைப் பகிரவும், முடிந்த அளவுக்கு Awareness-ஐப் பரப்புங்கள்.
--பாசமுடன்..
பாலா.
-
9th Feb 2012, 12:29 PM #3
Re: How to follow basic food facts?
nice article . Sumathi sis , Bala anna.
-
9th Feb 2012, 03:01 PM #4
Re: How to follow basic food facts?
Subha...
Believe in all that can be
A miracle starts whenever you dream
Believe and sing from your heart
You'll see Your song will hold the key
To Sucess...

Similar Threads
-
To conceive simple steps to follow..
By naanthan in forum Trying to ConceiveReplies: 11Last Post: 2nd May 2012, 11:03 PM -
How to do basic first aid?
By sumathisrini in forum Alternative MedicinesReplies: 2Last Post: 21st Nov 2011, 11:10 AM -
Food Facts
By Parasakthi in forum Healthy and Nutritive FoodsReplies: 0Last Post: 8th Oct 2011, 03:01 PM -
Food facts
By radhika in forum Healthy and Nutritive FoodsReplies: 9Last Post: 24th Aug 2011, 10:07 AM -
Basic recipes
By revamanian in forum Regional RecipesReplies: 0Last Post: 8th Jul 2011, 10:07 PM


5Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote

Bookmarks