Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree25Likes

மறந்து போன மருத்துவ உணவுகள்


Discussions on "மறந்து போன மருத்துவ உணவுகள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #11
    Kousalya bala's Avatar
    Kousalya bala is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    USA
    Posts
    1,050

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    Quote Originally Posted by yuvan_nan@yahoo View Post
    விரும்புபவர்கள்இதைஅடிக்கடிசெய்துசாப்பிடலாம். எலும்புதொடர்பானநோய்களைக்குணப்படுத்தும். சளியைப்போக்கும்.
    வேப்பங்கொழுந்துதுவையல்
    தேவையானவை: வேப்பங்கொழுந்து - 30 இணுக்கு, வெல்லம் - 10 கிராம், உளுத்தம்பருப்பு - 20 கிராம், பச்சைமிளகாய் - 2, பூண்டு - 5 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள்தூள்ஆகியவைதேவையானஅளவு.
    செய்முறை: சிறிதளவுஎண்ணெயில்வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டைவறுத்து, வெல்லம், பச்சைமிளகாய், புளி, உப்பு, மஞ்சள்தூள்சேர்த்துத்துவையலாகஅரைக்கவும்.
    மருத்துவப்பயன்: சர்க்கரைநோயாளிகளுக்குஏற்றதுவையல்இது. பித்தம்தணியும். வயிற்றில்உள்ளகிருமிகள்ஒழியும். நோய்எதிர்ப்புசக்திஅதிகரிக்கும்.
    yellam sari anal yaru sappidarathu. yenpa ippadi oru recipe?


    Sponsored Links
    yuvan_nan@yahoo and senvi like this.

  2. #12
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    ஹாய் பாலா..
    உங்களுடைய போஸ்ட் டயலாக் ஸ்டைல் பார்த்து எனக்கு கண்ணில் நீர் வரும் வரை சிரிப்பு வந்துவிட்டது...

    இருந்தாலும்..

    மருந்து எல்லாமே கசப்புதான்...எதுவெல்லாம் கசப்பாக இருக்கிறதோ அதெல்லாம் மருத்துவகுணம் அதிகம் உள்ளது..பாகற்காய், அகத்திகீரை,முருங்கை கீரை மற்றும் அனைத்து கீரை வகைகளுமே சிறு கசப்பு உள்ளது...தேவையானபோது நாம் சிலவற்றை எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்...

    இவன்

    யுவா

    Kousalya bala and senvi like this.
    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

  3. #13
    Kousalya bala's Avatar
    Kousalya bala is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    USA
    Posts
    1,050

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    hai yuvan,

    no never matten mudiyathu. athunalathan intha samayalai yellam maranthu ponom. innum intha mathri recipe kothu pattupada vachudatheenga(athanpa danush sameepathiya pattu) athusari neega sapittu irukkengala intha arumai perumai magimai niraintha kasappu வேப்பங்கொழுந்துதுவையல்lai?

    yuvan_nan@yahoo and senvi like this.

  4. #14
    senvi's Avatar
    senvi is offline Friends's of Penmai
    Real Name
    senthil kumar
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    srivilliputtur
    Posts
    287

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    Good post yuvan.Thankyou for sharing such a wonderful recipes.congratulations for your succeeding posts.


  5. #15
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    ஹை பாலா..
    வேப்பங்கொழுந்து துவையல் சாப்பிட்டதில்லை..ஆனால் வேப்பன்கொழுந்து சமைக்காமல் சாப்பிட்டிருக்கிறேன்...வேப்பெம்பூ குழம்பு அதிகம் சாப்பிட்டிருக்கிறேன்..நான் இப்போது சவுதியில் இருக்கிறேன்..ஊருக்கு சென்றதும் நளபாகம்தான்...

    உங்களின் போஸ்ட் எல்லோரிடமும் இயல்பாய் பேசுவதுபோல இருப்பது மிக நன்றாக இருக்கிறது...
    வாழ்த்துக்கள்..

    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

  6. #16
    Kousalya bala's Avatar
    Kousalya bala is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    USA
    Posts
    1,050

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    Hi Yuvan,
    penmayin vasakarkal anivarum yen sagothara sagotharikal than. sagothara sagotharigalidam iyalba thane pesamudiyum athan yenakku yentha vithiyasamum yaridamum illai.

    So you justify your post. ok naan veppampoo rasam sappitu iruken athen kuzhambu? kadaisiyil yennaye intha recipe kekka vachutaye pa

    yuvan_nan@yahoo likes this.

  7. #17
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    Haai bala..

    mikka Nandri..veppemboo vathal kuzhambhu............................sorry.. sorry..........

    adutha recipeil parppom..

    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

  8. #18
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    மருந்து சாதம்
    தேவையானவை: சுக்கு - ஒரு துண்டு, வெள்ளை மிளகு - 2 டீஸ்பூன், திப்பிலி - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி. இவை அனைத்தையும் வறுத்து அரைத்துக்கொள்ளவும். வெங்காயம் - 2, பூண்டு - 5 பல், உப்பு - தேவையான அளவு, கறி மசாலாத் தூள், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன்.
    செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். அத்துடன், ஏற்கெனவே அரைத்துவைத்திருக்கும் பொடியைச் சேர்க்கவும். கூடவே பூண்டு போட்டு நன்றாக வதக்கியதும், உப்பு, மஞ்சள் தூள், கறி மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதை சாதத்துடன் கலந்து பரிமாறலாம்.
    மருத்துவப் பயன்: அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், வாரம் ஒருமுறை இதுபோல் சமைத்துச் சாப்பிட்டால், அஜீரணப் பிரச்னையே இருக்காது.
    வல்லாரைக்கீரைக்கூட்டு
    தேவையானவை: வல்லாரைக் கீரை - ஒரு கட்டு, தோல் நீக்கிய இஞ்சி - 50 கிராம், மிளகு - 5 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
    செய்முறை: கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்துக் கடைந்து, கீரை, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு, வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து கீரைக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
    மருத்துவப் பயன்: மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும். நினைவாற்றலைத் தூண்டும். காக்காய்வலிப்பு, நரம்புக் கோளாறுகள், இதய நோய், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.

    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

  9. #19
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    பானகம்
    தேவையானவை: எலுமிச்சைச் சாறு - 200 மி.லி., மஞ்சள் வாழைப் பழம் - 10, நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு, சுக்கு - ஒரு துண்டு, ஏலக்காய் - 10.
    செய்முறை: வாழைப் பழங்களை நன்றாகப் பிசையவும். சுக்கு, ஏலக்காயை லேசாகத் தட்டிக்கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறு உள்ளிட்ட எல்லாவற்றையும் போட்டுக் கலக்கவும். சிறிது நேரத்தில் தூசி அடியில் தங்கிவிடும். வடிகட்டிக் குடிக்கலாம்.
    மருத்துவப் பயன்: தற்காலிகப் பசியைத் தணித்து, அரை மணி நேரத்தில், பசியைத் தூண்டிவிடும். பித்தத்தைத் தணிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். மயக்கம், களைப்பைப் போக்கும்.
    அலுப்புக்குழம்பு
    தேவையானவை: சுக்கு, சித்தரத்தை, பரங்கிச் சக்கை - தலா ஒரு துண்டு, மிளகு, வால் மிளகு, வெள்ளை மிளகு, மோடிக் குச்சி - தலா 10, திப்பிலி - 5, கடுகு, சீரகம், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், கத்தரிக்காய் - அரை கிலோ, மொச்சை - 100 கிராம், புளி - சிறிதளவு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய் - தேவையான அளவு.
    செய்முறை: சுக்கு, சித்தரத்தை, மிளகு, பரங்கிச் சக்கை, வால் மிளகு, வெள்ளை மிளகு, திப்பிலி, மோடிக் குச்சி, சீரகம், மஞ்சள் தூள் இவற்றை லேசாக வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், ஊறவைத்த மொச்சை, அரைத்துவைத்துள்ள பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.
    மருத்துவப் பயன்: உடல் வலி, அசதியைப் போக்கும். சளித் தொல்லை நீங்கும். பசியைத் தூண்டும். அடிக்கடி சாப்பிட்டால், ரத்த உற்பத்தியை ஊக்குவிக்கும். குழந்தை பெற்ற பிறகு உடம்பில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளித்தள்ளும். அடிவயிற்றுச் சதையைக் குறைக்கும்.

    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter