Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By saranyapavalan

Pepper for Health - உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு!


Discussions on "Pepper for Health - உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    saranyapavalan's Avatar
    saranyapavalan is offline Citizen's of Penmai
    Real Name
    saranya
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Malaysia
    Posts
    886

    Pepper for Health - உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு!

    சளியோ இருமலோ வீட்டில் மிளகு இருந்தால் போதும் நோயை போக்கிவிடலாம் என்பார்கள். பாட்டி வைத்தியத்தில் மிளகுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நறுமணப்பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

    இன்றைக்கு நாம் உண்ணும் உணவில் அதிக அளவில் ரசாயன உரங்கள் சேர்க்கப்படுகின்றன. நாகரீகம் என்ற பெயரில் நஞ்சை உண்கிறோம் என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிவார். அதைப்போல எவ்வளவுக்கு எவ்வளவு செயற்கை உணவுகளை உட்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நோய்களும் நம்மை எளிதில் தாக்குகின்றன. இந்த நோய்களை நீக்கும் மருந்துகள் நம்வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

    நம் வீட்டில் உள்ள மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது. கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது.

    இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது.

    தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது. வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவைகளை நீக்குகிறது.

    மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மேலும் இரத்தசோகை, இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

    மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது. நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்தலாம்.


    உடலின் ஒட்டு மொத்த நலனிற்கும் மிளகு நல்லது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


    Similar Threads:

    Sponsored Links
    swaga2008 and smahi like this.

  2. #2
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    re: Pepper for Health - உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு!

    Nalla thagaval. Thanks for sharing ma.






    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  3. #3
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    re: Pepper for Health - உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு!

    Thanks for sharing here...
    Wonderful information...

    Regards

    ​aham brahmAsmi

  4. #4
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    re: Pepper for Health - உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு!

    Useful info abt pepper saranya,thanks for sharing dear..


  5. #5
    srathi's Avatar
    srathi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    singapore
    Posts
    1,441
    Blog Entries
    18

    re: Pepper for Health - உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு!

    [QUOTE=saranyapavalan;201341]

    hi saranya,

    thank u so much for ur valuable info.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter