பீட்ரூட் சூப்


Beetroot Soup-index.jpg

பீட்ரூட் சத்து மிகுந்த உணவுப் பொருள். பீட்ரூட்டை பொறியலாகவோ, வறுவலாகவோ தயாரித்தால் சாப்பிடப் பிடிக்காதவர்கள் தாராளமாய் இந்த பீட்ரூட் சூப்பை தயாரித்து அருந்தலாம். இதோ செய்முறை:

தேவையான பொருட்கள்:பீட்ரூட் 1/4 கிலோ
தக்காளி 3
பெரிய வெங்காயம் 1
வெண்ணெய் 50 கிராம்
மிளகுத்தூள் தேவையான அளவு
மசால் பொடி 1/4 டீஸ்பூன்
உப்புத்தூள் தேவையான அளவு
மைதா மாவு 2 டீஸ்பூன்
கிரீம் 1 டீஸ்பூன்
தண்ணீர் 3 கப்செய்முறை:


பீட்ரூட்டை தோல் சீவி துருவியால் துருவிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கவும். குக்கரில் 3 கப் தண்ணீர் வைத்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட், இவைகளைப்போட்டு, அத்துடன் மிளகுத்தூள், உப்பு, மசால் பொடி, வெண்ணெய் சேர்த்து வேக விடவும். வெந்ததும் மசித்து வடிகட்டிக் கொள்ளவும். அத்துடன் மைதா மாவை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டிய பீட்ரூட் சாறுடன் ஊற்றி கொதிக்க விடவும். இத்துடன் 1 டீஸ்பூன் கிரீம் சேர்க்கவும். பிரெட் துண்டுகளை நெய்யில் வறுத்து சூடான கப்பில் போட்டு பரிமாறவும். விருந்தின்போது தயாரிக்க ஏற்றது. சுவையும் மணமும் நெஞ்சில் நிலைக்கும்.

Similar Threads: