Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

உடல் எடையை குறைக்க....


Discussions on "உடல் எடையை குறைக்க...." in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    Ganga's Avatar
    Ganga is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    3,271
    Blog Entries
    4

    உடல் எடையை குறைக்க....

    உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த அமெரிக்காவும் டயட்டில் இருந்ததையும் ஜிம்மே கதியென்று கிடந்ததையும் பத்தாண்டுகளுக்கு முன் பார்த்தோம். இப்போது இந்தியாவின் முறை வந்திருக்கிறது.
    ரொம்பவும் சீரியசான பல நோய்களுக்கு உடல் பருமன் முக்கியமான காரணம் என்று மருத்துவ உலகம் ஒருமனதாக ஒப்புக் கொண்ட பின்னர் எது ஆரோக்கியமான சாப்பாடு?, எது சரியான உடற்பயிற்சி? என்பது சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. யாராலும் ஒரு தீர்மானத்துக்கு வர முடியவில்லை. நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிசின் சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரை இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போல தெரிகிறது.
    20 ஆண்டுகளாக தொடர்ந்த ஆய்வின் முடிவுகள் அதில் இடம் பெற்றுள்ளன. ஆய்வில் பங்கேற்ற அனைவரும் டாக்டர்களும் நர்ஸ்களுமே என்பது ஆய்வின் நம்பகத் தன்மைக்கு நல்ல விளம்பரம். அனைவரும் என்றால் நூறு இரு நூறு பேர் இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? தவறு. 1,20,877 பேர்.
    எதையும் அளவோடு சாப்பிட வேண்டும்; கொழுப்பு மிகுந்த அயிட்டங்களை தவிர்க்க வேண்டும்; கலோரிகள் குறைவாக இருக்கும் பொருட்களை தேர்வு செய்ய வேண்டும் என டாக்டர்கள் வழக்கமாக சொல்லும் அறிவுரை பலன் தரவில்லை என்பது ஆய்வின் முதல் கண்டுபிடிப்பு. எதை விழுங்கினாலும் பரவாயில்லை; விடாமல் எக்சர்சைஸ் செய்தால் வெயிட் ஏறாது என்பதும் அடிபட்டு போனது. பால், பால் பொருட்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் பாதகமில்லை என்பது அடுத்த சர்ப்ரைஸ். உண்மையில் கெட்டி தயிர் ரொம்ப நல்லதாம் & எடை குறைக்க! கடலைக்கும் அத்தகைய அந்தஸ்து கிடைத்திருக்கிறது.
    எடை அதிகரிக்கும் உணவுகள் லிஸ்டில் ஆச்சரியங்கள் இல்லை: உருளை கிழங்கு ஃபிரை, சிப்ஸ், மட்டன், கேக், பாலிஷ் செய்த தானியங்கள், பாட்டில் பானங்கள். ஒயின் தவிர மது வகைகள் எல்லாம் எடை உயர பங்களிக்கின்றன. மது அருந்திய வயிற்றுக்குள் எண்ணெயில் பொரித்த பண்டங்களை அனுப்புவது பெரிய வில்லங்கம். எப்போது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடக்கூடியது காய்களும் பழங்களும் என்பது ஆய்வில் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
    உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் இந்த நூற்றாண்டில் இதைவிட விரிவான ஆய்வு நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    -Dinakaran

    Ganga

    Similar Threads:

    Sponsored Links
    கங்கா
    விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


  2. #2
    srirenga is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    tiruvarur
    Posts
    220

    Re: உடல் எடையை குறைக்க....

    nice tips thankyou


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter