Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine Jan 2018! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By Parasakthi
  • 1 Post By sumitra

Carrot Medicinal Benefits


Discussions on "Carrot Medicinal Benefits" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Carrot Medicinal Benefits

    ஒரு 100 கிராம் கேரட்டில் 86.0 விழுக்காடு நீர்ச்சத்தும், 0.9 விழுக்காடு புரோட்டீன் சத்தும், 0.2 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 1.1 விழுக்காடு தாதுக்களும், 1.2 விழுக்காடு நார்ச்சத்தும், 10.6 விழுக்காடு கார்போஹைட்ரேட்ஸும் உள்ளது.

    Carrot Medicinal Benefits-0-7msfzz.jpg


    கால்சியம் 80 மில்லி கிராமும் பாஸ்பரஸ் 530 மில்லி கிராமும், இரும்புச்சத்து 2.2 மில்லி கிராமும் வைட்டமின் சி 3 மில்லிகிராமும் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி யும் உள்ளது.


    • கேரட் ஒரு காரத்தன்மை அதிகம் உள்ள கிழங்கு என்பதால் அமில உடல்வாகு உள்ளவர்கள் இதனை அதிகம் உண்ண அமில நிலை சமநிலை அடையும்.


    • கேரட்டில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளதால் கண்பார்வை குறைபாடு உள்ளவர்களும் கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும், நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் தேறி வருபவர்களும், கேரட் ஜூஸ் ஒருநாள் விட்டு ஒரு நாள் தினமும் 10 மில்லி லிட்டர் அருந்த வேண்டும்.


    • இந்த பச்சைக் கேரட் ஜூஸ் நம்முடைய குடல் சதைகளைப் பலப்படுத்தி இரத்தம் உற்பத்தியாகப் பயன்படுகிறது. பொதுவாக கேரட்டை வேகவைப்பதால் அதில் உள்ள சத்துக்கள் அழிய நேரிடுகிறது. எனவே வேகவைத்த கேரட்டைவிட பச்சைக் கேரட் உண்ணுவதே சிறந்தது.


    • கருப்பு நிறம் உள்ளவர்கள் கேரட் ஜூஸ் அடிக்கடி அருந்த அவர்களின் நிறம் சிறிது மாறுவதுடன் தோலின் கடினத் தன்மையும் உலர் தன்மையும் செம்மைப்படும். நாம் தினமும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு கேரட்டைக் கடித்து உண்டால் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத்துகள்களை வெளியேற்றுவதுடன் ஈறுகள் பலப்பட்டு பற்கள் சொத்தை ஆவதைத் தடுக்க முடியும்.


    • கேரட்டைக் கடித்து உண்பதால் உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து செரிமானத்தை அதிகரிக்கிறது. நாம் தினமும் ஒரு கேரட் உண்டு வர நம் உணவுக் குழாய்களில் தோன்றும் நோய்களாகிய குடல்புண், வயிற்றுவலி, அஜீரணம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.


    • தினமும் வெறும் வயிற்றில், துருவிய கேரட் ஒரு கப் சாப்பிட குடலில் வாழும் நூல் புழுக்கள் வெளியேறி விடும். கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் மலட்டுத் தன்மை மறையும்.


    • கேரட் ஜூஸ் உடம்பிற்குக் குளிர்ச்சி ஏற்படுத்துவதால், மதிய வேளைகளில் அருந்தலாம். கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய, நிறைய கேரட் ஜூஸ் பருகலாம். சளித்தொல்லை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்ட பின்னரே ஜூஸைக் குடிக்க வேண்டும்.


    • கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ தோலுக்கு மிக அருகில் இருப்பதால், கேரட்டில் மேல் தோலை அழுத்திச் சீவக் கூடாது. சுத்தமான தண்ணீரில் கேரட்டை நன்றாகக் கழுவிய பின்னர், துருவி மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து (நன்றாக அரைத்தால் ஜூஸ் பிழிய முடியாது) ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் ஜூஸ் பிழிந்து எடுக்க வேண்டும். மறுபடியும் சிறிது நீர் விட்டு இருக்கும் ஜூஸைப் பிழிந்து கொள்ள வேண்டும். ஜூஸில் சிறிது சர்க்கரை சேர்த்து பருகலாம் அல்லது மிளகு சீரகப் பவுடர் சேர்த்தும் அருந்தலாம்.


    • கேரட் சூப் வயிற்றோட்டத்திற்கு ஒரு சிறந்த மருந்து. 1/4 கிலோ கேரட்டை சுத்தம் செய்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்புடன் சிறிது உப்புச் சேர்த்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு இரண்டு ஸ்பூனாகக் குடிக்க வேண்டும். வயிற்றோட்டத்தின் மூலம் இழக்கப்பட்ட சோடியம், பொட்டாசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய சத்துக்களை இந்த கேரட் சூப் ஈடு செய்யும்.



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by Parasakthi; 15th Sep 2012 at 01:26 PM.
    Nishahameetha likes this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,770
    Blog Entries
    18

    Re: Carrot Medicinal Benefits

    Ellorukkum elidhaka kidaikka koodiya carrot ivallu payangalai thannullae adaikki kondirukkiratha. Migavum arumai. Carrot thindraal engal kangal oli perum Thangalin indha postai padiththaal engal arivu oli petru thigazhum madam nandri

    Parasakthi likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter