Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Facts about Tea - `தேநீர் சில உண்மை!


Discussions on "Facts about Tea - `தேநீர் சில உண்மை!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Facts about Tea - `தேநீர் சில உண்மை!

    `தேநீர் சில உண்மை!




    `டீ எனப்படும் `தேநீர் நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. நாம் பொதுவாக `சுறுசுறுப்பு பானமாக அறிந்த டீ, பல விசேஷமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பது தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.
    நாம் அன்றாடம் பருகும் `தேயிலை டீ தவிர பல்வேறு வகையான டீக்கள் உண்டு. அவற்றின் மகத்துவங்கள் இங்கே சூடான லவங்கபட்டை டீ, பெண்களுக்கு அற்புதம் நிகழ்த்தும். இது மனஅழுத் தத்துக்கு நல்லது. தளர்விலிருந்து உடம்பு விடுபட்டுச் சுதந்திரமாக உணர உதவும். மேலும், சுவாசம், செரிமானம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கும் உதவுகிறது. ஜலதோஷத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு `மசாலா டீயும், `சிலோன் டீயும் இதமளிக்கும்.
    `கிரீன் டீயில் உள்ள `பாலிபினால்கள் அல்லது `பிளேவனாய்டுகள் ஒட்டுமொத்த உடல்நலத் துக்கு நல்லது. குறிப்பாக புற்றுநோய் வராமல் தடுப்பதில். புற்றுநோய் போன்ற ஆபத்து களுக்குக் காரணம், செல்களின் சிதைவாகும். அதைத் தடுக்கும் பணியில் டீயில் உள்ள `ஆன்டிஆக்சிடன்ட்கள் உதவுகின்றன. ` முலிகை டீயில் `டேனின் இல்லை. எனவே நெருக்கடியான வாரம் அல்லது அதிகமான அழுத்தங்களின்போது முலிகை டீ அருந்த லாம். முலிகை டீயில் தேர்ந்தெடுப்பதற்கு அதிக வகைகள் உள்ளன என்பதும் மகிழ்ச் சிக்குரிய செய்தி. `இஞ்சி டீ கொஞ்சம் காரசாரமாக இருந்தாலும், இதமான உணர்வைக் கொடுக்கும். பசியைத் தூண்டும். வாந்தி உணர்வைத் தடுக்கும். அதிகமாக புத்துணர்வு அளிக்கும்- குறிப்பாக பெண்களுக்கு. `அஸ்வகந்தா டீ மனநிலையை உயர்த்தும், மனதுக்கும் உடம்புக்கும் ஓர் துடிப்பை ஏற்படுத்தும். தவிர நல்ல பலத்தைக் கொடுப்பதுடன், நோய்கள், கட்டிகள், ஞாபக இழப்பு ஆகியவற்றைத் தடுக்கும். மனநிலைக்கு ஊக்க சக்தி அளிக்கும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். டீயுடன் `ஸ்வீட் ருட் அல்லது `லீகோரைஸை சேர்த்தால் வழுக்கை, பொடுகு, பற்சிதைவு, தொண்டை புண், காசநோய், உடம்பு துர்நாற்றம், மனஅழுத்தம், சோர்வு, தூக்கமில்லாமை, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகளைக் குறைக்கும். ஏலக்காய் டீயை எவர் விரும்ப மாட்டார்? அது இதமளிக்கும், வாநதி உணர்வைத் தடுக்கும், ஜலதோஷம், இருமலுக்கு மிகவும் ஏற்றது. மனஅழுத்தத்தைக் குறைத்து உடலுக்கு புத்துயிர் அளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஏலக்காய் டீ நல்ல சுவையாகவும் இருக்கும்.

    Sumathi Srini

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: `தேநீர் சில உண்மை!

    சூடாக டீ குடிப்பவரா?




    சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!
    மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
    காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.
    தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.
    காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகை யையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். பெட் டீ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.
    காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும் உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும் என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.
    ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.
    அதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.
    ஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:
    * வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.
    * அதிகமான சூட்டுடன் டீ குடித்தால் , உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.
    * இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது.
    மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.
    * பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.
    * பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.
    * சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது.
    * மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு.
    * அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
    * வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.
    * சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.
    இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
    அதிக சூடாக டீ குடித்தால் தான் கேன்சர் வரும்; அதிக சூடாக காபி குடித்தால்? இப்படி காபி குடிப்பவர் களுக்கு கேன்சர் வாய்ப்பு அதிகரித்ததே இல்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இவர்களின் ஆய்வு முடிவுகளை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
    டாடா நிபுணர்கள்,தங்கள் ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம் சர்வே எடுத்துள்ளனர். அவர்களில் அதிக சூடாக டீ குடிப்போருக்கு கேன்சர் ஆபத்து உள்ளதை உறுதி செய்தனர். ஆண்டுக்கு, இப்படிப்பட்டவர்களில் சராசரியாக 800 பேருக்கு கேன்சர் வருவதும் தெரிய வந்துள்ளது.
    அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச கேன்சர் ஆராய்ச்சி இதழ், இன்டர்நேஷனல் கேன்சர் எபிடமாலஜியில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. அது சரி, நீங்கள் அதிக சூடாக டீ குடிப்பவரா? அப்படீன்னா, இனி குடிக்க மாட்டீங் கல்ல?

    Sumathi Srini


  3. #3
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: `தேநீர் சில உண்மை!

    Green Tea

    தினமும் ஐந்து கோப்பை பச்சைத் தேநீர்(Green Tea) அருந்தி வந்தால் உடலிலிருந்து தேவையற்ற கொழுப்பு கரையும் என்கின்றனர் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள். உடற்பயிற்சிக் கூடத்தில் அரை மணி நேரம் ஓடுவதும் ஐந்து கோப்பை தேநீர் அருந்துவதும் ஒரே அளவு கலோரிகளைக் கரைக்கும் என்பது அவர்களது ஆராய்ச்சி முடிவு.
    ஆறு வாரங்கள் நீங்கள் காபியை விரட்டி விட்டு பச்சைத் தேனீரை அருந்தி வாருங்கள் உங்கள் உடல் எடை நான்கு கிலோ குறையும் என வியக்க வைக்கிறார் மருத்துவர் நிக்கோலர் பெரிகோன்.
    அமெரிக்க புற்று நோய் ஆராய்ச்சிக் கூடம் வெளியிட்ட அறிக்கை ஒன்று பச்சைத் தேனீருக்கு புற்று நோயைத் தடுக்கும் வலிமை உண்டு என மருத்துவர் ஹான் சியோ மூலமாக மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதேபோல அமெரிக்க மருத்துவக் கழக பத்திரிகை 1996 செப்டம்பர் 13 இதழில் பச்சைத் தேநீர் இதயம் சார்ந்த நோய்களைத் தடுக்கும் வலிமை கொண்டது என ஆய்வு முடிவு வெளியிட்டிருந்தது.
    நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் அதிகப்படுத்துவதிலும், உயர் குருதி அழுத்தத்தைக் குறைப்பதிலும் தலை சிறந்தது பச்சைத் தேநீர் என்கின்றன சீன ஆய்வுகள். எல்லாவற்றுக்கும் மேலாக ஹைச்.ஐ.வி எனப்படும் எயிட்ஸ் கிருமி உடலின் டி-அணுக்களைப் பாதிக்காமல் பச்சைத் தேநீர் தடுக்கும் எனும் நிரூபிக்கப்படாத நம்பிக்கையும் மருத்துவ உலகில் நிலவுகிறது.
    உடல் சார்ந்த இத்தகைய பயன்களோடு மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்கும் வலிமை கூட பச்சைத் தேனீருக்கு உண்டு என ஒரு ஆராய்ச்சி வியக்க வைக்கிறது.

    ப்ரிய தோழி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter