Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree12Likes
  • 2 Post By divideva
  • 2 Post By divideva
  • 2 Post By divideva
  • 2 Post By sumathisrini
  • 2 Post By divideva
  • 1 Post By gulf.rajesh
  • 1 Post By sumitra

Health Benefits of Walnut - மன உளைச்சலை போக்கும் வால்நட்!


Discussions on "Health Benefits of Walnut - மன உளைச்சலை போக்கும் வால்நட்!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    divideva's Avatar
    divideva is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    DHIVYA
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Mysore
    Posts
    1,662
    Blog Entries
    24

    Health Benefits of Walnut - மன உளைச்சலை போக்கும் வால்நட்!



    விலை உயர்ந்த கட்டைகளை தரக்கூடியது அக்ரூட் மரம். மருத்துவ குணம் கொண்ட இந்த மரம் சிக்கிம், நேபாளம், ஆகிய பகுதிகளிலும் இமாலயப் பகுதிகளில் இயற்கையாக காணப்படுகிறது.

    அதிகம் காணப்படுகிறது. இந்த மரத்தின் இலை, பட்டை மற்றும் கனி போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. இந்த மரத்தில் கிடைக்க வால்நட் விதைகள் அதிக சத்து நிறைந்தவை.


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and sumitra like this.

  2. #2
    divideva's Avatar
    divideva is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    DHIVYA
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Mysore
    Posts
    1,662
    Blog Entries
    24

    re: Health Benefits of Walnut - மன உளைச்சலை போக்கும் வால்நட்!

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

    இத்தாவரத்தில் இருந்து பல வைட்டமின்கள், அமினோஅமிலங்கள், பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. வைட்டமின் டி, வைட்டமின் பி6, அஸ்கோரிப் அமிலம், சிஸ்டெயின், டிரிப்டோபேன், தயாமின், ரைபோஃபிளேவின்,நிக்கோடினிக் அமிலம், போலிக் அமிலம், பயோடின், ஜீக்ளோன்.

    வாதநோய்களுக்கு மருந்து

    இலை மற்றும் பட்டை வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. இவை தோல்நோய்கள், பால்வினைநோய், எக்ஸிமா, காசநோய், ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. கனிகள் வலுவேற்றியாகவும், வாதநோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகின்றன. காய்களின் மேல் உறை கிருமிகளை போக்க வல்லது. விதைகளை ருசியானவை. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது.


    sumathisrini and sumitra like this.

  3. #3
    divideva's Avatar
    divideva is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    DHIVYA
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Mysore
    Posts
    1,662
    Blog Entries
    24

    re: Health Benefits of Walnut - மன உளைச்சலை போக்கும் வால்நட்!

    கொழுப்பு நீக்கும் வால்நட்

    வால்நட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஓமேகா 3 அதிகம் காணப்படுகின்றன. இது வேலைப்பழுவினால் ஏற்படும் மன உளைச்சலை போக்க உதவுகிறது. இதனால் இதயநோய் பாதிப்பு குறைகிறது. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை வால்நட் தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் தடுக்கப்பட்டு மன அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வந்தால் ஆறு மாதங்களில் கெட்ட கொலஸ்ட்ரலில் பத்து சதவிகிதம் வரை குறைகிறது. இத்துடன் இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமடைகின்றன.

    இதய ஆரோக்கியம்

    ஹார்வார்டு பல்கலைக்கழகம் கொலஸ்ட்ரலைக் குறைக்க வால்நட் பருப்பு சாப்பிடுங்கள் என்று சமீபத்தில் உறுதியாகத் தெரிவித்துள்ளது. இதற்காக வால்நட் தொடர்ந்து சாப்பிட்டவர்களின் இதய ஆரோக்கியம், கெட்ட கொலஸ்ட்ரல் அளவு முதலியவற்றை ஆராய்ந்தது. குறிப்பாக, 13 குழுக்களை ஆராய்ந்து முடிவை வெளியிட்டது. இதில் வால்நட் சாப்பிட்டவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. வால்நட் அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகமாச்சே! இதனால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற சந்தேகம் எழுவது இயல்பு. வால்நட்டில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும், இரத்தத்தில் உறையாத கொழுப்பும் உள்ள பருப்பு வகை இது. நீங்கள் அதிகக் கலோரி உள்ள மற்ற உணவுகளைப் புறக்கணித்து விட்டு பயமின்றி வால்நட் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.


    sumathisrini and sumitra like this.

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,531

    Re: Health Benefits of Walnut - மன உளைச்சலை போக்கும் வால்நட்!

    வால்நட் பற்றிய உபயோகமான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி திவ்யா.

    sumitra and divideva like this.

  5. #5
    divideva's Avatar
    divideva is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    DHIVYA
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Mysore
    Posts
    1,662
    Blog Entries
    24

    Re: Health Benefits of Walnut - மன உளைச்சலை போக்கும் வால்நட்!

    Quote Originally Posted by sumathisrini View Post
    வால்நட் பற்றிய உபயோகமான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி திவ்யா.
    Welcome sis....

    sumathisrini and sumitra like this.

  6. #6
    gulf.rajesh's Avatar
    gulf.rajesh is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jul 2011
    Location
    GULF
    Posts
    297

    Re: Health Benefits of Walnut - மன உளைச்சலை போக்கும் வால்நட்!

    வாழ்நாளை கூட்டும் வால்நட்

    சுவை சற்று குறைவாக இருந்தாலும், இதை சில கேக் வகைகள் மற்றும் சாக்லெட்டில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். தொடர்ந்து சாப்பிட்டால் ஆளை மயக்கும் அளவுக்கு சுவை கொண்டதாகத் தோன்றும். ஆரோக்கியமான தூக்கத்துக்கு மூளையில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு மிகவும் அவசியம். வால்நட்டில் இயற்கையான முறையில் மெலட்டோனின் ஹார்மோன் இருப்பதால், தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் வால்நட் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் டிமென்ஷியா என்ற ஞாபக மறதி நோய்க்கான வாய்ப்பையும் இது குறைக்கிறது.
    சத்துக்கள் பலன்கள்: இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இதயத்துக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதன் மூலம் இதயம் மேலும் காக்கப்படுகிறது.

    இதயத்துக்கு மட்டுமல்ல இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது மூளைக்கும் மிகவும் நல்லது. இது மூளை நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி, நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.

    திசுக்கள் வீக்க நோய்களான ஆஸ்துமா, ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்டவற்றில் இருந்து காக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மன அழுத்தம் குறையவும் தூக்கத்துக்கும் இது உதவுகிறது. இதில் உள்ள ஒரு வகையான அமிலம் எலும்புடன் இணைந்து செயல்பட்டு, எலும்பு உறுதியாக இருக்க உதவுகிறது. ஃபோலிக் அமிலம், ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் இதில் இருப்பதால், கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளலாம்.
    இதில் பி7 வைட்டமின் என்ற பயோடின் உள்ளதால், முடி உதிர்வு பிரச்னையில் இருந்து தடுத்து முடி வளர்ச்சிக்கும் உறுதித்தன்மைக்கும் வழிவகுக்கிறது. மேலும், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால், சருமத்தை ஃப்ரீராடிக்கல்ஸ் தாக்குதலில் இருந்து காத்து, சுருக்கம், கருவளையம் ஏற்படுவதைத் தடுத்து, முதுமையைத் தாமதப்படுத்துகிறது.

    தேவை: தினசரி 2 வால்நட் சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி பெருகுவதுடன் அதன் ஆரோக்கியம், நீ்ந்திக் கடக்கும் திறன் மேம்படும். மொத்தத்தில் ஒருவரின் வாழ்நாளைக் கூட்டச் செய்யும் ஆற்றல் வால்நட்டுக்கு உண்டு.

    sumitra likes this.

  7. #7
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Health Benefits of Walnut - மன உளைச்சலை போக்கும் வால்நட்!

    very good information! thank you!

    gulf.rajesh likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter