Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree19Likes
  • 5 Post By naliniselva
  • 4 Post By rakul
  • 4 Post By jv_66
  • 3 Post By rakul
  • 2 Post By jv_66
  • 1 Post By sumitra

Tips to remove pimple scars - பருக்களின் ஏற்படும் தழும்புகள் மற&#


Discussions on "Tips to remove pimple scars - பருக்களின் ஏற்படும் தழும்புகள் மற&#" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Tips to remove pimple scars - பருக்களின் ஏற்படும் தழும்புகள் மற&#

    பருக்களின் ஏற்படும் தழும்புகள் மறைய வேண்டுமா?

    பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் ஓரிரு வடுக்களை நிச்சயமாக போக்க முடியும். முதலில் வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள். நகம் பட்டாலே வடு விழுந்துவிடும்.

    அதனை உடனடியாக போக்க முடியாது. சிறிது காலம் பிடிக்கும். சிலருக்கு பருக்கள் வந்து முகத்தில் சிறிய பள்ளங்களே ஏற்பட்டிருக்கும். முகப்பரு வந்தால் அதனை நீக்குவதற்கு முன்பு, ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுத்த பிறகு அதில் கை வைப்பது நல்லது. இதனால் பருக்களின் வழியாக ரத்தம் வெளியாவது தவிர்க்கப்படுகிறது.

    பொதுவாக பருக்கள் வந்தால் அது முற்றிய நிலையில் அதில் இருக்கும் வெள்ளையான திரவத்தை எடுத்து விடுவது மிகவும் முக்கியம். அதிலும் மற்ற இடங்களில் அவை படாமல் எடுக்க வேண்டியதும் அவசியமாகிறது. மேலும், பருவை நீக்குவது என்பதை கவனமாக செய்ய வேண்டும். பருவை கைகளால் கிள்ளி எடுத்துவிடுகிறோம்.

    அதில் இருந்து வெள்ளையான திரவம் வெளியான பிறகு ரத்தம் வரும். அதனை துடைத்துப் போட்டுவிட்டு அப்படியே விட்டுவிடக் கூடாது. அப்படி விட்டுவிட்டால்தான் பருக்கள் பரவுகிறது. பருக்கள் வந்தால் அதனை நீக்கியதும் உடனடியாக அதனை சுத்தப்படுத்திவிட்டு அதில் ஏதாவது ஒரு பேஸ் பேக்கை (க்ரீம்) போட வேண்டும்.

    அப்படி போடாவிட்டால், பருவில் ஏற்பட்ட துளைக்குள் தூசு, துகள்கள் போய் பெரிய பிரச்சினையாகிவிடும். முகப்பரு வந்தவர்கள் அதிலும், அதிகமாக முகப்பருவினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது முகத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். பருக்கள் வருபவர்கள் எந்த விதமான க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது.

    சிலரது முகத்தில் விரலைக் கூட வைக்க முடியாது. அந்த அளவிற்கு வலி எடுக்கும். அவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. பருவை மட்டும் நீக்கிவிட்டாலும், உள்ளுக்குள் இருந்து சீழ் போன்ற ஒன்று வந்து கொண்டே இருக்கும்.

    அதனை எவ்வளவுதான் எடுக்க முடியும். ஒரு வேளை அது சருமத்திற்கு அடியிலேயே தங்கிவிட்டாலும் பிரச்சினையாகிவிடும். அதிகமாக எடுத்தாலும் பரு இருந்த இடத்தில் வடு ஏற்பட்டுவிடும். எனவே பருவை அழகுக் கலை நிபுணரிடம் சென்று நீக்கிக் கொள்வதை விட, அதிகமாக பரு இருப்பவர்கள் ஒரு மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது.

    பருக்களினால் ஏற்பட்ட வடு நிச்சயமாக போகும். அதற்கு ஒரு நீண்ட சிகிச்சை உள்ளது. முதலில் பரு உள்ளவர்கள் பேஷியல் செய்து கொள்ளவேக் கூடாது. ஒருவரது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருந்தால் பரு வரும்.

    மேலும், பேஷியலின் போது பயன்படுத்தும் க்ரீம்கள் அனைத்திலும் அதிகப்படியான எண்ணெய் பசைதான் இருக்கும். எனவே அவரகளது சருமத்தை பேஷியல் மேலும் சிக்கலாக்கும். முகத்தில் அதிகமான பருக்கள் இருப்பவர்கள் அவசியமாக பேஷியல் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தால் முதலில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவிட்டு பிறகு பேஷியல் செய்து கொள்ளலாம். ப்ளீச் செய்யலாம். ஏனெனில் ப்ளீச் செய்வதால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீக்கப்பட்டுவிடும். எனவே ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by sumathisrini; 24th Mar 2013 at 11:02 AM.


    நளினி



  2. #2
    rakul is offline Friends's of Penmai
    Real Name
    Archana Aravindan
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bahrain
    Posts
    203

    Re: Tips to remove pimple scars - பருக்களின் ஏற்படும் தழும்புகள் மற&am

    அன்பு தோழி,
    நீங்கல் மிகவும் நல்ல குறிப்பு குடுத்து இருக்கிறீர்கள்,எனக்கு இப்பொழுது பருக்கள் இல்லை,ஆனால் பருக்கள் விட்டு சென்ற குழிகள்(வடுக்கள்)உள்ளது,அதற்கு ஏதாவது வைத்தியம் இருந்தால் கூற முடியுமா?


  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Tips to remove pimple scars - பருக்களின் ஏற்படும் தழும்புகள் மற&am

    Quote Originally Posted by rakul View Post
    அன்பு தோழி,
    நீங்கல் மிகவும் நல்ல குறிப்பு குடுத்து இருக்கிறீர்கள்,எனக்கு இப்பொழுது பருக்கள் இல்லை,ஆனால் பருக்கள் விட்டு சென்ற குழிகள்(வடுக்கள்)உள்ளது,அதற்கு ஏதாவது வைத்தியம் இருந்தால் கூற முடியுமா?



    அர்ச்சனா , இதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன .

    முதல் முறையில், ஒரு bowlஇல் , 2 எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து , ஒரு சிறிய cotton உருண்டையால் , அதைத் தொட்டு , மெதுவாக அந்த வடுக்களின் மீது தடவவும் .

    இது சில சமயம் குத்தும் வலியோ , எரிச்சலோ ஏற்படலாம் . ஆனால், 1 அல்லது 2 நாட்களுக்கு இது இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை . பிறகு ஒன்றும் ஆகாது. ஆனால், மேலும் சிவப்பாக ஆனால், இந்த முறை உங்கள் தோலுக்கு ஒத்துக் கொள்ள வில்லை என்பதால் விட்டு விடுங்கள்.

    இரண்டாவது முறை, மிக எளிது.

    ALOE VORA GEL, இதைத் தடவி வந்தால், நாளடைவில் அந்த வடுக்கள் மாயமாக மறைந்து விடும் .

    Olive oil massage கூட செய்யலாம் .


    Jayanthy





  4. #4
    rakul is offline Friends's of Penmai
    Real Name
    Archana Aravindan
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bahrain
    Posts
    203

    Re: Tips to remove pimple scars - பருக்களின் ஏற்படும் தழும்புகள் மற&am

    டியர் ஜெயா,
    உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி,நான் டிரை செய்து பார்க்கிறேன்,தினமும் லெமன் அப்ளை செய்தால் ஸ்கின் டிரை ஆகாதா?

    jv_66, sumitra and Anusekaran like this.

  5. #5
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Tips to remove pimple scars - பருக்களின் ஏற்படும் தழும்புகள் மற&am

    Quote Originally Posted by rakul View Post
    டியர் ஜெயா,
    உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி,நான் டிரை செய்து பார்க்கிறேன்,தினமும் லெமன் அப்ளை செய்தால் ஸ்கின் டிரை ஆகாதா?

    அர்ச்சனா ,

    லெமன் அப்ளை செய்து ஒரு மணி அல்லது அரை மணி நேரம் போல் வைத்திருந்து முகம் கழுவி விட்டால் ஒன்றும் ஆகாது.

    இதற்கு முன்பு, acne cleanser அப்ளை செய்து விட்டு , லெமன் ஜூஸ் அப்ளை செய்யுங்கள்


    sumitra and naliniselva like this.
    Jayanthy





  6. #6
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Tips to remove pimple scars - பருக்களின் ஏற்படும் தழும்புகள் மற&am

    உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு மட்டும் தென்படுமே.. அந்த தழும்பு மறைய என்ன செய்யலாம்?
    முகத்தில் பரு வந்தால் அதனைக் கிள்ளக் கூடாது.
    நகம் படக்கூடாது ஏனென்றால் அதுவே பரு மறைந்த பிறகு கருப்பு தழும்பாக மாறி விடும் .இதே போல்
    அம்மை நோய்,மற்றும் சூட்டுக் கொப்புளங்கள் முகத் தில் வந்தாலும் சிலருக்கு முகத்தில் தழும்பு நீண்ட நாட்களுக்கும் அப்படியே இருக்கும்.
    இதற்கான சித்த மருத்துவ முறை தீர்வுகள் :
    1 – முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளி யைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்
    பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின் மேல் போட்டு வரவும் .
    தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும் புள்ளி மறைந்து விடும்.
    2 – முகப் பரு – கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :
    1 – கோபி சந்தனம் – ஒரு டீ ஸ்பூன் அளவு
    2 – பாதாம் பருப்பு – மூன்று (நீரில் ஊற வைத்தது)
    3 – தயிர் – 2 – டீ ஸ்பூன்
    4 – எலுமிச்சை சாறு – 2 – டீ ஸ்பூன்
    இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதி களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.
    இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப் பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு
    பெரும்.
    3 -முகத்தில் தழும்புகள் – தீப்புண் தழும்புகள் மறைய :
    அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரி யாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

    courtesy: www.tamilcnn,org

    naliniselva likes this.

  7. #7
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Tips to remove pimple scars - பருக்களின் ஏற்படும் தழும்புகள் மற&am

    wow...friends....jv ka and sumi mam...super ...tips...thanks for sharing ...
    rakul...welcome dear....



    நளினி



  8. #8
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Tips to remove pimple scars - பருக்களின் ஏற்படும் தழும்புகள் மற&am

    hiii...friends....uv-rays damaged skin, or sunburn ithaala vantha block mark ku tips sollunga pa....parlor la onnum panna mudiyathunu sollitanga...dermatologist sunscreen prescribe pannar 1 year use pannen ...but no use.... so pls....



    நளினி



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter