Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 6 Post By silentsounds
  • 2 Post By sumitra
  • 2 Post By jv_66

Health bits - ஹெல்த் பிட்ஸ்


Discussions on "Health bits - ஹெல்த் பிட்ஸ்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Health bits - ஹெல்த் பிட்ஸ்



    ஹெல்த் பிட்ஸ்



    குடை நல்லது


    மழையைப் போலவே வெயிலுக்கும் குடை பிடிப்பது நல்லதா? ஜாமா டெர்மடாலஜி அமைப்பு, குடைகளை ஆராய்ச்சி செய்துவிட்டு ஆமாம் என்றிருக்கிறது. சூரியன் வெளிப்படுத்தும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களை பெரும்பாலான குடைகள் வடிகட்டி, பாதுகாப்பு தருகின்றனவாம். டார்க் நிறத்தில் இருக்கும் குடைகளே இதை சிறப்பாகச் செய்கின்றன; குறிப்பாக கறுப்புக் குடை 90 சதவீத கதிர்வீச்சைத் தடுக்கிறது.


    ஜூஸ் நல்லது


    உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறது ஹைப்பர்டென்ஷன் என்ற மருத்துவ இதழ். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு 250 மி.லி பீட்ரூட் ஜூஸ் கொடுத்து பிரிட்டனில் ஆராய்ச்சி நடத்தினர். 24 மணி நேரத்தில் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்தது.


    பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக உள்ளது. வேர்கள் மூலம் மண்ணிலிருந்து இது நைட்ரேட்டைப் பெறுகிறது. இந்த நைட்ரேட் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. இது ரத்தக்குழாய்களை விரியச் செய்து, ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. எனவே ரத்த அழுத்தம் குறைகிறது. கோஸ், பீன்ஸ், கீரைகள் போன்ற காய்கறிகளும் உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகின்றன.


    இசை நல்லது


    குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் தாலாட்டு பாடல்களாலும், இனிமையான இசையாலும் பலன் பெறுகின்றன என்கிறது பீடியாட்ரிக்ஸ் இதழ். அமெரிக்காவின் 11 மருத்துவமனைகளில் 272 குறைப்பிரசவ குழந்தைகளிடம் ஆராய்ச்சி நடந்தது. வழக்கமான சிகிச்சைகளோடு தாலாட்டு பாடல், பெற்றோரே பாடிய பாட்டு, இதயத்துடிப்பு போன்ற ஓசை அடங்கிய இசை என பலவற்றை மாற்றி மாற்றி குழந்தைகளைக் கேட்க வைத்தார்கள். இசை கேட்ட குழந்தையின் இதயத் துடிப்பு முதல் உடல் வளர்ச்சி வரை எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருந்ததாம்!


    புதுசு நல்லது


    ரத்த வங்கிகள், தாங்கள் தானம் பெறும் ரத்தத்தை அதிகபட்சமாக 6 வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்துகின்றன. ஆனால், இவ்வளவு காலம் வைத்திருப்பதே அதிகம். மூன்று வாரங்களுக்குள் அதை இன்னொருவர் உடலுக்குள் செலுத்திவிட வேண்டும் என்கிறது அனெஸ்தீசியா அண்டு அனால்ஜெஸியா இதழ். மூன்று வாரங்களைத் தாண்டியதுமே ரத்த சிவப்பணுக்கள், மிகச்சிறிய ரத்த நாளங்களின் திசுக்களுக்குள் ஊடுருவி ஆக்சிஜனைக் கொடுக்கும் திறனை இழந்து விடுகின்றனவாம். இதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

    Similar Threads:

    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Health bits - ஹெல்த் பிட்ஸ்

    Wonderful information about the goodness of Umbrella, Juice, Music and fresh blood (maximum three weeks old ). thank you sir

    silentsounds and datchu like this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health bits - ஹெல்த் பிட்ஸ்

    நல்லதொரு பகிர்வு . மிக்க நன்றி குணா

    silentsounds and datchu like this.
    Jayanthy





  4. #4
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Health bits - ஹெல்த் பிட்ஸ்

    useful tips.....


  5. #5
    gunalakshmi's Avatar
    gunalakshmi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    Thiruvannamalai
    Posts
    58

    Re: Health bits - ஹெல்த் பிட்ஸ்

    Intersting and useful informations............... thanks for sharing brother......

    Ungal Thozhi
    Gunatamil


  6. #6
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Health bits - ஹெல்த் பிட்ஸ்

    Super Health bits. Share more.


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter