Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By tnkesaven
  • 1 Post By sumathisrini
  • 1 Post By shrimathivenkat

Health benefits of vegetables - காய்கறிகள் வாங்கும்போது


Discussions on "Health benefits of vegetables - காய்கறிகள் வாங்கும்போது" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Health benefits of vegetables - காய்கறிகள் வாங்கும்போது

    காய்கறிகளில் உள்ள சத்துக்களையும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்


    கேரட்


    பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இதில் நிறைய இருக்கின்றன. பொட்டாஷியம், ஃபோலிக் அமிலம், கோலின், கால்ஷியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச் சத்தும் இதில் உண்டு.

    கண், தோல் மற்றும் எலும்பு உறுதிபடவும், ரத்த விருத்திக்கும் மிகவும் நல்லது.


    குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயோதிகர்கள் எல்லோரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிட வேண்டும். துருவியும் சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து அப்படியே சாப்பிடலாம்.


    பீன்ஸ்


    வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. ஓரளவு பொட்டாஷியம், துத்தநாகம், மிகக் குறைந்த அளவு கலோரி ஆகியவை இதில் இருக்கின்றன. அதிக நேரம் வேகவைத்தால் சத்துக்கள் குறைந்துவிடுவதால், மூடி போட்டு அரை வேக்காட்டில் வேக வைத்து சாப்பிடுவது நல்லது.
    ரத்தவிருத்திக்கு நல்லது,
    கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பொரியல் செய்து சாப்பிடலாம்.
    மலச் சிக்கல் பிரச்னைக்குத் தீர்வு தரும்.
    சிறுநீரகக் கல்லடைப்பு இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம்.


    வெண்டைக்காய்


    அதிக அளவு ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, பொட்டாஷியம் ஓரளவும், மாவுச்சத்து, புரதச்சத்தும் இரும்புச்சத்து, பீட்டோ கரோட்டின் குறைந்த அளவும் இருக்கின்றன.


    உடல் செயல்பாடு நல்லபடியாக இருக்கவும், ரத்த விருத்திக்கும் உதவும்.
    எல்லோருக்கும் ஏற்ற காய்.
    கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சாப்பிடலாம்.
    வதக்காமல் மூடி போட்டு அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிட வேண்டும்.
    nandri:"doctor vikatan/FBIFBI

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini likes this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Health benefits of vegetables - காய்கறிகள் வாங்கும்போது

    Nice post sir, thanks.

    tnkesaven likes this.

  3. #3
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Health benefits of vegetables - காய்கறிகள் வாங்கும்போது

    nice info sir.

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter