Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 5 Post By vijivedachalam
  • 1 Post By Subhasreemurali

Health benefits of Tomato - தக்காளியில் உள்ள வியக்கத்தக்க நன்ம&


Discussions on "Health benefits of Tomato - தக்காளியில் உள்ள வியக்கத்தக்க நன்ம&" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Health benefits of Tomato - தக்காளியில் உள்ள வியக்கத்தக்க நன்ம&

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பும் ஒரு காய் வகை தான் தக்காளி. இதில் உள்ள சிறப்பம்சமே இதனை பச்சையாகவே உண்ணலாம். அப்படிப்பட்ட தக்காளி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது அதன் இனிப்பு மற்றும் சுவை தான். அது உடல்நலத்திற்கு நன்மையை விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியும் தானே. சரி அது ஏன் ஆரோக்கியமான உணவாக விளங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?...

    அதிலுள்ள வைட்டமின் சி சத்தின் காராணமாகவா? குறைந்த கலோரிகள் உள்ளதாலா? கொழுப்பு இல்லாததாலா? ஆம்! ஆம்!! ஆம்!!! ஆனால் அதையும் தாண்டி இன்னமும் கூட சில காரணங்கள் உள்ளது. சரி, தக்காளி ஏன் ஆரோக்கியமான தேர்வாக உள்ளது என்பதை பற்றி பார்க்கலாமா? சிவந்த, பழுத்த தக்காளியை ஒரு கப் (150 கிராம்) அளவிற்கு உண்ணும் போது, போதுமான அளவு வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் கிடைக்கும்.

    இயற்கையாகவே தக்காளியில் சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கிறது. உயிர்ச்சத்து பி1, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரமும் தக்காளியில் உள்ளதால், அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக நிற்கும்.

    இது போக 150 கிராம் தக்காளியில், 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினமும் பரிந்துரைக்கப்படும் அளவில் 7 சதவீத நார்ச்சத்து இதில் இருந்தே கிடைத்துவிடுகிறது. தக்காளியில் நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளது. அதனால் அது வயிற்றையும் நிரப்பிவிடும். மேலும் இரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் தக்காளி காக்கும். சத்தான ஊட்டச்சத்தின் கலவையாக தக்காளி விளங்கினாலும், அதையும் மீறி இன்னும் இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது.

    1.வலுவான எலும்புகள்


    வலுவான எலும்புகள் பெறுவதற்கு தக்காளி பெரிதும் உதவும். தக்காளியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்பை திடமாக வைத்து, எலும்புகளில் ஏற்படும் கோளாறுகளையும் சரிசெய்யும். மேலும் இதிலுள்ள லைகோபீன், எலும்பின் பொருண்மையை மேம்படுத்தும். எலும்புப்புரை நோய்களை எதிர்த்து போராடவும் இது உதவும்.

    2.புற்றுநோய்க்கு எதிராக போராடும்

    இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் குணத்தை கொண்டவ. மீண்டும் லைகோபீன் தான் இதற்கும் துணை புரிகிறது. அதிலும் புரோஸ்டேட் புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வயிற்று புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களில் இருந்து காக்கும். அணுக்களை பாதிப்படையச் செய்யும் இயக்க உறுப்பு கோளாறுகளை எதிர்த்து போராடும் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் தக்காளியில் உள்ளது.

    3.நீரிழிவு

    இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் தக்காளி உதவுகிறது. ஏனெனில் தக்காளியில் குரோமியம் வளமையாக உள்ளதால், அது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

    4.பார்வை கோளாறு

    தக்காளி கண் பார்வையையும் மேம்படுத்தும். தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்தி மாலை கண் வியாதி வராமல் தடுக்கும். மேலும் இது குணப்படுத்த முடியாத கோளாறான மாக்குலர் டி-ஜெனரேஷன் வரும் ஆபத்தையும் தடுக்கும்.

    5.பொலிவான கூந்தல்

    கூந்தலைக் கூட தக்காளி அழகாக காட்ட உதவும். தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும். கூந்தல் உதிர்தலுக்கு தக்காளி உதவவில்லை என்றாலும் கூட, இருக்கும் கூந்தலை அழகாக காட்ட உதவும்.

    6.சிறுநீரக கற்கள் மற்றும் பித்தக்கற்கள் உருவாவதை தடுக்கும்

    சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தக்கற்கள் உருவாவதையும் தக்காளி தடுக்கும். அதிலும் தக்காளியை கொட்டை இல்லாமல் உண்ணுபவர்களுக்கு, சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தக் கற்கள் உருவாவது தடைபடும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.

    7.கடுமையான வலி

    கடுமையான வலிகளுக்கு தக்காளி ஒரு நிவாரணியாக விளங்குகிறது. லேசானது முதல் கடுமையான வலியை (கீல்வாதம் அல்லது முதுகு வலி) சந்திக்கும் லட்சக்கணக்கான மக்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் தக்காளி உங்களுக்கு உதவி புரியும். தக்காளியில் உள்ள பயோஃப்ளேவோனாய்ட்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் அதிகமாக உள்ளதால், அழற்சி ஏற்படாமலும் தடுக்கும்.

    8.எடையை குறைக்க...

    தக்காளி உடல் எடையை குறைக்க உதவும். எனவே எடையை குறைக்க டயட்டில் இருந்தால், கண்டிப்பாக தினமும் பல தாக்காளிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். சிறந்த உணவாக விளங்கும் இது, சாலட் மற்றும் சாண்ட்விச்சாகவும் விளங்கும். தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், அவை எடையை குறைக்க உதவுவதோடு, வயிற்றையும் நிறைக்கும். மேலும் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவாகவும் இது விளங்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    life is so beautiful....

  2. #2
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: தக்காளியில் உள்ள வியக்கத்தக்க நன்மைகள

    useful info viji.........


    sumitra likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: தக்காளியில் உள்ள வியக்கத்தக்க நன்மைகள

    Wonderful information about Tomato. thank you!


  4. #4
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: தக்காளியில் உள்ள வியக்கத்தக்க நன்மைகள

    nice info viji.


  5. #5
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: தக்காளியில் உள்ள வியக்கத்தக்க நன்மைகள

    Thank u Sumitra Akka,subha Akka ,shri akka

    life is so beautiful....

  6. #6
    poovizi's Avatar
    poovizi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    305

    Re: தக்காளியில் உள்ள வியக்கத்தக்க நன்மைகள

    hi friend.thank u for the useful info


  7. #7
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Health benefits of Tomato - தக்காளியில் உள்ள வியக்கத்தக்க நன்

    Very useful info Viji, thanks.


  8. #8
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Health benefits of Tomato - தக்காளியில் உள்ள வியக்கத்தக்க நன்

    Good info Viji


  9. #9
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health benefits of Tomato - தக்காளியில் உள்ள வியக்கத்தக்க நன்

    நல்ல பகிர்வு விஜி

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter