ஞாபக மறதி எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. கடைக்குப் போய் வாங்க
வேண்டியதை மறந்து விடுவோம், உடன் பணிபுரிபவர்களின் கணவரின் பெயரை மறந்து விடுவோம் அல்லது வீட்டுத் திறப்பை வைத்த இடத்தை மறந்துவிடுவோம்.

இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் பிரச்சினை இல்லை. உண்மையிலேயே 20 வயதிலிருந்தே இந்தப் பிரச்சினை ஆரம்பமாகிவிடுகிறது.

1.காலை உணவில் கவனமெடுங்கள் உணவில் கார்போஹைட்ரேட்டினை தவிர்ப்பது ஞாபக சக்தியைக் குறைக்கும் என Tufts பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. உங்களுடைய மூளை செல்களுக்கு கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறது. இது தான் குளுகோஸாக மாற்றப்படுகிறது என Tufts பல்கலைக்கழக உளநலப் பேராசிரியர் ரொபின் கனரெக் தெரிவித்துள்ளார்.

தானியங்கள் அடங்கிய உணவுப்பொருட்களை தெரிவு செய்யுங்கள். அவை மிக
தாமதமாகவே ஜீரணமடையக் கூடியவை. எனவே அவை உடலுக்குத் தேவையான குளுக்கோஸை வழங்குகின்றன.

2. வேலையைத் தொடங்குவதற்கு முன்னர் உடற்பயிற்சி செய்யுங்கள்
உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதன் மூலம் உடலுக்குத் தேவையான அளவு குளுகோசும் வினைவேகமும் கிடைக்கிறது.
யோகா அல்லது நடனப் பயிற்சி போன்றவற்றை அன்றாடம் செய்வதை வழமையாக்கிக் கொள்ள வேண்டும்.

3. கணணியில் எழுத்துருக்களை மாற்றுங்கள் நீங்கள் தினமும் ஒரே எழுத்துருவினைப்(Font) பயன்படுத்தி வருபவராக இருந்தால் வேறொரு எழுத்துருவை மாற்றிப் பயன்படுத்துங்கள்.

இவ்வாறு எழுத்துருக்களை மாற்றுகின்ற போது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் உங்கள் மூளை வேலையை மையப்படுத்தி செயற்பட ஆரம்பிக்கும்.
நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் எழுத்துருவை திடீரென மாற்றிப்
பயன்படுத்திப் பாருங்கள். நீங்கள் அவதானிக்காது விட்டாலும் உங்கள் மூளை அதை உணர்ந்து கொள்ளும்.

4. மதிய உணவு இடைவேளையின் போது இணையத்தள தேடல்களை ஆரம்பியுங்கள் ஒரு மணி நேரமாவது இணையத்தில் உங்களுக்குப் பிடித்த ஏதேனுமொன்று குறித்து தேடிப் பார்ப்பது short-term memory இனை கட்டுப்படுத்தும்.

Frontal Lobe (முன் காது மடல்) இனைத் தூண்டி ஊக்கமளிக்கிறது என லொஸ்
ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

5. உங்கள் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ள இடத்தைக் கண்ணோக்குங்கள்
உங்கள் வாகனத்தை எங்கே நிறுத்தி வைத்தீர்கள் என்பதை அடிக்கடி மறந்துவிடுகின்றீர்களா?

உங்கள் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ள இடத்தை நீங்கள் நிற்கின்ற
இடத்திலிருந்து அரை வினாடிக்கு ஒரு முறைப் படி தொடர்ந்து 30
விநாடிகளுக்குப் பாருங்கள்.

இந்தப் பயிற்சி உங்கள் நீண்ட நேர ஞாபகசக்தியினை 10 வீதம் வரை
அதிகரிக்கும் என இங்கிலாந்து மான்செஸ்லர் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

6.சற்று சிரியுங்கள் சிரிப்பது நல்லது அது உங்கள் மூளைக்கும் நல்லது.
நீங்கள் சிரிக்காத நேரங்களில் உங்கள் பல்முரசுகளில் உள்ள பக்டீரியாக்கள்
இரத்த ஓட்டத்துடன் கலந்துவிடுகிறது என நியுயோர்க் பல்கலைக்கழகப்
பேராசிரியர் ஜொனத்தன் பி.லெவின் விளக்கியுள்ளார்.

இரத்த ஓட்டத்துடன் கலந்த இந்த பாக்டீரியாக்கள் மூளையின் சக்தியைப் பாதிக்கக்கூடும். எனவே தாரளமாகச் சிரியுங்கள்.

Similar Threads: