Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree55Likes

The benifits of adding Ghee with diet


Discussions on "The benifits of adding Ghee with diet" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    The benifits of adding Ghee with diet

    உணவில் நெய்யை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!


    The benifits of adding Ghee with diet-ghee_040312114403_041212010245.jpg

    இந்தியாவில் உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் நெய். இந்த நெய்யானது வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இத்தகைய நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இதனை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்பதால் தான். இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான் ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுப்போன்று நெய்யில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. அதே சமயம் இதில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். இங்கு நெய்யை உணவில் சேர்ப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை உங்களுக்காக நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து நெய்யின் உண்மையான நன்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். செரிமான மண்டலம் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். வைட்டமின்கள் அதிகம் நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன. அதில்




    வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள். இதயத்திற்கு நல்லது நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். கொலஸ்ட்ரால் மற்றோரு ஆச்சரியமான நன்மை என்னவென்றால், நெய்யானது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். எப்படியெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும். தசைகளுக்கு நல்லது வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதாவதால் ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். லாக்டோஸ் சகிப்புத்தன்மை நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும். நெஞ்செரிச்சல் பெரும்பாலானோர் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள் இதற்கு உள்ளாவார்கள். ஆகவே இப்படி நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, 1 டேபிள் ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் உடனே தணியும்.

    Similar Threads:

    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: The benifits of adding Ghee with diet

    நீரில்லா நெற்றி பாழ்,...நெய் இல்லா உண்டி பாழ், ....நெய்யை உருக்கி தான் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும் நீர் கருக்கி,மோர் பெருக்கி,நெய் உருக்கி .....[ஔவையார்]


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #3
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: The benifits of adding Ghee with diet

    இத்தனை நாள் தப்பாக நினைத்துக்கொண்டு இருந்த ஒரு விஷயத்தை இல்லேன்னு சொல்லி உண்மையை விளக்கி சொன்னதுக்கு நன்றி அண்ணா...

    ஹப்பா .... கொலஸ்ட்ரால் சேரும்னு பயம் இல்லாம இனிமே நெய் சாப்பிடலாம்....!!


  4. #4
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: The benifits of adding Ghee with diet

    தேனு, நல்ல பிராண்ட் பார்த்து வாங்கவும் அல்லது நல்ல வெண்ணெய் வாங்கி நெய் காய்ச்சி சாப்பிடு.குறிப்பாக நெய்யை உருக்கி யூஸ் பண்ணு.


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #5
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: The benifits of adding Ghee with diet

    Quote Originally Posted by datchu View Post
    தேனு, நல்ல பிராண்ட் பார்த்து வாங்கவும் அல்லது நல்ல வெண்ணெய் வாங்கி நெய் காய்ச்சி சாப்பிடு.குறிப்பாக நெய்யை உருக்கி யூஸ் பண்ணு.

    எனக்கு இங்க லக்ஷ்மி brand ஒன்னு கிடைக்கும் Aunty... பசு நெய்...
    அதைதான் வாங்குறோம்... அது நல்லதா கெட்டதானு தெரியலை...

    நெய்யை உருக்கனுமா... அப்படினா எப்படி Aunty.... நான் நெய் வாங்கிட்டு வந்து அப்படியே use பண்ண ஆரம்பிச்சிடுவேன்....


  6. #6
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: The benifits of adding Ghee with diet

    நெய்யை பற்றிய தேவையான தகவல்...இனி பயம் இல்லாம உபயோகிக்கலாம். நன்றி அண்ணா

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  7. #7
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: The benifits of adding Ghee with diet

    Quote Originally Posted by thenuraj View Post
    எனக்கு இங்க லக்ஷ்மி brand ஒன்னு கிடைக்கும் Aunty... பசு நெய்...
    அதைதான் வாங்குறோம்... அது நல்லதா கெட்டதானு தெரியலை...

    நெய்யை உருக்கனுமா... அப்படினா எப்படி Aunty.... நான் நெய் வாங்கிட்டு வந்து அப்படியே use பண்ண ஆரம்பிச்சிடுவேன்....
    தேனு,

    நாங்க என்ன பண்ணுவோம்னா ஊர்லேர்ந்து ரெண்டு மூணு பாட்டில் -ல நெய்ய காச்சி எடுத்திட்டு வந்திடுவோம். நம்ம ஊர்ல கிடைக்கற ஆவின் நெய். தேவைக்கேற்ப எடுத்திட்டு உபயோகப் படுத்த வேண்டியது. மீதி ப்ரிஜ்-ல இருக்கும்.

    நெய்ய உருக்கனும்னா - நெய்ய ஹிட் செஞ்சு வாட்டரியா விட்டுக்கறது.
    சரி தானே மைதி மா

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  8. #8
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: The benifits of adding Ghee with diet

    நெய் பாட்டிலில்/பாக்கெட்டில் உறைந்து இருக்கும் ஒரு பேஸ்ட்/விழுது போல இருக்கும் .உன் அப்போதைய தேவைக்கு ஏற்ப ஸ்பூனில் எடுத்து வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் சூடு பண்ணால் நெய் இளகி தண்ணீர்/எண்ணை போல ஆகும். அது தான் நெய்யை உருக்குதல். Ghee should not be consumed as solid/paste. Fat contents are more in solid stage and it will not melt with our body temp. to burn the unwanted fat.


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #9
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: The benifits of adding Ghee with diet

    Quote Originally Posted by laddubala View Post
    தேனு,

    நாங்க என்ன பண்ணுவோம்னா ஊர்லேர்ந்து ரெண்டு மூணு பாட்டில் -ல நெய்ய காச்சி எடுத்திட்டு வந்திடுவோம். நம்ம ஊர்ல கிடைக்கற ஆவின் நெய். தேவைக்கேற்ப எடுத்திட்டு உபயோகப் படுத்த வேண்டியது. மீதி ப்ரிஜ்-ல இருக்கும்.

    நெய்ய உருக்கனும்னா - நெய்ய ஹிட் செஞ்சு வாட்டரியா விட்டுக்கறது.
    சரி தானே மைதி மா
    Yes.. yes.. take a required quantity, then heat and use it as liquid.


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #10
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: The benifits of adding Ghee with diet

    Quote Originally Posted by datchu View Post
    நெய் பாட்டிலில்/பாக்கெட்டில் உறைந்து இருக்கும் ஒரு பேஸ்ட்/விழுது போல இருக்கும் .உன் அப்போதைய தேவைக்கு ஏற்ப ஸ்பூனில் எடுத்து வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் சூடு பண்ணால் நெய் இளகி தண்ணீர்/எண்ணை போல ஆகும். அது தான் நெய்யை உருக்குதல். Ghee should not be consumed as solid/paste. Fat contents are more in solid stage and it will not melt with our body temp. to burn the unwanted fat.

    அப்படியா...
    ஐயோ இத்தனை நாள் நான் அப்படியே சாப்பிடுவேன் Aunty..
    இனிமே மாத்திக்கிறேன்...
    சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் Aunty...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter