Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By silentsounds

Awarness about Drinking Water...


Discussions on "Awarness about Drinking Water..." in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Awarness about Drinking Water...

    நீர் குடிக்கும் நீர் நல்ல நீரா? நிதானமா யோசியுங்க!


    'குடிநீரிலுள்ள சத்துக்களின் அளவை பொதுமக்கள் பரிசோதித்துக்கொள்வது நல்லது' என்று, நீர் மேலாண்மை தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர். தண்ணீர் சிக்கனம் குறித்து,பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு பெறாமல் உள்ளனர். போதியளவில் குடிநீர் கிடைக்காதது, கலங்கலாக நீர் வருவது போன்றவை, பொதுமக்களை வாட்டும் பிரச்னையாக உள்ளது. நீர் மேலாண்மை குறித்து, கிராமங்கள் தோறும் எடுத்துச் செல்லும், 'எய்ம்' தொண்டு நிறுவன, நிர்வாகஅறங்காவலர் திருநாவுக்கரசு கூறியதாவது:


    நீர் என்பது, நிறம், மணம், கலங்கல் இல்லாமல் இருக்க வேண்டும். விநியோகிக்கப்படும் நீரை சுத்தமாக இல்லாதபட்சத்தில், அதன் உண்மைத் தன்மையை அறிந்துக் கொள்ள, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஒவ்வொரு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், களநீர் பரிசோதனை பெட்டி வைக்கப்பட்டிருக்கும். உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்புக் குழுவினர், கிராம கல்வி குழுவினர் தண்ணீரின் தரத்தை பரிசோதனை செய்கின்றனர். பொதுமக்களும் தர பரிசோதனை செய்யலாம்.


    இதில், தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன், காரத்தன்மை, கடினத்தன்மை, குளோரைடு, புளோரைடு, இரும்பு, அமோனியா, நைட்ரேட், பாஸ்பேட், மற்றும் தண்ணீரில் குளோரின் எவ்வளவு சதவீதம் கலந்திருக்கிறது போன்ற சோதனைகள் செய்யப்படுகின்றன.


    நீரில் ஏதேனும் குறைபாடு இருந்து, அது குறித்து புகார் வந்தால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். பொதுவாக, நீர் தேக்கத் தொட்டி முறையாக பராமரிக்காமல் இருந்தாலோ, குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தாலோ, அமோனியா, பாஸ்பேட் சேர்ந்து விட வாய்ப்புள்ளது. தண்ணீரில், அமோனியா, பாஸ்பேட், நைட்ரைடு இருக்கக் கூடாது. நைட்ரைடு இருந்தால், புற்றுநோய் பாதிப்பு ஏற்படக் கூடும். இவ்வாறு, திருநாவுக்கரசு கூறினார்.


    குடிநீரிலுள்ள தாது உப்புக்கள், இந்திய தர நிர்ணய அமைவனத்தின், வழிகாட்டி அளவுக்கு அதிகமாக இருக்கும்போது, ஏற்படும் பின்விளைவுகள்


    மொத்த உப்பு அதிகளவு -
    2000 மி.கி.,/லிட்டர்

    சுவை குன்றிக் காணப்படும். இதனால், குடல், வயிறுக் கோளாறுகள் ஏற்படும். நீர் வழங்கும் குழாய்கள், கட்டுமானங்களில் அரிப்பு ஏற்படும்.

    பி.எச்., அளவு அதிகமாவது

    உணவுக் குழாயில் ஜவ்வு பாதிக்கப்படும். கசப்பு சுவை, நீர் செல்லும் குழாய்கள், கட்டுமானங்களில் அரிப்பு, நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும்.

    காரத்தன்மை, அதிகளவு - 600 மி.கி.,/லிட்டர்

    சோப்பு நுரைக்காமல் இருந்தல், ஆடைகள் பழுதடைதல், வெள்ளை உப்பு படிதல், தோல்களில் நமைச்சல், சமைத்த புலால் மற்றும் உணவின் தரம் குறைந்திருந்தல்.

    கால்சியம் - 200 மி.கி.,/லிட்டர்

    சோப்பு நுரைக்காமல் இருத்தல், ஆடைகள் பிரகாசம் குன்றுதல், நீர்வரும் குழாய்களில் உப்பு ஏற்படுதல்.

    மக்னீசியம் - 100 மி.கி.,/லிட்டர்

    சோப்பு நுரைக்காமல் இருத்தல், மலக்குடல் இளகுதல்.

    இரும்பு அதிகளவு - 1 மி.கி.,/லிட்டர்

    சுவை குன்றுதல், கசப்பு சுவை, நீருக்கு கலங்கல் தன்மை, பழுப்பு நிறம் ஏற்படுதல்.
    உபயோகப்படுத்தப்படும் பொருட்களில் கறை படிதல், இரும்பு பாக்டீரியாவினால் பாதிப்பு ஏற்படுதல்.

    மாங்கனீஸ் - 0.3 மி.கி.,/லிட்டர்

    குறைந்த சுவை, கலங்கல் தன்மை, துணிகளில் பழுப்பு நிறம். குழாய்களில் கறுப்பு படிவம் ஏற்படுதல்.

    அலுமினியம் - 0.2 மி.கி.,/லி., நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், 'அல்சீமர்' நோய் ஏற்படுதல்.

    தாமிரம் - 1.5 மி.கி.,/லி., - கல்லீரல் பாதிப்பு, மெல்லிய ஜவ்வுகளில் எரிச்சல், மன அழுத்தம், நீர் தாவரங்களில் வளர்ச்சி குன்றுதல்.

    துத்தநாகம் - 15 மி.கி.,/லி., - சுவை குன்றுதல், குடல் வாயுக் கோளாறுகள், உடலில் இருந்து நீர் வெளியேறுதல், அடி வயிற்றில் வலி, மயக்க உணர்வு ஏற்படுதல்.

    நைட்ரேட் - 100 மி.கி.,/லி., - குழந்தைகள் நீலம் பாய்ந்து இறந்து விடுதல், நீர் நிலைகளில் பாசி படிதல்.

    சல்பேட்டு - 400 மி.கி.,/லி., - சுவை குன்றுதல், மலக்குடல் இளகுதல், குடல் வயிறுக் கோளாறு.

    குளோரைடு - 1000 மி.கி.,/லி., உப்பு சுவை, நீர் வழங்கு அமைப்புகளில் அரிப்பு.

    புளூரைடு - 15 மி.கி.,/லி., - எலும்பு சம்பந்தப்பட்ட புளோரோசிஸ் நோய், புரோரோசிஸ் நோய்.

    ஆர்சனிக் - 0.05 மி.கி.,/லி., - விஷத் தன்மை, மத்திய நரம்பு மண்டல பாதிப்பு, தோல் சம்பந்தப்பட்ட புற்றுநோய்.

    பாதரசம் (மெர்க்குரி) - 0.001 மி.கி.,/லி., - விஷத்தன்மை, நரம்புகள் பாதிப்பு.

    காட்மியம் - 0.01 மி.கி.,/லி., - நச்சுத்தன்மை, மூட்டுகள் பாதிப்பு, இருதயக் குழாய்கள் பாதிப்பு, குடல் வயிறுக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம்.

    ஈயம் - 0.05 மி.கி.,/லி., - புற்றுநோய், குடல் புண், மூச்சுத் திணறுதல், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்.

    குறிப்பிட்ட அளவுகளை விட, பரிசோதனையில் அளவு அதிகம் வந்தால், மேற்கண்ட நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு அதிகம். எனவே, முறையாக பரிசோதித்து, தாங்கள் குடிக்கும் நீரில், குறிப்பிட்ட அளவுகளில் சத்துகள் உள்ளனவா என பொதுமக்கள் பரிசோதித்துக் கொள்வது சிறந்தது.


    -dinamalar

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by silentsounds; 9th Feb 2014 at 07:11 AM.
    sumathisrini, jv_66 and datchu like this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Awarness about Drinking Water...

    தண்ணீரைப் பற்றிய விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி

    Jayanthy





  3. #3
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Awarness about Drinking Water...

    Thanks for the info Guna.


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter