Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1031
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    வைட்டமின் ஏ குறையும்போது, பார்வை மங்குதல், மாலைக் கண் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கேரட், பப்பாளி, மஞ்சள் நிற குடமிளகாய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் கீரை இவற்றை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் ஏ குறைபாட்டைத் தவிர்க்கலாம்.
    பி வைட்டமின்களில் பலவகைகள் உள்ளன. இதில், பி12 மற்றும் பி9 (ஃபோலிக் ஆசிட்) இரண்டும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கு மிக முக்கியமானவை. இவற்றின் குறைபாட்டினால் ரத்த சோகை மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படலாம். இதைத் தடுக்க, முட்டை, இறைச்சி, சம்பா கோதுமை, முட்டைக்கோஸ், கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா கதிர்களினால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் டி, எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் கிடைப்பதற்குத் தேவை. சூரிய ஒளி அதிக அளவில் கிடைக்காத சிறியவர்களுக்கு ரிக்கட்ஸ், வயதான பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க, மீன் எண்ணெய், முட்டை, இறைச்சி, ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவினைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாலுடன் கலந்து வைட்டமின் டி மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
    நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி அவசியம். இந்தச் சத்து குறைந்தால், ஸ்கர்வி என்னும் பல் பாதிப்பு ஏற்படும். சிட்ரஸ் வகைகளான ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி மற்றும் பப்பாளி, கீரை வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்புகளைத் தடுக்கலாம். வைட்டமின் சி உள்ள உணவுப் பொருள்களுடன், இரும்பு நிறைந்த பேரீச்சை, திராட்சை போன்றவற்றையும் சேர்த்து உண்ணலாம்.
    contd..



    Sponsored Links
    umasaravanan likes this.

  2. #1032
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    வைட்டமின் இ மிகச் சிறந்த 'ஆன்டி ஆக்சிடன்டாக’ செயல்பட்டு புற்றுநோயைத் தடுக்கிறது. இது குறையும்போது வயதான தோற்றம், குறைப் பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க பாதாம், முளைகட்டிய கோதுமை, பருத்தி எண்ணெய், சூரிய காந்தி எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    உணவு செரித்தலின்போது குடல் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் கே சத்தின் அளவு குறைந்தால், ரத்தம் உறைதல் பாதிப்புகள் ஏற்படும். கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், சோயா எண்ணெய் இவற்றை தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம், இந்த பாதிப்புகளைத் தடுக்கலாம்.

    umasaravanan likes this.

  3. #1033
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குடல்கள் ஆரோக்கியமாக செயல்பட தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
    நம் உடலில் உள்ள முக்கியமான பல உறுப்புகளில் ஒன்று தான் குடல்கள். நாம் உண்ணும் உணவு செரிமானமாகி குடல்கள் வழியாகத் தான் செல்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

    அதனால் குடல்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் என நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. குடல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல டிப்ஸ்கள் உள்ளது.

    சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!! ஆரோக்கியமான குடல்களுக்கு என்னென்ன டிப்ஸ் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? நாங்கள் கூறப்போகும் டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றினால், குடல்களில் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கலாம்.

    இதனால் ஏற்படவிருக்கும் பல ஆரோக்கிய சிக்கல்கள் நீங்கும். தொற்றுக்களையும். நோய்களையும் தடுக்க வேண்டுமானால், பயனை அளிக்கப்போகும் கீழ்கூறிய டிப்ஸ்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.

    வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க சில சூப்பரான கை வைத்தியங்கள்!!! ஆரோக்கியமான குடல்களைப் பெற, இதோ உங்களுக்கான அந்த 8 டிப்ஸ்.
    contd..



  4. #1034
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    ஏற்கனவே குறிப்பிட்டுள்ள படி ஆரோக்கியமான குடல்களுக்கான உணவுகள், ஆரோக்கியமான செரிமான அமைப்பிற்கான உணவுகள், சிறப்பான செரிமான ஆரோக்கியத்திற்கான டிப்ஸ் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள் என இந்த டிப்ஸ்களை தரம் பிரிக்கலாம். தொடர்ந்து படியுங்கள்...

    தண்ணீர் நீர்ச்சத்துடன் விளங்கினால் நீங்கள் நினைப்பதையும் மீறி, பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படும். நீர்ச்சத்துடன் கூடிய அணுக்களால் இயக்க உறுப்புகளில் தாக்கம் இருக்காது. மேலும் நச்சுக்களை தண்ணீர் வெளியேற்றும். அதேப்போல் குடல் மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகள் சிறப்பாக செயல்படவும் தண்ணீர் உதவிடும்.

    தோல் நீக்கப்பட்ட இறைச்சியை உண்ணவும் தோல் நீக்கப்பட்ட இறைச்சியுடன் பல உடல்நல பயன்கள் தொடர்பில் உள்ளது. அவைகள் செரிமானத்தை மேம்படுத்தி, குடல்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.

    அதிலுள்ள வளமையான ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். தோல் நீக்கிய கோழி மற்றும் மீன் போன்ற இறைச்சி அதிமுக்கிய புரதத்தை அளிக்கிறது. இதனால் செரிமானம் மேம்பட்டு வயிறு, கணையம் மற்றும் ஈரல் போன்ற பல உறுப்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

    மாட்டிறைச்சியை தவிர்க்கவும் மாட்டிறைச்சியில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ராலை ஊக்குவிக்கும். இதனால் உங்கள் இதயகுழலிய ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும். இதனை அதிகமாக உட்கொண்டால், செரிமானமின்மையும் ஏற்படும்.
    contd..



  5. #1035
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    ப்ரோ-பையோடிக்ஸ் சேர்த்துக் கொள்ளவும் தயிர் போன்ற ப்ரோ-பையோடிக்ஸால் செரிமான அமைப்பிற்கு அருமையான பயன்கள் உள்ளது. தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியா வளமையாக உள்ளதால், நாம் உண்ணும் உணவில் இருந்து அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் இது உதவிடும்.

    அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அளவுக்கு அதிகமாக உண்பதால் நீங்கள் நினைப்பதை விட அதிக தீமைகள் இருக்கிறது. செரிமான என்ஸைம்களை கையை மீறி வெளியேறுவதால், இயல்பான செரிமானத்திற்கு அது தடையாக இருக்கும். நமக்கு வாய்வு பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் அளவுக்கு அதிகமாக உண்பதே காரணமாக உள்ளது.

    அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளால் நம் செரிமானம் மேம்படும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளால் உடல் எடை குறைவும் ஏற்படும். உடல் கழிவுகளை வெளியேற்றுவதிலும், மலச்சிக்கலை தடுப்பதிலும் சிறந்து செயல்படும்.

    மேலும் குடலின் மீதான அழுத்தத்தை நீக்கும். அதிக நார்ச்சத்துள்ள பல உணவுகளில் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அவைகள் குடல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள் ஆரோக்கியமான செரிமானத்திற்கு சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, குடல்களை சீராக செயல்படுத்த வைக்க வேண்டுமானால், சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியமாகும்.

    அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள் இதனை தனியாக சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. பழங்களிலும் காய்கறிகளிலும் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் வளமையாக உள்ளது என சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    saidevi likes this.

  6. #1036
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பூசணி–வெள்ளரிக்காய் புற்று நோயை குணப்படுத்தும்: புதிய ஆய்வில் தகவல்
    புற்று நோயை குணப்படுத்த பலவித மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி மற்றும் பழச்சாறு புற்று நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

    இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த வில்லியம் லூகாஸ் மற்றும் சைனீஸ் அகாடமியை சேர்ந்த டேவிஸ், சான்வென் ஹூயாஸ் ஆகியோர் நடத்தினர்.

    வெள்ளரி வகையை சேர்ந்த இந்த காய்கறிகள் மற்றும் பழ வகைகள் அவற்றின் இலைகளை பல ஆயிரம் ஆண்டுகளாக தங்கள் மருந்துகளில் இந்தியர்களும், சீனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் இவர்கள் வெள்ளரி வகை காய்கறிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இக்காய்களில் பி.ஐ., பி.டி. என்ற இருவகை மரபியல் மூலக்கூறுகள் சிறப்பு தன்மையுடன் உள்ளன. இவை ‘டி.என்.ஏ’வுடன் தொடர்பு கொண்டவை.

    இவைகள், புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் படைத்தவைகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    saidevi likes this.

  7. #1037
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நீரிழிவு: விழிப்புணர்வே முக்கியம்!
    ‘நீரிழிவு என்பது ரத்தத்தில் இயல்பாக இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு கூடுதலாக இருப்பதுதான். நாம் சாப்பிடுகிற உணவு ரத்தத்தில் சர்க்கரையாகத்தான் (குளுக்கோஸ்) மாறுகிறது. அது செல்களுக்குச் சென்று எரிக்கப்பட்டு சக்தியாக மாறுகிறது. அது செல்களுக்கு எடுத்துச் செல்லப்பட இன்சுலின் தேவை.

    நம் உடலிலுள்ள கணையம் (பான்கிரியா) என்ற உறுப்பு மூலமே இன்சுலின் என்ற இயக்க நீர் சுரக்கிறது. இன்சுலின் இல்லையென்றால் செல்களுக்கு ரத்தத்திலிருந்து சர்க்கரை போய் சேராது. சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். செல்களுக்கு சக்தி கிடைக்காது. உறுப்புகளுக்கும் சக்தி இல்லாமல் பழுதடையும்.

    இப்படியொரு இக்கட்டான இன்சுலின் குறைபாடுதான் சர்க்கரை நோயின் மூலாதாரம்!’’ என அடிப்படையிலிருந்து ஆழமாகத் தொடங்குகிறார் டயாபடாலஜிஸ்ட் மனோன்மணி.

    ‘‘நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. சர்க்கரை வந்தவர்களும் நோயாளிகள் அல்ல. இன்சுலின் என்னும் இயக்க நீர் குறைபாட்டால் ஏற்படும் மாற்றமே இது. ஆகவே, இதை குறைபாடு என்றே கூறுவோம்.

    இரண்டாவது வகை (டைப் 2) நீரிழிவானது, பொதுவாக 30 வயதுக்கு மேல்தான் வரும். பாரம்பரியம் ஒரு காரணம். எடை அதிகமாக இருப்பது, தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, அதீத மன அழுத்தம், மன அமைதியின்மை - இவை எல்லாம் இரண்டாம் வகை சர்க்கரை நோய்க்குக் காரணமாகலாம். இதற்கு ‘டயாபடீஸ் மெலிட்டஸ்’ என்று பெயர்.
    contd..


    saidevi likes this.

  8. #1038
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    சாப்பிடும் முன்: 80 - 110 னீரீ/பீறீ சாப்பிட்டு, 2 மணி நேரம் கழித்து: 120 -140 னீரீ/பீறீ இதுதான் ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பான அளவு

    நம் உடலில் இன்சுலின் என்ற இயக்க நீர் சுரக்காமல் இருந்தாலும், குறைவாக சுரப்பதாலும், அதன் வேலையை சரிவர செய்யாததி னாலும் இயல்பான அளவைவிட கூடுகிறது.

    இதன் அறிகுறிகள்... சோர்வு, அதிக தாகம், அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, எடை குறைதல், மூட்டு வலி, கைகால் அசதி, அடிபட்ட காயம் ஆறாமல் இருப்பது, சிறுநீர் கழிக்கும் உறுப்பில் அரிப்பு, பார்வைக் கோளாறு ஆகியவை. எந்தவித அறிகுறியும் இல்லாமல் மருத்துவ பரிசோதனை மூலமும் டைப் 2 நீரிழிவு தெரிய வரலாம்.

    கட்டுப்பாடு இல்லாத சர்க்கரையானது கண், சிறுநீரகம், கால் நரம்புகள், ரத்தக்குழாய்கள், இதயம், மூளை மற்றும் உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கும். நினைவிழந்த நிலையும் ஏற்படலாம்.

    இது ஒரு தொடர் குறைபாடு. அதனால் பரிசோதனையும் தொடர் சிகிச்சையும் அவசியம். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள், பரிசோதனை, விழிப்புணர்வு... இவை மிகவும் அவசியம்.

    எப்போதும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.

    காலை உணவு : 8 - 9 மணி.
    இடைவேளை : 11 மணி
    மதிய உணவு : 1 - 1:30 மணி
    இடைவேளை : 4 மணி
    இரவு : 7-8 மணி

    தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உப்பு குறைவாக உபயோகிக்க வேண்டும். எண்ணெய் அதிகமாக சேர்க்கக் கூடாது. இனிப்பு வகைகள் அறவே கூடாது. விரதமும் விருந்தும் தவிர்க்க வேண்டியவை.

    காய்கறிகள்: எல்லாம் சாப்பிடலாம். கிழங்குகள் தவிர்க்கவும். கீரை வகைகள் மிக நல்லது.
    பழங்கள்: ஆப்பிள், சாத்துகுடி, தர்பூசணி, பப்பாளி, கொய்யா, மாதுளை சாப்பிடலாம்.
    சரிவிகித சம உணவு:

    1. பயறு, பருப்பு வகைகள், 2. தானிய வகைகள், 3. காய்கறிகள், 4. கீரை வகைகள், 5 பழங்கள், 6. கொட்டை வகைகள். கசகசா, வெந்தயம், பூண்டு, சீரகம், சோம்பு, எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

    பழங்களை சாறு பிழிந்து சாப்பிடாமல் அப்படியே சாப்பிட வேண்டும். ஓட்ஸ், ராகி முதலியவற்றை கஞ்சியாக செய்யாமல் களி மாதிரி செய்து சாப்பிடவும்.

    எண்ணெயில் பொரித்த உணவு தவிர்க்கவும். உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அளவைக் குறைத்து, தேவையானவற்றை மட்டும் நேரம் தவறாமல் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை கட்டுப்பாடாக இருக்கும்.
    contd..


    saidevi likes this.

  9. #1039
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    உடற்பயிற்சி...

    காற்றோட்டமான பசுமையான மரங்கள் நிறைந்த இடத்தில், காலையில் 30-45 நிமிடம் வேகமாக நடப்பது மிகவும் நல்லது. சைக்கிள் ஓட்டுவது நல்லது. நீச்சல் பயிற்சி செய்வதும் நல்லது.

    வயது, அவரவர் ஆரோக்கிய அடிப்படையில் பயிற்சி பெற்று யோகா செய்யலாம். பொதுவாக காலையிலிருந்து சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருப்பது, வீட்டு வேலைகளைச் செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவையும் நல்ல உடற்பயிற்சிகளே!

    பரிசோதனைகள்...

    சாப்பிடும் முன், சாப்பிட்ட பின் ஒன்றரை முதல் 2 மணி நேரத்துக்குள் ரத்த சர்க்கரை அளவு பார்க்க வேண்டும். குளுக்கோ மீட்டர் மூலம் பார்த்துக் கொள்ளலாம். ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு, எடை, இடுப்புச் சுற்றளவு ஆகியவையும் அவ்வப்போது பார்க்க வேண்டும்.

    3 மாதத்துக்கு ஒருமுறை HBA1C பார்க்க வேண்டும். அதில் 3 மாதத்தின் சராசரி அளவு தெரியும். அது 7 சதவிகிதத்துக்குக் கீழே இருக்க வேண்டும்.

    சிறுநீரக பரிசோதனை (யூரியா, கிரியட்டினன்) செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை, இதயம், ரத்தக்குழாய்கள், சிறுநீரகக்கல் பரிசோதனை செய்ய வேண்டும்.

    மருந்துகள்...

    மருத்துவர் ஆலோசனையின் பேரில் மாத்திரை (அ) இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். வெளியூர் சென்றாலும் மருந்து, மாத்திரை பெயர் விவரம் ஒரு சீட்டில் எழுதி எடுத்துக் கொள்ளவும்.

    போகும் வழியில் சாப்பிட வழி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தாழ்நிலை சர்க்கரை வர வாய்ப்புண்டு.

    மன அமைதி மிகவும் முக்கியம். சின்னச் சின்ன காரணங்களுக்கு எல்லாம் கோபம் கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும். இவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், நம்முடைய கடமையை மனமகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் செய்ய முடியும்.

    ஆரோக்கியமாக பிறரைப் போலவே பல ஆண்டுகள் வாழ முடியும். நீரிழிவுக்கு விழிப்புணர்வே மிகவும் முக்கியம். இந்த குறைபாட்டை நிறைவாக்கி நலமாக வாழ்வது உங்கள் கையில்தான் உள்ளது!’’
    contd..


    umasaravanan and saidevi like this.

  10. #1040
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    ஒரு சாம்பிள் மெனு

    காலை உணவு: இட்லி (அ) தோசை 2 (அ) மூன்று. புதினா சட்னி, தக்காளி சட்னி, சாம்பார், சுண்டல் காய்கறி.
    இடைவேளை: மோர், வெள்ளரிக்காய், எதாவது பழம்.

    மதியம்: ஒன்றரை கப் கைக்குத்தல் அரிசி (அ) ஹைஃபைபர் அரிசி சாதம், சுண்டல், காய்கறி பொரியல் (அ) கூட்டு, சாம்பார், ரசம்.
    இடைவேளை: காபி (அ) டீ சர்க்கரையின்றி, காய்கறி சாலட் (அ) பழம் (அ) சுண்டல்.

    இரவு: இரண்டு சப்பாத்தி, காய்கறி குருமா, சுண்டல். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து பால் சாப்பிடலாம்.

    umasaravanan and saidevi like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter