Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1041
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாய் துர்நாற்றத்தைத் தடுக்க சில எளிய இயற்கை வைத்தியங்கள்!!!

    இன்று பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வாய் துர்நாற்றம். இத்தகைய வாய் துர்நாற்றத்தினால் யாருடனும் நிம்மதியான உரையாடலைக் கொள்ள முடியாது. ஏனெனில் நம் வாய் துர்நாற்றமானது நமக்கே வீசும் போது, நம்முடன் பேசுபவர்களுக்கு வீசாமலா இருக்கும். இந்நேரத்தில் அனைவருமே சங்கடமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்... பொதுவாக வாய் துர்நாற்றமானது வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றினால் தான் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி நாக்கிலோ, மூக்கிலோ, ஈறுகளிலோ, செரிமான மண்டலத்திலோ, வயிற்றிலோ பிரச்சனைகளானது இருந்தாலும் ஏற்படும். இப்போது நாம் வாய் துர்நாற்றத்தைத் தடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
    contd..



    Sponsored Links

  2. #1042
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    பிரஷ்,
    பிரஷ், பிரஷ் தினமும் பற்களை இரண்டு முறை தவறாமல் துலக்குவதோடு, மேலே, கீழே என்று நன்கு துலக்குவதோடு, ஈறுகளையும் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பற்களின் இடுக்குகளில் தங்கியுள்ள உணவுப் பொருட்கள் முற்றிலும் வெளியேறி, வாய் துர்நாற்றம் ஏற்படுவது தடுக்கப்படும்.

    ப்ளாஷ்
    உண்ணும் உணவுப் பொருட்களானது பற்களின் இடுக்குகளில் தங்கி சரியாக வெளிவராமல் இருந்தால், வாய் துர்நாற்றம் ஏற்படும். ஆகவே தினமும் இரண்டு முறை பிரஷ் செய்வதுடன், ப்ளாஷ் என்னும் பல்லிடுக்கு நூல் கொண்டும் சுத்தம் செய்ய வேண்டும்

    வாயை கொப்பளிக்கவும் ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னரும் பற்களை துலக்க முடியாது. ஆகவே எந்த ஒரு உணவை உட்கொண்ட பின்னரும், தவறாமல் நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும்.

    மௌத் வாஷ் pH அளவானது குறைந்ததால், வாய் துர்நாற்றம் ஏற்படும். ஆகவே பற்களை துலக்கி, ப்ளாஷ் பயன்படுத்திய பின் நல்ல மௌத் வாஷ் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் pH அளவானது சீராக இருக்கும். அதிலும் மௌத் வாஷ் கொண்டு ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னரும் வாயைக் கொப்பளித்தால், வாய் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

    வெங்காயம், பூண்டை தவிர்க்கவும் உணவின் சுவையை அதிகரிக்க பயன்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் வெங்காயம் மற்றும் பூண்டு. இதனை நம்மால் முற்றிலும் தவிர்க்க முடியாது. இருப்பினும் இதனை பச்சையாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    contd..



  3. #1043
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    ஆல்கஹால் இல்லாத மௌத் வாஷ்
    அனைத்து வகையான மௌத் வாஷ்ஷும் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஆல்கஹால் இல்லாத மௌத் வாஷ் பயன்படுத்தினால் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கலாம். அதுவே ஆல்கஹால் உள்ள மௌத் வாஷ் பயன்படுத்தினால், அது வாயை வறட்சியடையச் செய்து வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கும். ஆகவே ஆல்கஹால் இல்லாததை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

    சீரான இடைவெளியில் உண்ணவும்
    நீண்ட நேரம் எதுவும் உட்கொள்ளாமல் இருந்தால், வாயானது வறட்சியடைந்து துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். குறிப்பாக எந்நேரத்திலும் உணவைத் தவிர்க்கக் கூடாது. மேலும் அவ்வப்போது பழங்கள் அல்லது சாலட்டுகளை வாங்கி உட்கொண்டவாறே இருங்கள். இதனால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

    பேக்கிங் சோடா
    உடலில் அசிடிட்டியின் அளவைக் குறைத்து, pH அளவை நிலையாக வைத்திருக்க பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே தினமும் பிரஷ் செய்யும் போது, பேஸ்ட் உடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து பின் பற்களை துலக்குங்கள். இதனால் வாய் எப்போதும் நன்கு புத்துணர்ச்சியுடன் துர்நாற்றமின்றி இருக்கும்.
    சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு அல்லது எலுமிச்சையை உட்கொண்ட பின்னர் வாய் துர்நாற்றம் நீங்கியிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இதற்கு காரணம், அவற்றில் உள்ள சிட்ரிக் ஆசிட், வாயில் எச்சிலை அதிகம் உற்பத்தி செய்கிறது. எச்சில் தான் உடலின் pH அளவை சீராக வைத்துக் கொள்வதோடு, பாக்டீரியாக்களை நீக்கி, வாயை எப்போதும் வறட்சியின்றி வைத்துக் கொள்ளும். ஆகவே சிட்ரஸ் பழங்களை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    contd..



  4. #1044
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    டீ-ட்ரீ ஆயில் டீ-ட்ரீ ஆயிலில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. எனவே பற்களை துலக்கும் போது, டூத் பேஸ்ட்டில் சிறிது டீ-ட்ரீ ஆயிலை சேர்த்து பற்களை தேய்க்க வேண்டும். இப்படி காலையும், இரவும் செய்து வந்தால், வாய் புத்துணர்ச்சியுடன் துர்நாற்றம் இல்லாமல் இருப்பதை நன்கு உணரலாம்.

    பார்ஸ்லி உணவில் பார்ஸ்லியை சேர்த்துக் கொள்வதால் செரிமானம் சீராக நடைபெறுவதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும். எனவே முடிந்தால் தினமும் இதனை சிறிது வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் அதில் உள்ள குளோரோஃபில் ஆன்டி-பாக்டீரியா போன்று செயல்பட்டு, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

    புதினா, துளசி புதினா, துளசி போன்றவற்றை வாயில் போட்டு அவ்வப்போது மென்று விழுங்கினால், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களானது அழிந்து, வாய் துர்நாற்றமானது நீங்கும்.

    கொய்யா கொய்யாப் பழத்தை விட, கொய்யா காயில் தான் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் சக்தி உள்ளது. அதுமட்டுமின்றி, இது வாயில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைத் தரக்கூடியது. ஆகவே முடிந்த அளவில் கொய்யா கிடைக்கும் போதெல்லாம் வாங்கி சாப்பிட்டு நன்மையைப் பெறுங்கள்.

    ஒரு கப் டீ தினமும் அதிகாலையில் பால் டீ குடிப்பதற்கு பதிலாக, ப்ளாக் அல்லது க்ரீன் டீ குடித்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையானது, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றிவிடும்.
    contd..



  5. #1045
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    வெந்தயம் இரவில் படுக்கும் போது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதன் நீரை குடித்தால், அது வாயில் உள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்

    சோம்பு சோம்பு மிகவும் சிறந்த நறுமணமிக்க மசாலாப் பொருள். இதுவும் வாய் துர்நாற்றத்தைத் தடுத்து, வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். அதனால் தான் ஒவ்வொரு உணவிற்கு பின்னும் ஹோட்டல்களில் இது கொடுக்கப்படுகிறது.

    சர்க்கரையில்லாத சூயிங் கம் வாய் வறட்சியடையாமல் இருக்க வேண்டுமானால், சர்க்கரை இல்லாத சூயிங் கம்மை வாயில் போட்டு மென்ற படியே இருக்கலாம். அதிலும் புதினா ப்ளேவர் கொண்ட சூயிங் கம் மிகவும் சிறந்தது. இதனால் வாயில் எச்சில் அதிகம் உற்பத்தி செய்யப்படும். இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

    காம்ப்ளக்ஸ் கார்ப்ஸை குறைக்கவும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் தான் வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கிறது. ஆகவே காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நிறைந்த வெள்ளை பிரட், சர்க்கரை, வெள்ளை சாதம் மற்றும் மைதா போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இவை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, எளிதில் செரிமானமாகாமலும் இருக்கும்.

    உப்பு உப்பு மிகவும் சிறப்பான வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருள். அதற்கு உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதனைக் கொண்டு தினமும் 2 முறை வாயைக் கொப்பளித்தால், வாய் துர்நாற்றமானது நீங்கும்.

    ஆப்பிள் சீடர் வினிகர் 1-2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் குளிர்ச்சியான நீரில் கலந்து, அதனை வாயில் ஊற்றி 3-5 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். இப்படி காலை மற்றும் இரவில் செய்து வந்தால், வாய் துர்நாற்றம் விரைவில் போய்விடும்


  6. #1046
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள்!!!

    காய்கறிகளே நமது தினசரி உணவுகளில் மிகுதியான அளவில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் இயற்கையான முறையில் தருபவை. காய்கறிகள் எத்தகைய நற்பண்புகளை பெற்றிருந்தாலும் அதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளதை நாம் மறுக்க முடியாது. சில காய்கறிகள் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக அளவு வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, கீழ் வயிற்றை உப்பச் செய்கிறது. இதனால் உணவிற்கு பின் வயிறு உப்பிய நிலையில் இருந்து, பின்னர் அடிக்கடி வாய்வை வெளிவரச் செய்கிறது. வாய்வு தொல்லையால் ரொம்ப அவஸ்தைப்படுறீங்களா? இயற்கை வைத்தியங்களை ட்ரை பண்ணி பாருங்க... சிலருக்கு இத்தகைய வாய்வு பிரச்சனை அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை பல வடிவங்களில் கொண்டுள்ள காய்கறிகள் தேவையான அளவை விட அதிக அளவு வாய்வை உண்டாக்குகின்றன. இராஃபினோஸ், லாக்டோஸ், பிரக்டோஸ் மற்றும் சார்பிட்டால் ஆகியவை சர்க்கரையின் வடிவங்களாகும் மற்றும் இவை அதிக அளவு வாய்வை உண்டாக்கும் பொருட்கள். இராபினோஸ் என்ற சாக்கரை வகை அதிக அளவு உப்புசம் தந்து கீழ் வயிற்றில் வலியை உண்டாக்குகிறது. இது வாய்வுடன் தொடர்புடையதால் தான் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. எப்படி இருந்தாலும் ஒருவருடைய உடல் வாகை கொண்டே இதை நாம் உறுதியாக கூற முடியும். ஒருவருக்கு ஒத்துப்போவது மற்றொருவருக்கு சரியாக வராது. செரிமானக் கோளாறுகளை நீக்குவதற்கான சூப்பரான 20 டிப்ஸ்!!! நல்ல காய்கறி சேர்த்த உணவை உண்ட பின் இத்தகைய இடையூறுகள் வாய்வு தொல்லையால் ஏற்பட்டால் அந்த காய்கறிகளை உட்கொள்ளுவதை குறைத்துக்கொள்வது மிக அவசியமானதாகும். வெங்காயம், கேரட், பிரஸ்ஸல்ஸ், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் தானிய வகைகள் ஆகியவை வயிற்றில் வாய்வு உண்டாக்கும் சில காய்கறிகளாகும். இவைகளை நாம் ஒரேடியாக நிறுத்தி விட முடியாது. ஏனெனில் இவற்றில் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. ஆகையால் இவ்வகை காய்கறிகளை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்வதும் மற்றும் நீண்ட இடைவெளி விட்டு உண்பதும் நல்லது.
    contd..



  7. #1047
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    அதிக அளவில் கேஸ் உண்டாக்கும் காய்கறிகள் - ஓரு கண்ணோட்டம்

    வெங்காயம் நமது நாட்டில் எந்த இடமாயினும் வெங்காயம் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். இது ஒரு அடிப்படை உணவில் கூட கலப்பதை தவிர்க்க முடியாது. வெங்காயங்களை சமைக்கும் பொது தவிர்க்கவும் முடியாது. ஆனால் அதை சிறிதளவு குறைத்துக் கொள்ள முடியும். இதைச் செய்வதன் மூலம் கேஸ் அடைவதிலிருந்தும் மற்றும் கேஸ் உருவாவதிலிருந்தும் தப்பிக்கலாம். வெங்காயத்தில் பல நற்குனங்கள் உள்ளதால், அதனை உணவில் தவிர்ப்பது சரியான செயல் அல்ல.
    சோளம் சோளமும் ஒரு வகை பிரதானமான உணவாகும். அதில் அதிக அளவு சத்துக்களும் மற்றும் சுக்ரோசும் உள்ளது. அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை இதில் இருப்பதால் உணவு செரிக்கப்படும் போது கேஸ் ஏற்படுகிறது. இந்த உணவில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் செரிமானத்தை கடினப்படுத்தி அதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் சாக்கரை கேஸை உருவாக்குகிறது.

    ப்ரோக்கோலி முட்டைக்கோஸ் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ-கெமிக்கல்கள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும். இதில் பல நற்குணங்கள் இருந்தாலும், குடலில் இது உருவாக்கும் கேஸ் காரணமாக பலர் இதை தவிர்க்கின்றனர். ப்ரோக்கோலியில் உள்ள இராஃபினோஸ் என்ற சர்க்கரையை என்ஸைம்களால் செரிக்க வைக்க முடிவதில்லை. இதனால் கேஸ் உருவாகிறது.
    contd..



  8. #1048
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    முட்டைக்கோஸ் முட்டைக்கோஸ் உடலுக்கு மிகவும் சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவாகும். அதே நேரம், இந்த கார்போஹைட்ரேட்களில் ஆலிகோ-சாக்கரைட்ஸ் என்ற சிக்கலான பொருட்களும் உள்ளன. ஆலிகோ-சாக்கரைட்ஸ்களை செரிமானம் செய்யும் போதும் அவற்றிலிருந்து கேஸ் உருவாகிறது.

    பீன்ஸ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட பீன்ஸில், ஒவ்வொரு வகைகும் ஒரு வகையான பலன்கள் உள்ளன. பீன்ஸில் ஸ்டாசியோஸ் என்ற மூன்று சாக்கரை பொருள், இராஃபினோஸ் என்ற நான்கு சாக்கரை பொருள் மற்றும் வெர்பாஸ்கோஸ் என்ற ஐந்து சர்க்கரைப் பொருள் ஆகியவை இருப்பதால் செரிமாணம் கடினமாகி விடுகிறது. இதை சமாளிக்கும் என்ஸைம்கள் நம் உடலில் இல்லை.

    பீட்ரூட் சென்சிட்டிவ்வான வயிற்று உறுப்புகள் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிட்டால், அதிகமான கேஸ் உருவாகி வயிற்று கோளாறுகள் ஏற்படும். அதனால் வயிறு உப்புசமடைதல், கீழ் வயிற்று வலி, கேஸ் பிரச்னை மற்றும் வயிற்று பிடிப்பு ஆகியவை ஏற்படும். பீட்ரூட்டில் உள்ள பாலிசாக்கரைட் என்னும் கார்போஹைட்ரேட் செரிப்பதற்கு கடினமானதாக இருப்பதால் அது கேஸை உருவாக்குகிறது.

    பிரஸ்ஸல்ஸ் முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி ஆகிய தாவர வகையை சார்ந்த பிரஸ்ஸல்ஸ் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள் ஆகிய சத்து வகைகளை கொண்டுள்ளது. இவை சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகிய ஓலிகோ-சாக்கரைட்ஸ் எனப்படும் ஊட்டத்தை கொண்டவை. இவை அதிக அளவிலான காற்றை செரிமானத்தின் போது வயிற்றில் உருவாக்கும்.


  9. #1049
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இதயத்தை காக்கும் பாதாம் பருப்பு
    அதிகமான சத்துக்களைக் கொண்ட பருப்பு வகைகளில் ஒன்றாக உள்ளது, பாதாம் பருப்பு. பாதாம் பருப்பு உடலில் கொழுப்பை அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு.

    பாதாம் இனிப்புகளில் சேர்க்கப்படும் சர்க்கரையும், கொழுப்பும்தான் உடல் கொழுப்புக்கும் வேறு பல நோய்களுக்கும் கொண்டுச் செல்கிறது.

    இவை இரண்டையும் நீக்கிவிட்டால் பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவுதான். இதன் மகத்துவத்தை அறியாத பலர் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. பாதாமில் வைட்டமின்களும், தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

    உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் சாப்பிட வேண்டிய பருப்பு வகைகளில் இதுவும் ஒன்று. புரதம், நார்ப் பொருட்களோடு சேர்த்து உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3, ஒமேகா 6 ஆகியவையும் பாதாமில் உள்ளன.

    இவற்றைத் தவிர வைட்டமின் - ஈ, துத்தநாகம், சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், செலினியம், நியாசின் மற்றும் மெக்னீசியமும் இதில் இருக்கிறது. பாதாமில் உள்ள கொழுப்பு, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொழுப்பாகும். 25 கிராம் பாதாமில் ஒரு நாளைக்குத் தேவையான 70 சதவீத வைட்டமின் ஈ உள்ளது.

    மற்ற பருப்புகளை விட பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் - பி 17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது.

    மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது. இவற்றை எல்லாம் மனதில் வைத்து, அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிடுவோம்!


  10. #1050
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாழை இலையின் பயன்கள்

    1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

    2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

    3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

    4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

    5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

    6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

    7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

    தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

    ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

    நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

    வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter