Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1051
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு

    * சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

    * சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

    * சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

    * வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

    * வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

    * வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

    * உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

    * மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

    உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


    Sponsored Links

  2. #1052
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடலில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கும் புகழ்பெற்ற மற்றும் சிறப்பான 7 உணவுகள்!!!

    நாம் தினமும் தேய்த்து குளித்து சுத்தமாக இருப்பதற்கான காரணம் என்ன? உடலை சுத்தமாகவும். ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தானே. ஆனால் இதனால் வெளிப்புற உடல் சுத்தமாக இருக்கும்; உட்புற உடல் சுத்தமாகுமா என்றால் இல்லை. பின் அதை எப்படி சுத்தமாக வைத்திருப்பது? பலருக்கு அது தெரிவதில்லை. உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்குவதற்கு உதவும் ஜூஸ்கள்!!! உட்புற உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமானால் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும், ஆரோக்கியமான சூழலில் இருக்க வேண்டும், என அடுக்கி கொண்டே போகலாம். இதையெல்லாம் கடைப்பிடித்தாலும் கூட உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும். இயற்கையான முறையில் இந்த கழிவுகள் வெளியேறினாலும், அது சீராக நடைபெற சில உணவுகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகள்!!! ஆரோக்கியமற்ற உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணுவதால் ஏற்படும் தாக்கங்களை சமாளிக்க நச்சுப்பண்பை நீக்கும் சில உணவுகள் உள்ளது. இவ்வகை உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஆற்றல் திறனை அதிகரித்து, மனநிலையை மேம்படுத்தும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்
    contd..



  3. #1053
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    பூண்டு
    பூண்டு இதயத்திற்கு நல்லது என அறியப்பட்டாலும், அது நச்சுப் பண்பை நீக்கும் உணவாகவும் செயல்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள நச்சுயிர் எதிர்ப்பி, பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்களே. பூண்டில் அல்லிசின் என்ற ரசாயனம் உள்ளது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி நச்சு பொருட்களுக்கு எதிராக போரிடும். கொஞ்சம் பூண்டை நசுக்கி, உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    க்ரீன் டீ உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கு உள்ள சிறந்த வழிகளில் மற்றொன்று - உங்கள் உணவில் க்ரீன் டீயை சேர்த்துக் கொள்வது. இது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும். க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உங்கள் கல்லீரலை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உட்பட அனைத்து நோய்களில் இருந்து பாதுகாக்கவும் இது உதவிடும்.

    இஞ்சி கொழுப்பு நிறைந்துள்ள உணவுகள் மற்றும் மதுபானத்தை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா? இது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கும். குமட்டலில் இருந்து நிவாரணம், செரிமான அமைப்பில் மேம்பாடு, வயிற்று பொருமல் மற்றும் வாய்வை குறைக்க இஞ்சியை பயன்படுத்துங்கள். இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவிடும். ஆகவே நீங்கள் குடிக்கும் ஜூஸ்களில் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது சீரான முறையில் இஞ்சி டீ குடியுங்கள்.

    contd..



  4. #1054
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    எலுமிச்சை நச்சுப் பண்பை நீக்கும் புகழ் பெற்ற மற்றும் சிறப்பான உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது எலுமிச்சை. எலுமிச்சையில் வைட்டமின் சி என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் அடங்கியுள்ளதால், அது உங்கள் சருமத்திற்கு பல மாயங்களை நிகழ்த்தும். அதேப்போல் இயக்க உறுப்புகளை உருவாக்கும் நோய்களுக்கு எதிராக போராடும். எலுமிச்சையால் உங்கள் உடலில் அல்கலைன் தாக்கமும் ஏற்படும். இதனால் உங்கள் உடலின் அமிலகாரச் சமன்பாடு மீட்கப்படும். இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு மேம்படும். கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்ட வெந்நீரை குடித்து உங்கள் நாளை தொடங்குங்கள். இதனால் உங்கள் உடலில் இருந்து நச்சுப்பொருட்கள் வெளியேறி உடல் சுத்தமாகும்.

    பழங்கள் நற்பதமான பழங்களில் வைட்டமின்கள், கனிமங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இவைகளில் கலோரிகள் குறைவாக உள்ளது. இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதற்கு பழங்களை உபயோகிக்கலாம். உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு மட்டும் மாயங்களை நிகழ்த்தாமல், செரிமானத்திற்கும் நல்லதை செய்யும். அதனால் காலை உணவுடன் நற்பதமான பழங்களை உண்ணுங்கள். இல்லையென்றால் நொறுக்குத் தீனியாகவும் பயன்படுத்துங்கள்.

    பீட்ரூட் பீட்ரூட்டில் மெக்னீசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பலவித உடல்நல பயன்களை அளிக்கிறது. இந்த சூப்பர் உணவு கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. பீட்ரூட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணலாம். பீட்ரூட்டை ஜூஸ் போட்டும் கூட குடிக்கலாம்.

    கைக்குத்தல் அரிசி நச்சுத் தன்மையை நீக்க உதவிடும் வைட்டமின் பி, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் கைக்குத்தல் அரிசியில் வளமையாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இது உங்கள் பெருங்குடலை சுத்தப்படுத்த பெரிதும் உதவும். இதில் செலினியம் வளமையாக உள்ளதால் உங்கள்க கல்லீரல் பாதுகாக்கப்பட்டு உங்கள் மேனியின் நிறம் மேம்படும்.


  5. #1055
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சில காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
    வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைக்காய், பாகற்காய், சேப்பங்கிழங்கு, பீட்ரூட், வெண்டைக்காய், கோவைக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய், சுரைக்காய், குடைமிளகாய், சௌசௌ, அவரைக்காய், காரட், கொத்தவரங்காய் மற்றும் கத்தரி பிஞ்சு ஆகிய காய்கறிகளின் மருத்து குணங்களைப் பார்ப்போம்.

    வாழைப்பூ:
    இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

    வாழைத்தண்டு:
    இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

    வாழைக்காய்:
    இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

    பாகற்காய்:
    வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
    contd..



  6. #1056
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    சேப்பங்கிழங்கு:
    கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

    பீட்ரூட்:
    கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

    வெண்டைக்காய்:
    போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

    கோவைக்காய்:
    வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.


  7. #1057
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குடல்கள் ஆரோக்கியமாக செயல்பட தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
    நம் உடலில் உள்ள முக்கியமான பல உறுப்புகளில் ஒன்று தான் குடல்கள். நாம் உண்ணும் உணவு செரிமானமாகி குடல்கள் வழியாகத் தான் செல்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

    அதனால் குடல்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் என நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. குடல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல டிப்ஸ்கள் உள்ளது.

    சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!! ஆரோக்கியமான குடல்களுக்கு என்னென்ன டிப்ஸ் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? நாங்கள் கூறப்போகும் டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றினால், குடல்களில் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கலாம்.

    இதனால் ஏற்படவிருக்கும் பல ஆரோக்கிய சிக்கல்கள் நீங்கும். தொற்றுக்களையும். நோய்களையும் தடுக்க வேண்டுமானால், பயனை அளிக்கப்போகும் கீழ்கூறிய டிப்ஸ்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.

    வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க சில சூப்பரான கை வைத்தியங்கள்!!! ஆரோக்கியமான குடல்களைப் பெற, இதோ உங்களுக்கான அந்த 8 டிப்ஸ்.

    ஏற்கனவே குறிப்பிட்டுள்ள படி ஆரோக்கியமான குடல்களுக்கான உணவுகள், ஆரோக்கியமான செரிமான அமைப்பிற்கான உணவுகள், சிறப்பான செரிமான ஆரோக்கியத்திற்கான டிப்ஸ் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள் என இந்த டிப்ஸ்களை தரம் பிரிக்கலாம். தொடர்ந்து படியுங்கள்...

    தண்ணீர் நீர்ச்சத்துடன் விளங்கினால் நீங்கள் நினைப்பதையும் மீறி, பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படும். நீர்ச்சத்துடன் கூடிய அணுக்களால் இயக்க உறுப்புகளில் தாக்கம் இருக்காது. மேலும் நச்சுக்களை தண்ணீர் வெளியேற்றும். அதேப்போல் குடல் மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகள் சிறப்பாக செயல்படவும் தண்ணீர் உதவிடும்.

    தோல் நீக்கப்பட்ட இறைச்சியை உண்ணவும் தோல் நீக்கப்பட்ட இறைச்சியுடன் பல உடல்நல பயன்கள் தொடர்பில் உள்ளது. அவைகள் செரிமானத்தை மேம்படுத்தி, குடல்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.

    அதிலுள்ள வளமையான ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். தோல் நீக்கிய கோழி மற்றும் மீன் போன்ற இறைச்சி அதிமுக்கிய புரதத்தை அளிக்கிறது. இதனால் செரிமானம் மேம்பட்டு வயிறு, கணையம் மற்றும் ஈரல் போன்ற பல உறுப்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

    மாட்டிறைச்சியை தவிர்க்கவும் மாட்டிறைச்சியில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ராலை ஊக்குவிக்கும். இதனால் உங்கள் இதயகுழலிய ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும். இதனை அதிகமாக உட்கொண்டால், செரிமானமின்மையும் ஏற்படும்.
    contd..



  8. #1058
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    ப்ரோ-பையோடிக்ஸ் சேர்த்துக் கொள்ளவும் தயிர் போன்ற ப்ரோ-பையோடிக்ஸால் செரிமான அமைப்பிற்கு அருமையான பயன்கள் உள்ளது. தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியா வளமையாக உள்ளதால், நாம் உண்ணும் உணவில் இருந்து அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் இது உதவிடும்.

    அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அளவுக்கு அதிகமாக உண்பதால் நீங்கள் நினைப்பதை விட அதிக தீமைகள் இருக்கிறது. செரிமான என்ஸைம்களை கையை மீறி வெளியேறுவதால், இயல்பான செரிமானத்திற்கு அது தடையாக இருக்கும். நமக்கு வாய்வு பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் அளவுக்கு அதிகமாக உண்பதே காரணமாக உள்ளது.

    அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளால் நம் செரிமானம் மேம்படும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளால் உடல் எடை குறைவும் ஏற்படும். உடல் கழிவுகளை வெளியேற்றுவதிலும், மலச்சிக்கலை தடுப்பதிலும் சிறந்து செயல்படும்.

    மேலும் குடலின் மீதான அழுத்தத்தை நீக்கும். அதிக நார்ச்சத்துள்ள பல உணவுகளில் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அவைகள் குடல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள் ஆரோக்கியமான செரிமானத்திற்கு சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, குடல்களை சீராக செயல்படுத்த வைக்க வேண்டுமானால், சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியமாகும்.

    அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள் இதனை தனியாக சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. பழங்களிலும் காய்கறிகளிலும் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் வளமையாக உள்ளது என சொல்லி தெரிய வேண்டியதில்லை.


  9. #1059
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தயிர் தரும் பலன்கள்
    தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும்.

    ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும்.

    ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

    தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. பாலில் லிகிசிஜிளி இருக்கிறது. தயிரில் இருப்பது லிகிசிஜிளிஙிகிசிமிலி. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

    வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு தயிர் கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

    பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

    மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
    contd..



  10. #1060
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    ​வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 23 நாட்கள் வரை புளிக்காது.

    வெண்டைகாய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும். வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

    மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம். மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம். தயிருடன் சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter