Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1061
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,283

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இரத்த அழுத்தமா? பேஷன் ஃபுருட் சாப்பிடுங்க!
    passion_fruit
    தாட்பூட் என அழைக்கப்படும் பேஷன் ஃபுருட் என்ற பழம் மலைப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது.

    தென் அமெரிக்காவை தாயமாக கொண்ட இந்த பழம் பேசி புளோரா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது.

    இதில் நிறைந்துள்ள ஏராளமான மருத்துவ குணங்களை இப்போது பார்ப்போம்

    வைட்டமின் ஏ,பி மற்றும் சி என அனைத்தும் நிரம்பிய இந்த பழம் கண்களையும், சர்மத்தையும் பாதுகாக்க உதவும்

    இப்பழங்கள் இரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாக செயல்படுகின்றது.

    இந்த பழத்தை ஜூஸ் அல்லது சாலடை போல் செய்து சாப்பிடுவதால், உடல் சக்தி அதிகரிக்கும்.

    ஆஸ்துமாவை கட்டுப்படுத்தி சுவாச கோளாறுகளில் இருந்து விடுபட இந்த பழம் ஒரு சிறந்த மருந்து.

    இப்பழத்தின் மூலம் தயாரிக்கப்படும் பேசியோ என்ற மதுபானத்தை அளவாக அருந்துவது உடல்நலத்திற்கு நல்லது.

    இந்த பழத்தை சாப்பிடுவதால், உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கி, உணவை ஜீரணமடைய செய்வதிலும் உதவுகிறது.

    புற்றுநோய் வராமல் தடுக்கவும், நல்ல தூக்கத்தை பெறவும் தினமும் இப்பழத்தை எடுத்து கொள்ளலாம்.



    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-passion_fruit_002-300x253.jpg  
    Last edited by chan; 3rd Dec 2014 at 02:08 PM.
    kiruthividhya likes this.

  2. #1062
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,948

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!



    chan likes this.

  3. #1063
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,283

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம்
    உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் ரொம்ப முக்கியமானது. பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம்.

    எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்” என விடாதிருக்கும் விக்கலுக்கு, திகில் பயமெல்லாம் காட்ட வேண்டாம்! 8 திப்பிலியும் பத்து சீரகமும் பொடித்து தேனில் கலந்து கொடுத்தால் போதும் என்கிறது சித்த மருத்துவம்.

    அடிக்கடி சீரணக் கோளாறு இருந்தால் இனி வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அட்ம்பிடித்தால், சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவற்றை சமபங்கு எடுத்து நன்கு மையாகப் பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன்னர் 2 சிட்டிகை அளவு தேனில் குழைத்துக் கொடுக்க பசியை தூண்டும் இந்த ‘பஞ்ச தீபாக்கினி சூரணம்’.

    “எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு ஆறு மாச கர்ப்பிணி வயிறு போல் வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது,” என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து.

    சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட தீரும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

    சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும் இஞ்சிசாரிலும் ஒவ்வொன்றும் மூன்று நாளென, சுட்டெரிக்கும்படி வர இருக்கும் வெயில் காலத்தில் வைத்து எடுத்து அந்த சாறு ஊறிய பொடியை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சீரகச் சூரணம், பித்த தலைவலி எனும் மைக்ரேனுக்கு அருமையான மருந்து.

    சீரக கஷாயம்: சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.

    kiruthividhya likes this.

  4. #1064
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,948

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    PASSION FRUIT Health benefits And Nutritional Values


    Passion fruit is a small egg-shaped tropical fruit, which is also known by the name of Purple Granadillas. Passion fruit contains several seeds and has wrinkled purple brown rind on maturing. The seeds and the pulp inside, both are edible, making it easier to consume the fruit. Moreover, the pulp of the fruit has a distinct aroma and has a slightly sweet taste. In tropical countries, passion fruit is primarily used for juicing. The fruit is about 1 3 inches wide, with a smooth and waxy coating outside. Apart from its pleasant taste and appearance, the fruit is known for its various health benefits

    Passion fruit also benefits those who eat it by providing the body with high doses of Vitamin A and C. Vitamin A helps the body to remove free radicals that cause skin and tissue damage, and it helps to improve our vision. Meanwhile Vitamin C helps to repair tissue, helps prevent heart disease and cancer and helps our bones.



    Now, one of the many health benefits of passion fruit is that its seeds (one cup) contains almost 25 grams of fiber. Passion fruit seeds are a great source of fiber that the body needs to cleanse the colon, improve digestion, and help prevent heart attacks and strokes.

    We all have heard the buzz around the various positive effects of anti-oxidants in the body. Such useful anti-oxidants can be found in passion fruits which in turn help in treating and preventing asthma, wheezing cough and other kinds of allergic ailments. These fruits also aid in the overall relaxation of the body as they have somniferous properties and thus help in providing a restful and sound sleep when taken before sleeping. Passion fruit is thus used for the overall enhancement of health and it is also extremely beneficial for those who are in a quest for weight reduction methods.

    The latest research findings offer hope for Asthma sufferers, as a recent study indicates that a flavonoid-rich extract from purple passion fruit may ease wheezing.
    Fewer than 20 per cent of the subjects receiving the passion fruit peel (PFP) extract still had wheeze as a clinical symptom of asthma, compared to about 80 per cent of subjects in the placebo group, according to the findings, which were published in the journal NutritionResearch.

    Moreover, coughing fell by 76 per cent in the extract group, compared to 47 per cent in the placebo group.

    The seeds are edible, so the orange pulp can be eaten straight from the shell. Its pulp is very good and highly aromatic it is used for juicing;

    Health & Nutrition Benefits of Eating Passion Fruit


    • The juice of passion fruit reduces cancer cell growth. Though research is underway on this issue, the phytochemicals in the fruit juice are considered to inhibit cancer cell growth.
    • The phenolic acids and flavonoids present in the fruit are supposed to possess heart-protecting function.
    • The phenolic profile of the fruit is known for its anti-microbial activity.
    • Passion fruit is a good source of antioxidants, both water soluble and fat soluble ones.
    • Passion fruit is considered good for products which require pasteurization.
    • The fruit is quite high in carbohydrates and simple sugars, which improves athletic performance.
    • It contains plant sterols, which help in lowering the levels of cholesterol.
    • Passion fruit is a reservoir of Vitamin C, Vitamin A and Potassium.
    • The seeds of the fruit are very vital sources of fiber.
    • It is supposed to possess somniferous properties, which when taken before going to bed, help the person to relax and have a restful sleep.
    • It is very good for attaining optimum health and to reduce weight.


    chan and kiruthividhya like this.

  5. #1065
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,283

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கற்றுக் கொள்வோம்... கால்சியம்!
    சமீபகாலமாக ஆண், பெண் இருபாலருக்கும் வரும் முக்கிய நோய்களில் முதன்மையான நோய்கள் சிறுநீரகத்தில் கல் மற்றும் தீராத மூட்டு வலி. இரண்டுக்கும் காரணம் கால்சியம்!
    'கால்சியம் என்றால் என்ன?'
    'கால்சியம் நம் உடலுக்குத் தேவையான மிக முக்கியத் தாது உப்பு. நம் பற்களிலும் எலும்புகளிலும், ரத்தத்திலும், தசைகளின் செயல்பாட்டுக்கும் பயன்படுகிறது. கருவில் வளரும் குழந்தைக்கு மூன்றாவது மாதத்தில் இருந்தே தாய் உட்கொள்ளும் உணவில் இருந்து கால்சியம் கிடைக்கத் தொடங்குகிறது.'
    'கால்சியத்தால் என்ன பயன்?'
    'உடல் எலும்புகளின் கட்டுமானத்துக்கும், உறுதிக்கும், பாதுகாப்புக்கும் மிக முக்கியமானது கால்சியம். தசைகள் சுருங்கி விரிவடையவும், ரத்த நாளங்கள் சீராக இயங்கவும், இன்சுலின் உள்ளிட்ட ஹார்மோன் சுரப்பதற்கும், நொதிப்பதற்கும், கால்சியம் மிகவும் உதவுகிறது.
    ''கால்சியம் பற்றாக்குறை எப்போது ஏற்படும்?''
    ''30 வயதுக்கு மேல் கால்சியம் கிரகிக்கும் தன்மை குறையத் தொடங்கும். இதனால், எலும்புகள் வலுவிழக்க ஆரம்பிக்கும். அந்தச் சமயத்தில் உணவின் மூலம் அதிகமான கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பற்களும் எலும்புகளும் வலுவிழந்து உடல் சோர்வு ஏற்படும். உடலில் கால்சியம் சேருவதையும் சிறுநீரகம் மூலமாக வெளியேறுவதையும் உறுதிப்படுத்துவது 'பாராதைராய்டு’ (PARATHYROID) ஹார்மோன். கால்சியம் அளவு குறையும் போது இந்த பாராதைராய்டு சுரப்பியானது எலும்பில் இருந்து கால்சியத்தை எடுத்து ரத்தத்தில் சேர்க்கிறது.'


    contd..


    kiruthividhya and Dangu like this.

  6. #1066
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,283

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    'கால்சியம் உணவுகள் எவை?'
    'பால் பொருட்கள், கீரை, வெண்டக்காய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, வெற்றிலை, மீன், கடல் உணவுகள், பாதாம், சூரிய காந்தி, எள் விதைகள், ராகி, கம்பு, சோளம், சிறு தானியம், பட்டாணி, சோயாபீன்ஸ், சுண்டல் ஆகிய உணவுப் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. இவற்றில் சிலவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெறலாம்.'
    'கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?'
    ''உடம்பைக் குறைக்கிறேன் என்று சிலர் மேற்கொள்ளும் தீவிர உணவுக் கட்டுப்பாட்டால், உடலுக்கு அன்றாடம் தேவையான கால்சியத்தின் அளவு குறைந்துவிடுகிறது. இதனால் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகரிக்்கிறது. ரத்தத்தில் கால்சியம் குறைவதால் 'ஹைபோகால்சிமியா’ (HYPOCALCEMIA) என்ற நோய் வரலாம். விரல்களில் உணர்வின்மை, தசைப்பிடிப்புகள், வலிப்பு, சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஹைபோகால்மியாவியால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும். மேலும் கால்சியம் குறைபாட்டால் இதயப் பாதிப்புகளும் வரக்கூடும். பெரும்பாலான பெண்கள் மூட்டுவலியால் அவதிப்படுவதற்கும், முக்கியக் காரணம் கால்சியம் குறைபாடே.'
    'கால்சியம் அதிகரிப்பது பற்றி..?'
    'ரத்தத்தில் அதிக அளவு கால்சியம் சேர்ந்தால், 'ஹைபர்கால்சிமியா’ (HYPERCALCEMIA) எனும் நோய் வரும். இந்த நோய் சிறுநீர்் பற்றாக்குறையை ஏற்படுத்தி சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதற்குக்் காரணமாகிவிடுகிறது. உணவின் மூலம் கால்சியம் அதிக அளவு சேர்வதால், சிறுநீரகக் கற்கள் உருவாவது இல்லை, உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, புரதம், சர்க்கரை, பாஸ்பரஸ், மக்னீஷியம், மற்றும் மன அழுத்தம், வைட்டமின்டி குறைபாடு, உடற்பயிற்சி இன்மை இதெல்லாம் தான் கால்சியம் சிறுநீரகத்தின் வழியே வெளியேறுவதில் தடை ஏற்படுத்துகின்றன. சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் தான் எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்க முடியும்.'


    kiruthividhya and Dangu like this.

  7. #1067
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,283

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்!
    உடலின் வளர்ச்சியிலும், வளர்சிதை மாற்றங்களிலும் முக்கியப் பங்கு வகிக்கும் புரதம், கொழுப்பு, வைட்டமின் போன்ற ஊட்டச் சத்துக்களை, நாம் உண்ணும் உணவின் மூலமே பெற முடியும். ஆனால், சரியான உணவுப்பழக்கமின்மைதான் பிரச்னை.
    இந்த ஊட்டச் சத்துக் குறைபாட்டைப் போக்க, வைட்டமின், தாது உப்பு, சத்து மாத்திரைகள், புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கிறோம். ஆனால், உண்மையில் நமக்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது, அதற்கு என்ன தேவை என்பது பற்றிய விழிப்பு உணர்வு இல்லை. உடல் உழைப்பு, ஆரோக்கியத்துக்கு ஏற்ப எதைத் தேர்ந்தெடுப்பது, எவ்வளவு சாப்பிடலாம் என்பது பற்றி உணவு மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் ரேவதி மற்றும் ஷைனி சந்திரன் விரிவாக விளக்குகின்றனர்.
    வைட்டமின்டி:
    சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் இது. வெப்பமண்டல நாடாக இந்தியா இருந்தாலும், இங்குதான் வைட்டமின் டி குறைபாடும் அதிகம். ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் சூரிய ஒளி, உடலில் பட்டாலே போதும், வைட்டமின் டி-யை சருமம் உற்பத்திசெய்துவிடும். கொழுப்பில் கரையக்கூடியது. எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கிரகிக்க இந்த வைட்டமின் மிகவும் அவசியம். ஆஸ்டியோபெரோசிஸ், ரிக்கட்ஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள், பற்சிதைவு, முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகள் இந்த வைட்டமின் சத்துக் குறைவினால் ஏற்படுகிறது.
    ஒரு நாளைய தேவை: ஐந்து மைக்ரோகிராம் அளவே உடலுக்குத் தேவை. இந்த வைட்டமின் குறைபாடு இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனை பெற்று ஒரு நாளைக்கு 3,000 ஐ.யு. என்ற அளவுக்கு மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ளலாம். கொழுப்பில் கரையக்கூடியது என்பதால், சாப்பிட்டவுடன் இதைச் சாப்பிட வேண்டும்.

    மீன் எண்ணெய்
    ஒமேகா என்ற நல்ல கொழுப்பு இதில் உள்ளது. உடம்பில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுத்து, இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் மன அழுத்தம், புற்றுநோய், கண் தொடர்பான நோய்கள், மூட்டு நோய்கள், தோல் வறட்சி போன்றவற்றைத் தடுக்கிறது. குறைந்த எடையில் குழந்தை பிறத்தல், குறைப்பிரசவம் போன்ற பிரச்னைகளில் இருந்தும் காக்கிறது. மூளை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எண்ணெய் வடிவிலும், மாத்திரைகளாகவும் இது கிடைக்கிறது.
    ஒரு நாளைய தேவை: நாள் ஒன்றுக்கு ஒன்று முதல் நான்கு கிராம் எடுத்துக்கொள்ளலாம். அவரவர் உடல் அமைப்புக்கு ஏற்ப இது மாறுபடலாம்.

    மக்னீசியம்
    தூக்கத்துக்கு மிக முக்கியமான தேவை, இந்தத் தாது உப்பு. இதயம், சிறுநீரகம் என நம் உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும், செல் வளர்ச்சிக்கும் மிகமிக அவசியம். இதயம் சீராக இயங்க வழிவகைசெய்கிறது. ரத்தச் சிவப்பணுக்களை அதிகம் உற்பத்திசெய்ய உதவும். இந்தச் சத்து குறையும்போது தூக்கமின்மை, மனப் பதற்றம் போன்ற பாதிப்புகள் வருகின்றன.
    ஒரு நாளைய தேவை: 350 மி.கி. கட்டாயம் தேவை. தானியங்கள், பருப்பு வகைகளில் இது அதிகம் உள்ளது. மேலும் நட்ஸ், கீரை, பச்சைக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். மக்னீசியம் சத்து மாத்திரையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு வரும். சாப்பிட்ட பிறகே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    contd..


    Last edited by chan; 3rd Dec 2014 at 02:32 PM.
    kiruthividhya and Dangu like this.

  8. #1068
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,283

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    துத்தநாகம்
    நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். இரும்புச் சத்துக்கு அடுத்து உடம்புக்கு அதிகச் சத்துக்களைக் கொடுக்கிறது. செல்களின் உற்பத்திக்கும், ஆரோக்கிய வாழ்வுக்கும் அவசியம். ஒரு பொருளின் வாசனையை நுகர்வதற்கும், உணவுகளின் சுவைகளை அறியவும் இந்த தாது உப்பு அவசியம். மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஜலதோஷம் ஏற்பட்டால் 'ஜிங்க்’ அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொண்ட 24 மணி நேரத்துக்குள் சரியாகிவிடுவதாகக் கண்டறிந்து உள்ளனர்.
    ஒரு நாளைய தேவை: 40 மி.கி. வரை தேவைப்படுகிறது. இந்தச் சத்தை நம் உடலால் சேமித்துவைக்க முடியாது. எனவே, குறிப்பிட்ட அளவு இந்தத் தாது உப்பு கட்டாயம் கிடைத்தாக வேண்டும். சத்து மாத்திரை தவிர்த்து இறைச்சி, கடல் உணவுகள், பால், முட்டை, ஈரல், தானியங்களில் இது கிடைக்கிறது. காபி குடிப்பதற்கு முன்பும், குடித்த பிறகும் இந்த சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ளக் கூடாது. இது உடலில் துத்தநாகம் கிரகிப்பதைத் தடுத்துவிடும்.
    கால்சியம்
    குழந்தைகளுக்கு எலும்பு, பற்கள் ஆரோக்கியமாக உருவாகவும், தசைகள் மற்றும் இதயம் தன்னுடைய வழக்கமான செயல்பாட்டை மேற்கொள்ளவும் கால்சியம் அவசியம். இந்தச் சத்து குறையும்போது, எலும்புகள் தேய்மானம் அடைந்து வலுவிழந்துபோகும்.
    ஒரு நாளைய தேவை: 1000 முதல் 1200 மி.கி. தேவை. கீரை, பால் பொருட்களில் அதிகம் இருக்கிறது. பெண்களுக்கு கால்சியம் குறைபாடு அதிக அளவில் இருக்கும். எனவே, டாக்டரிடம் பரிசோதனை செய்து பரிந்துரையின்பேரில் கால்சியத்தை மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளலாம். எந்த ஓர் ஊட்டச்சத்தையும் நாமாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது அல்ல.
    இந்த வைட்டமின் அளவுகள் அனைத்தும் ஒரு சராசரி மனிதனுக்குத் தேவைப்படுவதுதான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என அவரவர் உடல்நிலையைப் பொருத்து இது மாறுபடும். டாக்டர்களின் ஆலோசனைபெற்று எடுத்துக்கொள்வதே நல்லது.

    நன்றி டாக்டர் விகடன்

    kiruthividhya and Dangu like this.

  9. #1069
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,283

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெள்ளரி...உள்ளே வெளியே
    உள்ளே...
    வெள்ளரியில் உள்ள ஃபிஸ்டின் (Fisetin) என்ற ரசாயனம், வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். வயதாவதால் மூளை செல்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து காக்கும். நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து வெள்ளரியில் நிறைவாக உள்ளன. வெள்ளரிக்காய் தோலில் நீரில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தை சீராக்கி, நச்சுப் பொருட்கள் எளிதாக வெளியேற உதவுகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.
    ஒரு கப் வெள்ளரியில் 16 கலோரிகள்உள்ளன. அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளதால், மிகச் சீக்கிரத்தில் செரிமானம் ஆகாது. ஆனால் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
    பொட்டாசியம் நிறைவாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் உள்ள சிலிக்கா, மூட்டுகள் மற்றும் இணைப்புத் திசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படச் செய்கிறது.
    கேரட் மற்றும் வெள்ளரிச் சாற்றைக் குடிப்பதன் மூலம் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைத்து மூட்டுவலியில் இருந்து விடுபடலாம்.
    வெள்ளரியில் உள்ள பாலிபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு, மார்பகம், கர்ப்பப்பை, சினைப்பை, புராஸ்டேட் போன்ற புற்றுநோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
    contd..


    kiruthividhya and Dangu like this.

  10. #1070
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,283

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெளியே
    வெள்ளரிக்காயை ஃபேஸ்பேக் ஆக போடும்போது, அது சருமத்தைப் புதுப்பிக்கிறது. மேலும், சருமம் தளர்வு அடைவதில் இருந்து பாதுகாக்கிறது. சருமத்துக்கு இளமையான தோற்றத்தையும் அளிக்கிறது.
    வெள்ளரிக்காய்சாற்றை சருமத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சருமம் பொலிவு பெறும். வெள்ளரிச் சாற்றுடன் இளநீர் சம அளவு கலந்தும் பூசலாம்.
    புறஊதாக் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கக்கூடிய ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு.
    வெள்ளரிக்காய் சாறு ஒரு சிறந்த டோனராக செயல்படுகிறது. வெள்ளரிக்காயுடன் எலுமிச்சை, முட்டையின் வெள்ளைப் பகுதி, கற்றாழை, தேன், தக்காளி இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்து கலந்து, முகத்தில் பூசி10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சருமம் புத்துணர்வுடன் இருக்கும்.
    வெள்ளரியில் உள்ளஆஸ்பாரிக் அமிலம், நீர்ச்சத்து போன்றவை, சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிக்கின்றன. வெள்ளரியை நறுக்கி, கண் மேல் வைத்தால், கண் வீக்கத்துக்கு (றிuயீயீவீஸீமீss) உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும், இதில் உள்ள சிலிக்கா கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தையும்போக்கும்.

    நன்றி டாக்டர் விகடன்

    kiruthividhya and Dangu like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter