Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1071
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பல்வேறு வியாதிகளுக்கு அருமருந்தாகும் விளாம்பழம்!

    உடல் வலிமை தரும் பழங்களில் விளாம்பழம் சிறந்ததாகும். விளாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. நன்மையே விளையும். நன்கு பழுத்த விளாம்பழங்களையே சாப்பிட வேண்டும். பழத்தினுள் சதையுடன் சிறிய விதைகளும் கலந்திருக்கும். இந்த விதைகளை மென்றால் அதுவும் ருசியாகத்தான் இருக்கும்.
    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
    இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளன. விதை எண்ணெயில் ஒலியிக், பால்மிடிக், ஸிட்டாரிக் அமிலங்கள் காணப்படுகின்றன. இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன.
    எலும்புகளை பலப்படுத்தும்
    விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எந்த வித நோயும் வராது. ஆயுளை நீட்டிக்கச் செய்யும். சிறுவர்களுக்கு அடிக்கடி விளாம்பழத்தை கொடுத்து வர அறிவு வளர்ச்சியடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் ஏற்படும். விளாம்பழம் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். நல்ல பசியை ஏற்படுத்தும். வயதானவர்கள் விளாம்பழம் உண்டு வந்தால், அவர்களுக்கு ஏற்படும் ‘ஆஸ்டியோபெரோஸிஸ்’ என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப்பார்க்காது. பற்கள் கெட்டிப்படும். நல்ல ஜீரண சக்தியைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.
    பழுக்காத விளாங்காயைத் தண்*ணீர் விட்டு அவித்து, அதை உடைத்து, உள்ளே உள்ள சதையை எடுத்து காலை வேளையில் மட்டும் ஐந்து நாள்வரை தொடர்ந்து கொடுத்து வந்தால், சீதபேதி குணமடையும். வெறும் பேதியைகூட நிறுத்திவிடும். பேதிக்கு இது கைகண்ட மருந்து.
    இதயத்திற்கு இதமளிக்கும்
    இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். நரம்புகளுக்கு வலிமை தரும். இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கும். அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள பழமாகும். ஒரு அவுன்ஸ் விளாம்பழத்தில் பி-2 உயிர்சத்து இருக்கிறது.
    இந்த உயிர்சத்து நரம்புகளுக்கும், இதயத்திற்கும் பலமளிக்கும். ஜீரணக் கருவிகளை தக்க நிலையில் பாதுகாக்கும். அறிவுக்குப் பலம் தரும். மன சந்தோஷத்தையும், மனோ தைரியத்தையும் அளிக்கும்.
    பித்தம் போக்கும்
    பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப்படுத்தும்.
    இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட, ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.
    contd..



    Sponsored Links

  2. #1072
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    தினசரி ஒரு பழம் வீதம் 21 தினங்களுக்கு சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும். ஒருவர் சாப்பிடும் விளாம்பழத்தை மற்றவருக்கு பங்கு தரக்கூடாது. காரணம் விளாம்பழத்தில் உள்ள ஒரே ஒரு விதைக்கு மட்டுமே பித்தத்தைப் போக்கும் சக்தி உண்டு. அந்த குறிப்பிட்ட விதை மற்றவருக்குப் போய்விட்டால், பித்தத்தைப் போக்க பழம் சாப்பிடுபவர் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.
    விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.
    முகம் இளமையாக மாறும்
    வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பளம் சிறந்த மருந்தாகும்.
    இரண்டு டீ ஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீ ஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும்.
    விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும். விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும் புள்ளிகளும் காணாமல் போகும்.
    மரப் பட்டையைப் பொடித்து தண்*ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.
    பட்டுப்போன்ற கூந்தல்
    வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு! காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள் – 100 கிராம், சீயக்காய், வெந்தயம் – தலா கால் கிலோ.. இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும். செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சூப்பர் சுத்தமாகிவிடும்.
    தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப்புண், அல்சர் குணமாகும். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது. வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர.. நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும். விளாம் மர இலையை தண்*ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்







    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-ht2318-300x150.jpg  
    Last edited by chan; 4th Dec 2014 at 11:11 AM.

  3. #1073
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நீரிழிவை கட்டுபடுத்தும் கொத்தமல்லி

    நாவல் பழத்தின் கொட்டையை காயவைத்து அரைத்து நெல்லிக்காயளவு பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு, வெகுமூத்திரம் இவை இரண்டும் தீரும். நாள்பட சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆவாரப்பட்டை, அத்திப்பட்டை, மருதம் பட்டை, சரக்கொன்றை பட்டை, ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து நாலுக்கொன்றாய் கஷாயம் வைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு சரியாகும். வெண்ணெயில் சுத்தமான குங்குமப்பூவைக் கலந்து உட்கொண்டு வந்தால் நாளடையில் நீரிழிவுநோய் சரியாகும்.
    நீரிழிவு உள்ளவர்கள் இன்சுலின் போட்டுக்கொள்வதை அடியோடு நிறுத்திவிட்டு இந்த ஆரைக்கீரையை 40நாட்கள் தவறாமல் சாப்பிட்டு வந்தால் போதும், நோய் சரியாகிவிடும். கொள்ளு முளைப்பயிறை நன்றாக அலசி, நீர் சேர்த்து முளைக்கவிட்டுப் உணவாகப் பயன்படுத்தவேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அதிக உடல்சூடு, தொப்பை, கெட்ட கொலஸ்ட்ரால், நீரழிவு நோய், உடல்பருமன் போன்ற பிரச்னைகளுக்கு கொள்ளு முளைப்பயறு மிகவும் நல்லது.
    கொத்தமல்லித் துவையல்
    500 கிராம் கொத்தமல்லித்தழை, 100 கிராம் கருவேப்பிலை இரண்டையும் கழுவி, பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 2 மூடி தேங்காய் துருவல், கழுவிய 2 குடமிளகாய் சேர்த்து அரைத்து சிறிது பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்க்கவும். இதனை சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, வாயுப் பொருமல் சரியாகும். அதிக உடல் எடை இருப்பவர்கள், நீரழிவு நோயாளிகள் தினமும் சாப்பிடலாம். தொப்பை குறையும். தேமல் மறையும். நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம், பித்த நோய்கள் குறையும். ரத்தம் விருத்தியடையும்.
    நீரிழிவு அறிகுறி : உடல் எடையில் மாற்றம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை. துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை எடுக்கத் தவறினால் கண், இருதயம், சிறுநீரகம், கால்பாதம் ஆகியவற்றை பாதிப்படைய செய்யும். உணவு முறைகளாலும், உடற்பயிற்சியாலும் இரண்டாவது வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.



  4. #1074
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குழந்தை ஆரோக்கிய டிப்ஸ்! மருத்துவ டிப்ஸ்!!

    குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால் மாசிக்காயை அரைத்து, தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பூசி வந்தால் குணமாகும்.
    குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், காய்ந்த திராட்சைப் பழத்தை பசும்பால் அல்லது தண்ணீரில் ஊறவையுங்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு பழத்தைப் பிழிந்து அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தால், மலம் தாராளமாக போக ஆரம்பிக்கும்.
    குழந்தைகள் சிலநேரம் உணவு ஜீரணமாகாமல் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சதக்குப்பையை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால் பிரச்னை சரியாகும்.
    சிறுநீர் கழிக்க குழந்தைகள் சிரமப்பட்டால்… வெள்ளரி விதைகளை நீர் விட்டு அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் அடுத்த சில நிமிடங்களில் சிரமமின்றி சிறுநீர் கழியும். மேலும் சுடுநீரை பாட்டிலில் நிரப்பி வயிற்றில் ஒத்தடம் கொடுத்தாலும் பலன் கிடைக்கும்.
    குழந்தைகள் சிலநேரங்களில் காரணமில்லாமல் அழும். அது வயிற்று வலியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அந்த மாதிரி நேரங்களில் நாலைந்து புதினா இலைகளை எடுத்து வாணலியில் வெறுமனே (எண்ணெய் ஊற்றாமல்) வதக்கி, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து, பாதியாக வற்றியதும் ஒரு பாலாடை அளவு குடிக்க கொடுத்தால் வயிறுவலியாக இருக்கும்பட்சத்தில் அது சரியாகிவிடும். வயிற்றுவலி மட்டுமல்ல… விடாமல் தொடர்ந்து மலம் போனாலும் இதே வைத்தியம் பலன் தரும். இதை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் (அளவைக்கூட்டி) பின்பற்றலாம்.
    ழைக்காலத்தில், குழந்தைகளுக்கு ஜலதோஷம், சளி பிரச்னைகள் வந்து அடிக்கடி தொல்லை கொடுக்கும். மூக்கடைப்பு, ஜலதோஷம், சளி வந்தால்… நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய ஜாதிக்காயை நீர் விட்டு அரைத்து கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு இளம்சூட்டோடு மூக்கின்மேல் பற்று போட்டால் மூக்கு வடிதல் நிற்பதோடு அடைப்பு விலகும். தூதுவேளை இலை 3, சின்ன வெங்காயம் குருத்து ஒன்று, சிறிதளவு கல் உப்பு சேர்த்து நசுக்கி, அதன் சாற்றை குடிக்க கொடுத்தால் சளி விலகும்.


  5. #1075
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில எளிய வழிகள்

    தற்போது நிறைய மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆனால் இத்தகைய கொலஸ்ட்ராலை வாழ்க்கை முறை மற்றும் உணவின் மூலம் சரிசெய்ய முடியும். மேலும் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு கெட்ட பழக்கங்களும், உயர் இரத்த அழுத்தமும் ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அதிகமானால், அது உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். ஏனெனில் கொலஸ்ட்ராலுக்கும் நோய்களுக்கும் நிறைய இணைப்புக்கள் உள்ளன.
    அதிலும் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானால், அது இதய நோயை உண்டாக்கி, நாளடைவில் மரணத்திற்கும் வழிவகுக்கும். ஆகவே உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம், உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை நிச்சயம் கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும்.
    இப்போது அந்த கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

    1. வறுத்த உணவுகளைத் தவிர்க்கவும்
    இந்த மாதிரியான வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. இவை கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கச் செய்வதில் முதன்மையானது. எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், நிச்சயம் இத்தகைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.


    2. ஆரஞ்சுப் பழங்களை சாப்பிடவும்
    ஆரஞ்சுப் பழங்களில் பெக்டின் என்னும் கொலஸ்ட்ராலை உறிஞ்சி வெளியேற்றும் பொருள் நிறைந்துள்ளது. ஆகவே ஆரஞ்சுப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வருவது நல்ல பலன் தரும்.


    3. தொடர்ச்சியான பரிசோதனை
    உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, தொடர்ச்சியான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இதனால் உடலில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலின் அளவை அவ்வப்போது பரிசோதித்தால், அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் இருந்தால் என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் எதையும் பின்பற்ற முடியும்.


    4. எடை குறைவு
    கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு எடையை குறைத்தலும் ஒரு வழி தான். ஆம், பொதுவாக உடல் பருமன் அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகமாவதோடு, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையும். எனவே உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க வேண்டும்.


    5. புகைப்பிடித்தலை தவிர்க்கவும்
    உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது புகைப்பிடித்தவை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிகரெட்டில் உள்ள புகையிலை, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவற்றை அதிகரித்துவிடும்.
    contd..



  6. #1076
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    6. தினமும் உடற்பயிற்சி
    உடற்பயிற்சியை தினமும் செய்து வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், இதனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல் எடையும் குறையும்.


    7. கலோரி குறைவான உணவுகள்
    சில உணவுகள் கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும். உதாரணமாக, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், ஆப்பிள், பிஸ்தா போன்றவை கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.


    8. க்ரீன் டீ
    அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு ஒரு எளிய வழியென்றால், அது க்ரீன் டீ குடிப்பது தான். ஏனெனில் க்ரீன் டீயில் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இது அதிகமான கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.


    9. சோயா
    சோயா உணவுப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்து வந்தாலும், அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைந்து, உயர் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டுடனும் இருக்கும்.


    10. இரத்த சர்க்கரை அளவு
    கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் இருக்க வேண்டுமெனில், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அதிகப்படியான இரத்த சர்க்கரையின் அளவானது, இதய நோய்க்கு வழிவகுக்கும்.


  7. #1077
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பவுத்ரம் என்ற நோய் எதனால் ஏற்படுகிறது?

    மலக்குடலின் இறுதிப்பகுதியும்- ஆசனவாய் தொடங்கும் பகுதியும் இணைந்த இடத்தில் ‘ஆனல் கிளான்ட்‘ எனப்படும் சுரப்பிகள் உள்ளன. அவை ஈரத்தன்மையை உருவாக்குவதற்காக அமைந்துள்ளன.
    அந்த சுரப்பிகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து, கட்டியாக மாறி ஆசன வாயின்சுற்றுப்பகுதிக்கு வந்து வெடித்து, ‘பைப்‘ போன்று உருவாகிவிடும். மலம் கழிக்கும்போது அந்த ‘பைப்‘க்குள்ளும் இறங்கிவிடும். சீழ்கட்டி மீண்டும் மீண்டும் உருவாகி வெடிக்கும்.
    அந்த நிலையைத்தான் பவுத்ரம் என்கிறோம். இந்த நோய் ஏற்பட்டால் ஆசனவாய் வலிக்கும். சீழ் கசியும். ரத்தமும் வெளியேறும். மூல நோய், ஆசன வாய் வெடிப்பு நோயை விட இது கடுமையானது.
    20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களை அதிகம் தாக்கும். ஆண், பெண் இருபாலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள். பெண்கள் கூச்சம் கொள்ளாமல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே கவனிக்கவேண்டும். பெண்களின் கூச்சம் இந்த நோயின் பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.


  8. #1078
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அடிக்கடி மலச்சிக்கலா? அலட்சியப்படுத்த வேண்டாம்


    நாம் சாப்பிடும் உணவு உடலுக்குள் எங்கெங்கு பயணப்படுகிறது, என்னென்ன மாற்றங்களை உடலுக்குள் சந்திக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
    – அது ஒரு நீண்ட பயணம்!
    வாய் வழியாக சாப்பிடும் உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. அங்கிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அங்கு ஜீரண செயல்பாடுகள் நடந்து, தேவையான சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. தேவையற்றவை அனைத்தும் மலமாக பெருங்குடலை வந்தடைகிறது.
    சுமார் ஒன்றரை மீட்டர் நீளத்தில், அகன்ற கேள்விக்குறிபோல் தோன்றும் பெருங்குடல், மலத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதை இறுகவைத்து, மலக்குடலுக்குள் தள்ளும். அங்கிருக்கும் மெல்லிய தசை நாளங்கள் உடனே, மூளைக்கு ‘மலம் வந்திருக்கிறது‘ என்ற தகவலை உணர்த்தும்.
    அப்போதுதான் மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு நமக்கு ஏற்படும். மலத்தை வெளியேற்றுவ தில் மலக்குடல், ஆசனவாய் போன்றவைகளின் பங்கு முக்கியமானது. இவை இரண்டும் 15 செ.மீ. நீளம் கொண்டவை.
    நேரத்திற்கு சாப்பிட்டால், அளவோடு சாப்பிட்டால், பழம், காய்கறிகளைகொண்ட சமச்சீரான பாரம்பரிய சத்துணவுகளை சாப்பிட்டால், வாழ்வியல் முறைகளை நன்றாக அமைத்துக்கொண்டால் மேலே சொன்ன அந்த நீ..ண்..ட.. உணவுப் பயணம் சரியாக நிகழும்.
    முறையாக, முழுமையாக ஜீரண மாகி மலமும் நன்றாக வெளியேறும். இவை சரியாக நடக்கும் வரை நமக்கு எந்த சிக்கலும் இல்லை. வயிற்றில் எந்த விதமான அசவுகரியமும் ஏற்படாமல் நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று வாழ்க்கை பயணம் இனிதே தொடர்ந்து கொண்டிருக்கும்.
    மாறாக மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டால், நமது ஆரோக்கியத்திலேயே சிக்கல் ஏற்பட்டுவிடும். உலகில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேரும், இந்தியாவில் சுமார் 45 சதவீதம் பேரும், சென்னையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேரும் இந்த மலச்சிக்கலோடு வாழ்ந்து, நொந்து கொண்டிருக்கிறார்கள். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு இது அடிப்படை காரணமாக அமைகிறது.
    contd..



  9. #1079
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    பொதுவாக மலச்சிக்கல் என்று நாம் எப்போது குறிப்பிடுகிறோம்?
    பெரும்பாலும் பலரும் ஒரு நாள் ஒரு தடவை, அதுவும் காலை நேரத்தில் காலைக்கடன் கழிக்கிறார்கள். சிலர் இரு நாட்களுக்கு ஒருமுறை கழிப்பதும் உண்டு.
    நாளுக்கு ஒரு முறையோ, இருநாளுக்கு ஒரு முறையோ அது இயல்பாக நெருக்கடி இன்றி வெளியேறாமல் முக்க வைப்பதும், ரொம்ப இறுக்கமாகி வெளியேற அவஸ்தை படுத்துவதும் மலச்சிக்கலாகும். அடிக்கடி மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதும், ஒரே நேரத்தில் வெளியேறாமல் மீண்டும் தங்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும் மலச்சிக்கல்தான்


  10. #1080
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆண்களை அதிகம் தாக்கும் பெருங்குடல் புற்று நோய்

    மூலம், ஆசனவாய் வெடிப்பு, பவுத்ரம் போன்றவைகளின் அறிகுறியே பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். அதனால்தான் இந்த நோய்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் குறைவு.
    ஆனால் மலக்குடல் புற்றுநோய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆண்களை அதிகம் தாக்குகிறது. இரும்பு சத்து பற்றாக்குறை கொண்ட ரத்தசோகை இருந்தால் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவைகளில் எதிலும் புற்றுநோய் இருக்கலாம். பெற்றோருக்கு குடல் புற்று நோய் இருந்தால், பிள்ளைகளையும் அது தாக்க அதிக அளவு வாய்ப்பிருக்கிறது.
    இந்த வகை நோய்கள் இருந்தால், அவைகளை கண்டறியும் பரிசோதனை முறைகள் என்ன?
    மலக்குடல், ஆசன வாய் பகுதிகளில் எத்தகைய நோய் இருக்கிறது, எந்த அளவுக்கு அது பாதித்திருக்கிறது என்பதை டாக்டரே விரலை பயன்படுத்தி பரிசோதிப்பார். பிராக்ட்டாஸ்கோபி முறையில் பெருங்குடலில் கேமிராவை நுழைத்தும் பரிசோதிக்கலாம்.
    ‘கொலோனோஸ்கோபி‘ முறையில் பரிசோதனையும் செய்யலாம். அது வழியாக சிகிச்சையும் கொடுக்கலாம். இரண்டு மீட்டர் நீள கேமிரா இணைப்பு பெருங்குடலுக்குள் செல்லும்.
    அதன் மூலம் பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். அறிகுறிகளைக் கண்டு தொடக்க நிலையிலே சிகிச்சை பெறுவது நல்லது. இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோபி முறை சிகிச்சைகள் தேவைப்படும்.
    அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு மூல நோய் ஏற்படும் என்பது சரியா?
    சரியல்ல. அதிக உடல் சூடு கொண்டவர்களை மேற்கண்ட நோய்கள் தாக்கும் என்பதும் சரியல்ல. தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமான இருக்கின்றன.
    தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இதர தொழில்துறைகளில் பணியாற்றும் இளம் தலைமுறையினர் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் பெறுவதுமே இந்த நோய்களிடம் இருந்து தப்பிக்க சிறந்த வழி.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter