Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1081
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஒரே இடத்தில உட்காராதீங்க! ரத்த கட்டு பாதிப்பு வரும்!

    ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் உடல் பருமன் கொண்டவர்களுக்கும் ஆழ் குருதி நாள ரத்தக்கட்டு என்று அழைக்கப்படும் ( Deep Vein Thrombosis ) நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடை அல்லது கெண்டை சதை பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் ஏற்படும் ரத்தக்கட்டையே குறிக்கும்.
    நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்திருப்பது, கை கால்களை அசைக்காமல் நீண்ட நேரம் படுக்கையில் படுத்திருப்பது. விமானம், கார்களில் நீண்ட தூரம் செல்வது, சமீப அறுவை சிகிச்சை அல்லது காயம் (குறிப்பாக இடுப்பு, முழங்கால் அல்லது மகப்பேறு அறுவை சிகிச்சை) எலும்பு முறிவு, ஈஸ்ட்ரோஜென் மற்றும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை ஆழ் குருதி நாள ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு காரணமாகின்றன.
    இளைய தலைமுறை பாதிப்பு வயதானவர்களுக்கும், அதிக எடை உள்ளவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது நீண்டநேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்யும் இளைய தலைமுறையினரை இது பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் பெருகி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ரத்தக் கட்டு ஏற்பட்டால் அந்த நாளத்தில் ரத்த ஓட்டத்தை முழுதுமோ அல்லது பகுதியாகவோ அடைந்துவிடும்.
    இந்த ரத்தக்கட்டு கால் கீழ் பகுதி மற்றும் தொடை பகுதியிலேயே ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள பெரிய குருதி நாளங்களிலும் ரத்தக் கட்டு ஏற்படுவதில் இது பங்களிக்கிறது. ரத்த ஓட்டத்தை தடுத்து அல்லது ரத்தக்கட்டானது ரத்த ஓட்டத்துடனேயே சென்று ரத்தக் குழாய் அடைப்பை ஏற்படுத்தும் அபாயம் மிக்கது. உயிருக்கே ஆபத்து இந்த ரத்தக்கட்டு பாதிப்புகளினால் உயிருக்கே ஆபத்தாகும் நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ரத்த நாளச் சுவற்றிலிருந்து ரத்தக்கட்டு வெளியேறி நுரையீரலுக்குச் சென்று அதன் நரம்புகளை அடைக்கும்.
    இந்த நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு உயிருக்கு ஆபத்து விளைவிப்பது, உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவது. இந்த ரத்தக்கட்டு பிளசன்டாவிலுள்ள ரத்தக் குழாயில் தங்கினால் கருப்பையில் உள்ள கருவிற்கு ஆக்சிஜன் குறைவாகச் செல்லும். இதனால் குழந்தை பிறப்பு மிகுந்த பிரச்சினைக்குள்ளாகும். என்ன அறிகுறிகள் இந்த நோய்க்கான அறிகுறிகளாக கால்வலி அல்லது ஒரு காலில் வீக்கம் (Oedema) ஏற்படுதல்.
    contd..



    Sponsored Links

  2. #1082
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    உடலில் உஷ்ணம் அதிகரிப்பு. சரும நிறம் சிகப்புத் தன்மையாக மாறும் என்கின்றனர் மருத்துவர்கள். ரத்தக்கட்டு இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் முதலில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காலை மேலே தூக்கும்போது வலி ஏற்பட்டால் அந்தப் பகுதியில் ரத்தக்கட்டு இருப்பதற்கான அறிகுறி உள்ளது. மேலும் இதனைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கால் ரத்த நாளத்தில் “டை” ஊசி மருந்து மூலம் செலுத்தப்பட்டு காலை எக்ஸ் ரே எடுக்கப்படுவதும் உண்டு.
    இந்த ரத்தக்கட்டை முன்னதாகவே கண்டுபிடித்து முறையாக சிகிச்சையளித்தால் பாதிப்பு ஏற்படாது. அதேசமயம் கவனக் குறைவாக சிகிச்சை எதுவும் எடுக்காமல் இருந்தோமானால் உயிருக்கே ஆபத்தாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அடிக்கடி நடங்க ஒரே நிலையில் நீண்டநேரம் உட்காருவது, நிற்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஓய்வு நிலையிலும் கால்களை அசைத்துக் கொண்டிருங்கள்.
    கால் விரல் மற்றும் முழங்கால்களை மடக்கி நீட்டியபடி இருங்கள். உட்கார்ந்திருக்கும்போது அல்லது படுத்திருக்கும்போது கால் மேல் கால் போடுவதை தவிர்க்கவும். நிறைய தண்ணீர் குடிங்க காலின் வழியாக செல்லும் ரத்த ஓட்டத்தை தடை செய்யும் விதத்தில் இறுக்கமாக சாக்ஸ் அணிவதை தவிர்க்கவும். உடல் நீர் வற்றாமல் பாதுகாப்பது அவசியம். விமானத்தில் செல்லும்போது நிறைய தண்ணீர் குடியுங்கள் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


  3. #1083
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சிறுநீரகத்தின் நிகரில்லா பணி
    நமது உடலுக்குள் ஒரு ரத்த நதி ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 5 லிட்டர் ரத்தம் பாய்கிறது. இதில் 1 லிட்டர் மட்டும் சிறுநீரகத்திற்கு போகிறது. ரத்தம் முதலில் பாய்வதும் இங்கிருந்து தான். சிறுநீர் வடிகட்டப்படும் வேகத்தை பார்த்தால் நாம் அசந்து போய்விடுவோம்.

    ஒரு நிமிடத்திற்கு 125 மிலி சிறுநீர் ஆரம்ப நிலையில் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த வேலையை சரியாக பார்க்கும் நெப்ரான்கள் திடீரென வேலையை நிறுத்திவிட்டால் நாள் முழுவதும் நாம் நம்பர் ஒன் போய் கொண்டே இருப்போம். இதை முறையாக ஒழுங்கு படுத்துவது தான் நெப்ரான்கள்.

    நாம் ஒரு நாளில் என்னென்ன வேலைகள் செய்கிறோம் என்பது நமக்கு தெரியும். ஆனால் நெப்ரான்களுக்கு என்ன வேலை வரப்போகிறது என்றே தெரியாது. காரணம் நாம் சரிவிகித உணவை சாப்பிடுவதில்லை. மதியம் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 என்று உள்ளே தள்ளுகிறோம்.

    மாலையில் பஜ்ஜி, வடை, காபி போதாத குறைக்கு ஐஸ்கிரீம் என்று வெளுத்து கட்டுகிறோம். இப்படி அதிகமான உணவை சாப்பிடுவதால் அதிக கழிவுகள் சேருகின்றன. அவற்றை வெளியேற்ற நெப்ரான்கள் தான் அதிகம் உழைக்க வேண்டியதாகிறது. எவ்வளவு அதிகம் என்றால் ஒரு வீட்டில் சேரும் குப்பைகளுக்கும், கல்யாண மண்டபத்தில் குவியும் குப்பைகளை அகற்றுவதற்கும் உள்ள வித்தியாசம்.
    contd..



  4. #1084
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    கல்யாண மண்டபம் குப்பைகளை அகற்ற வேலை ஆட்களை போட்டுவிடுவோம். ஆனால் நெப்ரான்களுக்கு வேலை ஆட்கள் எல்லாம் போட முடியாது. அவைகள் தான் ஓவர்டைம் பார்க்க வேண்டும். தினசரி இதை போலவா சாப்பிடுகிறோம்? விரதம் என்ற பெயரில் மறுநாளே தண்ணீர் கூட குடிக்காமல் கொலை பட்டினியாக கிடக்கிறோம்.

    சரி இப்போதாவது நெப்ரான்கள் ஓய்வாக இருக்கிறதா? என்றால் அதுதான் கிடையாது. வழக்கத்தை விட இந்த நேரத்தில் தான் நெப்ரான்கள் அதிக அளவில் உழைக்கிறது. அதனால் தான் உடலுக்குத் தேவையான சக்தியை தன் சேமிப்பில் இருந்து தருகிறது சிறுநீரகம். நெப்ரான்களின் வழியாக ஆரம்பநிலை சிறுநீர் வரும்போது உடம்பில் ஆங்காங்கே தண்ணீரும், தாதுக்களும் உறிஞ்சப்படுகின்றன.

    அதில் உபயோகமானது தவிர மீதியை ரத்தத்திற்கு அனுப்புகின்றன. அதனால் தான் அன்று மகாத்மா காந்தி முதல் இன்று அன்னாஹசரே வரை உண்ணாவிரதம் இருக்க முடிகிறது. சாப்பாடு இல்லாமல் பசி, பட்டினியால் தவிக்கும் போது அளவுக்கு அதிகமான தண்ணீரும், தாதுக்களும் வெளியேறாமல் காப்பாற்றுவதும் சிறுநீரகம் தான்.

    அதனால் தான் சிறுநீரகத்தை ஒரு சுத்திகரிப்பு தொழிற்சாலை என்று மருத்துவம் சொல்கிறது. பலதடவை சிறுநீர் வடிக்கப்படுவதால் அது அதிகபட்ச கழிவுகளை உடையதாக இருக்கிறது.

    அசுத்தமான ஒரு அறையை சுத்தமாக கழுவ வேண்டுமானால் அதிக அளவு தண்ணீரை விட்டு மீண்டும், மீண்டும் அலசுவோம். அதுபோல் தான் இந்த சுத்திகரிப்பு நிகழ்வும் நடக்கிறது. நன்றாக சுத்தப்படுத்த நிறைய நீர் தேவைப்படும்.

    அதனால் தான் ஒரு நாளைக்கு சுமார் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் சொல்கிறார்கள். தாயின் கருவில் 14வது வாரத்தில் தோன்றி, மனிதன் இறக்கும் வரை ஓய்வின்றி வேலை செய்கிறது சிறுநீரகம். அது ஓய்வெடுக்கும் போது மனிதன் உயிரோடு இருப்பதில்லை.


  5. #1085
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இரத்த கொதிப்பு ஏற்படுவது ஏன்?
    இரத்த கொதிப்பு என்பது அதிக ரத்த அழுத்தத்தினால் ஏற்படுவது, இது ஏற்படுவதற்கான காரணங்களை துல்லியாமாக கூறமுடியாது. ஆனால் இது பரம்பரை ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. அது பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் என அது பரம்பரை பரம்பரையாக தொடர்வதாகும்.

    பொதுவாக இவை தொடர் மன அழுத்தத்தின் காரணமாகவும், ஓய்வில்லாத கடுமையான உழைப்பு, அதிக அளவு கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களின் மூலமும் மற்றும் இறைச்சி, தேயிலை, புகையிலை மற்றும் போதை பொருட்களின் மூலமாகவும் இந்த இரத்த கொதிப்பு உண்டாகிறது.

    ஆனால் இவையனைத்தும் எந்த அளவில் ஏற்படுத்துகின்றன என திடமாக சொல்லமுடியாது. இவை எதுவாக இருந்தாலும் சரி இரத்த அழுத்தமானது ஒரே நாளில் ஏற்படுவதில்லை. நீண்ட காலங்கள் உள்ளுற இருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

    நம்முடைய இரத்த அழுத்தம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு ஏற்றார்போல் மாறும். துயரம், அதிக அளவிலான மகிழ்ச்சி, அச்சம் மற்றும் கட்டுக்கடங்காத உணர்ச்சிகள் மூலமாக இரத்த அழுத்தமானது 30 முதல் 60 எண்கள் வரை உயரும்.

    நாம் உறங்கும் போது உள்ளதை விட நடக்கும் போதும் அதைவிட ஓடும் போதும் இரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும். நமது இதயமானது அதிக அளவு இரத்த அழுத்தம் ஏற்படும் போது அதற்கு ஏற்றவாறு விரிந்து தர வேண்டும். இல்லையெனில் இதயமானது அதிக இரத்த அழுத்தத்தை தாங்காமல் நின்று விட கூடிய அபாயமும் உண்டு.

    அதிக இரத்த கொதிப்பானது நமது இரத்த குழாய்களை பாதிக்கும் .நம்து இரத்த குழாயானது ரப்பரை போன்று நெகிழ்ச்சி தன்மையுடையது. ஆனால் நமக்கு வயதேற ஏற அவை தனது நெகிழ்ச்சிதன்மையை சிறிது சிறிதாக இழக்க ஆரம்பிக்கும். இந்த நெகிழ்ச்சி தன்மை இருக்கும் வரையில் தான் இரத்த கொதிப்பினை குழாய்கள் தங்கும்.

    நெகிழ்சிதன்மை மாறிய பின்பு அவை இந்த இரத்த கொதிப்பின் அழுத்தத்தை தாங்காது இதனால் இரத்த குழாய்கள் வெடிக்கவும் கூடும். எனவே நமதுடலில் ஆரோக்கியம் இருக்கும் போதே இவற்றிற்கான பரிகாரங்களை செய்ய ஆரம்பித்துவிட வேண்டும். இதன் மூலம் இந்நோயினை மேலும் வளரவிடாமல் தடுக்கலாம்.


  6. #1086
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?
    3 முதல் 5 வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 500மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் மூடி இரவு முழுவதும் விட்டுவிடவும்.

    காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்று விட்டு நீரையும் குடித்து விடவும். இது ஒரு சிரமமான செயல்தான் என்றாலும் மூட்டு தேய்வு, மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும். இம்முறை புற்று நோய் உள்ளவர்ககளுக்குக் கூட ஒரு துணை மருந்தாக உதவும்.

    இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு ஆளானவர்கள் வெண்டைக் காயை மேற்சொன்ன வகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது.
    contd..



  7. #1087
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    வெண்டைக்காயை பிஞ்சுகளாகத் தேர்ந்தெடுத்து 150 கிராம் அளவுக்கு எடுத்து 700 மி.லி. நீர்விட்டு பாதி அளவாக சர்க்கரை அல்லது தேன் சேர்த்து 50 முதல் 70 மி.லி. வரை எடுத்து 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உள்ளுக்குக் கொடுக்க வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலர்களும்), இருமல், நீர்க்கடுப்பு வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.

    இரண்டு மூன்று வெண்டைக் காய்களைத் துண்டித்து 500 மி.லி. நீரில் இட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை சுவாசிக்க இருமல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல், தொண்டைக்கட்டு, தொண்டை எரிச்சல் ஆகியன குணமாகும். தொடர்ந்து சில நாட்கள் செய்வது நல்லது.

    உடலில் எங்கேனும் புண்ணோ, வீக்கமும் வலியும் கொண்ட கட்டியோ இருந்தால் இளம் வெண்டைக் காய்களையாவது வெண்டைச் செடியின் இலையையாவது நன்றாக பசை போல அரைத்து புண்களின் மீதோ கட்டிகளின் மீதோ வைத்து கட்டி வர புண்கள் விரைவில் ஆறும். கட்டிகளும் சீக்கிரத்தில் பழுத்து உடைந்து உள்ளிருக்கும் முளை வெளிவந்து வேதனை தணியும்.

    இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி 200 மி.லி. நீரிலிட்டு நன்கு கொதிக்க விட்டு எடுத்து ஆறவிட்டு சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வர வயிற்றை வலிக்கச் செய்து வெளியாகும் நினைக் கழிச்சல் பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் (ரத்த சீதபேதி) ஆகிய நோய்கள் குணமாகும்.

    இளம் கர்ப்பிணிப் பெண்கள் வெண்டைக்காயைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நரம்பு மண்டலக் கோளாறுகள் தவிர்க்கப்படும்.

    வெயில் மிகுந்த போது வெயிலின் தாக்கத்தால் மயக்க நிலை வருமோ என அஞ்சுபவர்கள் அல்லது ஏற்கனவே அதை அனுபவத்தில் கண்டவர்கள் இரண்டு மூன்று வெண்டைக்காய்களை நறுக்கி நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி சர்க்கரை போதிய அளவு சேர்த்து குடித்து வருவதால் வெயிலின் தாக்கம் (சன்ஸ்ட்ரோக்) தணிக்கப்படும்.

    வெண்டைக்காயை நசுக்கி தலைக்குத் தேய்த்து வைத்திருந்து அரை மணிநேரம் கழித்து தலைக்குக் குளிக்க பொடுகு (டேன்ட்ரப்) குணமாகும். இத்துணை மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் மருத்துவ செலவையும் குறைத்து ஆரோக்கியத்தையும் பெருக்கலாம்


  8. #1088
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க வழிகள்
    பெண்கள் உடல் எடையினை எளிதாக குறைக்க முடியாது. எனினும், பெண்கள் இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கத்தை செயல்படுத்தி நீங்கள் விரைவில் உங்கள் எடையை குறைக்க உதவும்!

    – தொடர்ந்து ஒரு குறைந்த கால* உணவு திட்டம்
    – பசிக்கும் போது மட்டும் உணவு. அதுவும் சரியான* இடைவெளியில்
    – நல்ல* உணவு பழக்கம் மற்றும் தேவையற்ற* உணவு பழக்கத்தில் இருந்து விலகி இருத்தல்

    – தினமும் எடையை பதிவு செய்து வைத்திருப்பது மற்றும் அதன் முன்னேற்றத்தை அளவிடுதல்
    – மது மற்றும் காற்றடைக்கப்பட்ட* பானங்களை தவிர்ப்பது
    – செயற்கை இனிப்பாலான* சர்க்கரைகளை தவிர்தல்

    – தினமும் உடற்பயிற்சி – மருந்துகள் மறுஆய்வு
    – குறைந்தது 8 மணி நேரம் தூக்க*ம் – தியானம் செய்தல்
    – பேக்கரி மற்றும் பால் பொருட்களை குறைவாக*து உட்கொள்ளுவது

    – போதுமான குடிநீர்
    – கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் அல்லது கூடுதல் உணவு
    – இன்சுலின் அளவு குறைவாக உள்ள உணவுகள்
    – அடிக்கடி ஹார்மோன்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.

    பெண்களின் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் அதையொட்டிய உடல் எடையை அதிகரிப்பு இதை கொண்டே கண்டறியப்பட்டது. எனவே விரைவில் நீங்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அறிகுறிகளை கண்காணிக்கலாம்.

    சிகிச்சை வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள் அல்லது செயற்கை ஹார்மோன்களும் இதில் அடங்கும். எடை அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளால் பெண்களுக்கு அதிக அளவில் பாதிப்படைவீர்கள்.

    நீங்கள் உங்கள் ஹார்மோன் பிரச்சினை எல்லா இடத்திலும் இருக்கும் என்று சந்தேகம் இருந்தால், மருத்துவரிடம் உங்கள் உடல் நிலையை காட்டி ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு விழிப்புடன் இருங்கள்.


  9. #1089
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மெனோபாஸ்: பெண்களின் உடலில் ஏற்படும் உளவியல் மாற்றங்கள்
    மெனோபாஸ் என்பது ஆயுர்வேதத்தில் ரஜோனிவிருத்தி (மாதவிடாய் நிற்பது) எனப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் பெண்கள் உடல் மீது கூடுதல் கவனம் செலுத்தி, பின்னாளில் நலமாக வாழ அடித்தளம் அமைப்பதாக இருக்கிறது.

    பெண்களின் உடலியல் செயல்பாடுகளை மூன்று பருவங்களாகப் பிரிக்கலாம். 1. குழந்தைப் பருவம், 2. நடு வயது – இளம் பருவம், 3. முதுமைப் பருவம். ஆயுர்வேதப் புரிதல்படி குழந்தைப் பருவத்தில் கபம் அதிகமாக ஏற்படும். நடு வயதுப் பருவத்தில் பித்தம் அதிகரிக்கும்.

    முதுமைக் காலத்தில் வாயு எனப்படும் வாதம் ஏற்படும். மாதவிடாய் நிற்பது என்பது இளம் பருவநிலை மாறி முதுமைக்குச் செல்வதைக் குறிக்கிறது, அதாவது பித்த நிலையிலிருந்து வாத நிலைக்கு மாறுவதாகும். பெரும்பாலான அறிகுறிகள் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் கலந்ததால் ஏற்படும் தடுமாற்றச் சூழலாக இருக்கும்.

    இதனால் பெண்களின் உடலியலில் அதிக மாற்றங்கள் ஏற்படும். பெண்களின் உடல் ஹார்மோன்கள் பித்தம், கபம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுவதால், இந்தச் சூழலில் பெண்கள் உடல் அதிக வெப்பமாவதை உணர்வார்கள். உடல் எடையும் அதிகரிக்கலாம். நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை போன்றவை வாதத்தின் நிலை தடுமாற்றத்தால் தோன்றுவதாகும்.

    ஒவ்வொரு பெண்ணுக்கும் மெனோபாஸ் அறிகுறிகள் ஒவ்வொரு வகையில் இருக்கும். இது பெண்களின் உடல் வாகுக்கு ஏற்றவாறு அமையும்.
    contd..


    shrimathivenkat likes this.

  10. #1090
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    பொதுவாக உடல் அதிக வெப்பமடைவது, இரவில் அதிகம் வியர்ப்பது, அதிக உதிரப் போக்கு, செயல்பாடுகளில் தடுமாற்றம், பிறப்புறுப்பில் வறட்டுத்தன்மை ஏற்படுவது, தூக்கமின்மை, எரிச்சல், உளைச்சல், எலும்பு மற்றும் மூட்டுகளில் வலி, இதயப் படபடப்பு, சோர்வு, மலச்சிக்கல், சிலருக்குச் சிறுநீர் போக்கில் முறையற்ற தன்மை ஆகியவை உண்டாகலாம்.

    மெனோபாஸ் காலம் என்பது பித்தக் காலச் சுழற்சியிலிருந்து வாதக் காலத்துக்கு மாறுவதாகும். இந்தச் சுழற்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பெண்ணின் உடலில் பித்தமும் வாயுவும் இருந்தால், மெனோபாஸ் சமயத்தில் அவை அதிகரிக்கும். ஹார்மோன், இயற்கையான உடலியல் மாற்றங்கள் ஏற்படுவதால் இப்படி நிகழ்கிறது.

    மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் தடுமாற்றம் செரிமானத்தைப் பாதிக்கும். இதன் காரணமாக உடலில் ஊட்டச்சத்து சேர்வது தடைபடும். மேலும் இந்தச் செல்கள் உடலில் இருந்து கழிவுப் பொருள்களை வெளியேற்றுபவை. இவை அனைத்தும் மெனோபாஸ் சமயத்தில் பாதிப்புக்குள்ளாகும்.

    மூன்றாவது முக்கியமான விஷயம் மூளையைத் தவறாக வழிநடத்துவது, கோபம், எரிச்சல் போன்றவற்றை அதிகரிக்கச் செய்வது போன்ற செயல்கள் தூண்டப்படும். மெனோபாஸ் இயற்கையான உடலியல் மாற்றம்தான் என்றாலும், அது நிகழும்போது உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம், தொடர்ந்து தூக்கமின்மை, மூளைச் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஆகியவை ஏற்படும்.

    இவற்றுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், பின்னாளில் பல நோய்கள் உருவாகலாம். இத்தகைய அறிகுறிகள் உடல் தசைகளுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், எலும்பு, தசை, கொழுப்பு, உடலுறுப்பு, தோல் மற்றும் ரத்தம் உறைவது உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்படுத்தலாம்.

    ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக உடலில் கழிவுப் பொருள் தங்கினால், அது ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் வெப்பம் அதிகரிப்பதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்த நாளங்களை இப்படி விரிவடையச் செய்வதால் வெப்பம் உருவாகும். இதனால் தசையும் விரிவடையும்.

    shrimathivenkat likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter