Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1091
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மெனோபாஸ் சமயத்தில் ஆயுர்வேதச் சிகிச்சை அவசியம்
    மெனோபாஸ் சமயத்தில் ஆயுர்வேதச் சிகிச்சை முறையை மேற்கொள்வது என்பது, உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகப்படுத்தி உடலே அதைக் குணப்படுத்தும் அளவுக்குத் தயார்படுத்துவதாகும்.

    இதற்கு மூன்று வகையான அணுகுமுறைகள் அவசியம்: அவை உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் இயற்கை மருத்துவச் சிகிச்சை முறை. உடலில் உள்ள தோஷங்களைச் சமநிலைபடுத்துவது ஆயுர்வேதச் சிகிச்சை முறையில் உண்டு.

    இதன் மூலம் மெனோபாஸ் காலச் சுழற்சிக்குப் பிறகு உடலில் உள்ள ஹார்மோன்கள் பழையபடி இயங்க வழிசெய்கிறது. இயற்கை மூலிகைகளான ஷதாவரி, அசோகா, லிகோரைஸ் ஆகியவற்றின் வேர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தாவரங்களில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்புக்கு உதவும் மருத்துவக் குணங்கள் உள்ளன.

    அத்துடன் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறை, அதிகப்படியான தெம்பை அளிப்பதுடன் பைதோஈஸ்ட்ரோஜென் சுரக்கவும் உதவுகிறது. வெளிப்புறச் சிகிச்சை முறையான எண்ணெய்க் குளியல் மூலம் உடலிலுள்ள கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஷிரோதரா (முன் நெற்றியில் எண்ணெய் தடவுதல்) மற்றும் பஞ்சகர்மா சிகிச்சைகள் உடலின் செயல்பாடுகளைச் சுத்தமாக்குகின்றன.

    இது உடலுக்குச் சுகத்தை அதிகரிக்கிறது. செரிமானச் சக்தியையும் (அக்னி) அதிகரிக்கச் செய்கிறது. இவை அனைத்தும் மன அழுத்தம் மற்றும் எரிச்சலைப் போக்குகின்றன. மருத்துவச் சிகிச்சை, ஆயுர்வேதச் சிகிச்சை முறையில் லோத்ரா, அசோகா, ஷதாவரி மற்றும் குமாரி ஆகிய இயற்கை மூலிகைகள் மேற்கண்ட உடற்செயல் குறைபாடுகளைப் போக்கப் பயன்படுகின்றன.

    மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள, அஷ்வசனம் (சிறந்த ஆலோசனை) சிறந்த வழிகாட்டியாக உதவுகிறது. ஹார்மோன்களைச் சீராக வைத்திருக்க உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம். காய்கறிகள், பழங்கள், பால், நெய், சோயா பால், கீரை, கொண்டைக்கடலை உள்ளிட்டவற்றை உட்கொள்ளலாம்.

    பைதோஈஸ்ட்ரோஜென் சுரக்க இவை உதவும். சூடான உணவு, பானங்கள், நேரத்துக்குச் சாப்பிடுவது மற்றும் வெந்தயம் உள்ளிட்டவற்றை உணவில் அதிகம் சேர்ப்பது போன்றவையும் சிறந்தவையே. காபி குடிப்பதைத் தவிர்ப்பது, சர்க்கரை, குளிர்பானங்கள், சாலட்டுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது ஆயுர்வேதம் தரும் பரிந்துரை.


    Sponsored Links
    shrimathivenkat likes this.

  2. #1092
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    30 வயதில் பெண்களுக்கு வரும் இதயநோய்
    கடுமையான பணிச் சூழல்களால் மன அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கேடுகள் பெண்களிடம் அதிகரித்துவருவதாகச் பல்வேறு ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இதயநோய்களுடன் சிகிச்சைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை 20% வரை அதிகரித்துள்ளது.

    20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50 வயதைக் கடந்த - மாதவிலக்கு நின்றுபோன - பெண்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படுவது வழக்கம். காரணம், பெண்களுக்கு இயற்கையிலேயே சுரக்கின்ற ஈஸ்ட்ரஜன் எனும் ஹார்மோன் இவர்களுக்கு மாதவிலக்கு நிற்கும்வரை மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.

    இந்த ஹார்மோன் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும்; ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவும்; எல்.டி.எல். எனும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, ஹெச்.டி.எல். எனும் நல்ல கொழுப்பை அதிகப்படுத்தி, இதயத்துக்குப் பாதுகாப்பு தரும். ஆனால், இப்போதோ இந்தியாவில் 30 வயதுள்ள பெண்களும் மாரடைப்புக்குச் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

    ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. ஈஸ்ட்ரஜன் அளவு இன்றைய பெண்களுக்கு வெகுவாகக் குறைந்துவிட்டதுதான் காரணம். இதற்கு முக்கிய காரணம்பெண்களிடம் அதிகரித்துவரும் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம். ஆரோக்கியம் காக்கும் இந்தியப் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடும் வழக்கம் இப்போது பொதுவாகவே குறைந்து விட்டது.

    மேற்கத்திய உணவுக் கலாச்சாரம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது. சிறுதானியங்களின் மதிப்பை நாம் மறந்துவிட்டோம். பருப்புகளின் பலனைப் புறந்தள்ளிவிட்டோம். காய்கறிகளைச் சமைக்கச் சோம்பல் வந்துவிட்டது.

    பதிலாக, அடிக்கடி உணவகங்களுக்குச் சென்று, எண்ணெயில் வறுத்த, பொரித்த, கலோரிச் சத்து மிகுந்த பீட்ஸா, ஹாம்பர்கர் போன்ற துரித உணவுகளையும் அசைவ உணவுகளையும் மிகையாக உண்பது வாடிக்கையாகிவிட்டது. வீட்டில் உள்ள பெண்களுக்கு உடலுழைப்பு குறைந்துவிட்டது. உடற்பயிற்சியும் இல்லை.

    இதனால், இவர்களுக்கு வளர்சிதை மாற்றத்தில் அசாதாரண மாற்றம் ஏற்பட்டு, இளமையிலேயே உடற்பருமன் வந்துவிடுகிறது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது; இன்சுலின் எதிர்ப்பை அதிகப்படுத்துகிறது; நீரிழிவு நோயையும் இதய நோய்களையும் கூட்டுசேர்த்துவிடுகிறது.

    இதயநோய்குறித்த முழு ஆய்வு ஒன்று, வளரும் நாடுகளில் இருக்கும் மக்களைவிட இந்தியாவில் நீரிழிவு நோயும் மாரடைப்பும் இளம் வயதிலேயே பெண்களுக்கு ஏற்படுகிறது என்றும், 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் கிராமப்புறங்களில் மூன்று முதல் ஐந்து சதவீதமும், நகர்ப்புறங்களில் 8 முதல் 10 சதவீதமும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது.

    இவற்றின் விளைவால், பெண்களுக்கு இதய நோய்களால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன என்றும் அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.


  3. #1093
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பெண்களை தாக்கும் பி.சி.ஓ.எஸ் நோய் அறிகுறிகள்
    உலகில் நான்கு பெண்களில் ஒருவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.,எஸ்.,) இருப்பதால், குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.

    நோய் அறிகுறிகள்: இந்த நோய், பெண்களின் கருப்பையை தாக்குவதால், வெளியில் தெரிவதில்லை. இதனால், ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மன அழுத்தம் ஏற்படுதல், எண்ணங்களில் மாற்றம், தேவையற்ற இடங்களில் முடி வளர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. திருமணமான பெண்கள் என்றால், குழந்தையின்மை அல்லது பிரசவத்தில் சிக்கல் தோன்றும்.

    விளைவுகள்: கர்ப்பத்தின் துவக்கத்திலேயே, குறைந்தபட்சம் மூன்று முறையாவது, கரு தங்காமல் கலைந்துவிடும்.

    கர்ப்பகால சர்க்கரை நோய்: கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு வகை சர்க்கரை நோய். இதற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதால், தாய்க்கும், குழந்தைக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. குழந்தை பிறந்த பின், இந்த நோய் மறைந்து விடும். ஒரு சிலருக்கு தொடர வாய்ப்புள்ளது.

    ரத்த அழுத்தம் அதிகரிப்பு: தாயின், 20வது வார கர்ப்பகாலத்தில் திடீரென ரத்த அழுத்தம் உயர்வதால், தாயின் சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் மூளை பாதிக்கும் அபாயம் உள்ளது.

    சிசேரியன் பிரசவம்: பி.சி.ஓ.எஸ்., உள்ள கர்ப்பிணிக்கு இயற்கையான பிரசவம் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும்போது, தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணத்திற்கு முன், ஒழுங்கற்ற மாதவிடாய், முடிகொட்டுதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடனே ஒரு நல்ல டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

    பரிசோதனை செய்து, பி.சி.ஓ.எஸ்., இருப்பது உறுதியானால், உடனே சிகிச்சையை துவங்க வேண்டும். ஒரு சிலருக்கு முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு மூலம் சரியாகிவிடும்.
    contd..



  4. #1094
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    ஒரு சிலருக்கு மாத்திரைகள் மூலமும், குழந்தைப் பேறுக்காக காத்திருப்பவர்கள் என்றால், ஓவரிகளில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். ஒமேகா-3 கொழுப்புள்ள உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேதம், அக்குபஞ்சர், யோகா மற்றும் பிராணாயாமமும் நோயை குணமாக்கும்.

    உடற்பயிற்சி மற்றும் உணவு: முறையான உணவுப் பழக்கம், தவறாத உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியால் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். இன்சுலின் மற்றும் ஆன்ட்ரஜன் அளவைக் குறைக்கும் பாலீஷ் செய்யப்பட்ட கார்போஹைடிரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். இறைச்சி, கொட்டைகள், தானியங்கள், உலர் விதைகள், முட்டை, சீஸ், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு, பச்சை கீரைகள், முட்டைக்கோஸ், தக்காளி போன்ற அடர்ந்த நிறமுள்ள காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.


  5. #1095
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கர்ப்பப்பை தளர்வின் அறிகுறி
    தற்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கர்ப்பப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கான அறிகுறிகள் என்னவென்று பார்த்தால்...

    • இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.

    • ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.

    • எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.

    • பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை

    • அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்

    • சிலருக்கு இரும்பினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு

    • அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்

    • சிறுநீரை அடக்க முடியாத நிலை.

    • தன்னை அறியாமல் சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை

    • மலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

    - இவற்றில் ஒரு சிலவோ, பல அறிகுறிகளோ இருப்பின், அவர்கள் மருத்துவரை அணுகி உரிய பயிற்சிகளைமேற்கொள்வது நல்லது.


  6. #1096
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும்
    ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள்.

    பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப் படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

    கருத்தறித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது மாதவிலக்கு ஏற்படுவதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான்.

    ஒரு பெண் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக் குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. பெண்ணின் உடலில் கருத்தறிப்பதற்கான வாய்ப்பும் முடிந்து போகும்.

    மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் மாதவிலக்கு நின்று போதல் அல்லது மொனோபாஸ். இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் காமநிலை, காமஉணர்வு, எடை,

    உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் ஏதாவது பிரச்சினை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.


  7. #1097
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கருப்பை வாய் புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை
    இந்தியாவில் அதிகமான பெண்களை தாக்கும் கருப்பை வாய் புற்றுநோயை கண்டறிய சில பரிசோதனைகள் உள்ளன. பாப் சோதனை எனப்படும் பாப்ஸ்மியர் சோதனை தான் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய செய்யப்படும் முதல்நிலை சோதனையாகும்.

    இதில், கருப்பை வாய் பகுதிக்கு கருவியை செலுத்தி, அங்குள்ள செல்களை சேகரித்து வெளியே எடுத்து, அதில், புற்றுநோயை உருவாக்கும் செல்கள் அல்லது அசாதாரண செல்கள் ஏதேனும் உள்ளதா என்று பரிசோதிப்பார்கள். இந்த பரிசோதனையில், அசாதாரண செல்கள் அல்லது புற்றுநோய் செல்கள் இல்லை என்பது உறுதியானால், பரிசோதனைக்கு உள்ளான பெண்ணுக்கு மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படாது.

    ஆனால், அப்பகுதியில் அசாதாரண செல்கள் இருந்து, ஆனால், அவை தற்போது புற்றுநோய் செல்களாக மாறாமல் இருக்கும் பட்சத்தில், உடனடியாக, அந்த அசாதாரண செல்கள் புற்றுநோய் செல்களாக மாறாமல் இருப்பதற்கான சிகிச்சையை மருத்துவர் துவக்குவார்.

    மேலும், அங்கு புற்றுநோய் செல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அவருக்கு திசு சோதனை செய்யப்படும். அதாவது, கருப்பை வாய் பகுதிக்குள் கருவி செலுத்தப்பட்டு, அங்குள்ள சிறு திசுப்பகுதி வெட்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

    கருப்பை வாய் பகுதியை தெளிவாகக் காண கால்போஸ்கோப்பி எனப்படும் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், அந்த திசுப்பகுதி புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறதா என்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை உடனடியாகத் தொடங்கப்படும்.


  8. #1098
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    romba arumaiyaana thagavalgal thantharku nandri.

    chan likes this.

  9. #1099
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பெண்களுக்கு ஏற்படும் எலும்பு அடர்த்தி தேய்மானம்

    பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசாரியாக பாதிகாலம் வலியால் அவதியுறுகிறார்கள். குழந்தை பேறு என்ற தனித்தன்மை இருப்பதால் இயற்கை நியதியாக பெண்களுக்கு வலி தாங்கும் சக்தி சற்று கூடுதலாக அமைந்துள்ளது.

    இருப்பினும் உச்சி முதல் பாதம் வரை வலி உண்டாக்ககூடிய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகிறது. மாதவிடாய் நின்று போன பிறகு பெண்களுக்கு எலும்பு அடர்த்தி தேய்மானம் தொடங்கிவிடும்.

    சாதாரணமாக ஏற்படும் இந்த தேய்மானத்தை துரிதப்படுத்தும் நோய் தான் “ஆஸ்டியோ பொரோசிஸ்’ என்று வழங்கப்படுகிறது. சாதாரணமாக உடம்பின் எழும்புகளில் உருவாக்கமும், அழிவும் நடந்து கொண்டே இருக்கும்.

    இதில் சமமின்றி போகும்போது, ஆஸ்டியோ பொரோசிஸ் ஏற்படுகிறது. ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியம் அதிகம். ஆனால் இந்த இடர்பாட்டை குறைக்க பல வழிகள் உண்டு.


  10. #1100
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆணை விட பெண் பலமானவள்
    பெண்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் குறைவு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆண்களில் 100 பேருக்கு மாரடைப்பு வந்தால், பெண்களில் 10 பேருக்கு மட்டுமே வருகிறது.

    இக்காலத்தில் ஆணும், பெண்ணும் ஒரே மாதிரியான வேலை பார்க்கிறார்கள் மற்றும் ஒரே மாதிரியான நிகழ்வுகளை சந்திக்கிறார்கள். பிறகு ஏன் பெண்ணுக்கு மட்டும் மாரடைப்பு அதிகமாய் வருவதில்லை? என்பதை பற்றி பார்க்கலாம்.

    ஆணை விட பெண் பலவீனமானவள் என்பது தவறான கருத்து. மாதவிடாய், கர்ப்பம், பிரசவம், வீட்டு வேலை என பலவற்றுக்குப் பின்னும் பெண் சக்தியோடு நடமாடுகிறாள். ஆதலால் இறைவன் படைப்பில் ஆணை விட பெண்ணே சக்தி நிறைந்தவள் மற்றும் பலமானவள்.

    பெண்ணுக்கு 14 வயதுக்கு மேல் கர்ப்பப்பையின் சினை முட்டை உருவாகி ரத்தக்கசிவு ஏற்படுகிறது. அடுத்தடுத்த 26 நாட்களுக்கு ஒரு முறை, இவை உருவாகும் போது ஏற்படும் பலவீனத்திலிருந்து பெண்ணைக் காக்க ‘ஈஸ்ட்ரோஜன்’ எனப்படும் ஹார்மோன் சுரக்கிறது. இதுவே பெண்ணுக்கு பலமும் பாதுகாப்பும் தரும் மருந்தாக உள்ளது.

    இந்த ஹார்மோன் 50 வயது வரை சுரப்பதால் பெண்கள் சக்தியோடு பல பணிகளை செய்ய முடிகிறது. 50 வயதை கடந்த பெண்களுக்கு ஆண்களைப் போலவே மாரடைப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது. மேலும் எலும்பும் பலவீனம் அடைகிறது. இதனால் பெண் சோர்வடைகிறாள்.

    பெண்களுக்கு வயிறு, இடுப்புப் பகுதி 38 இன்ச், 40 இன்ச் என்று அகலமானால் இதய நோய்கள் வரும் வய்ப்பு உள்ளது. ஆதலால் 50 வயதை கடந்த பெண்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter