Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1101
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பெண்களுக்கு 30 வயதில் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைய காரணம்
    உடலில் மற்ற உறுப்புகளை விட பெண் இனப்பெருக்க உறுப்புகள் வேகமாக முதிர்ச்சியடைந்து விடுகின்றன. பெண்ணின் நடுத்தர வயதிலேயே மாதவிலக்கு முற்றுப் பெறுதல் வந்து கருத்தரிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது.

    பொதுவாக பெண்களுக்கு முப்பது வயதிலிருந்தே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைகிறது. நாற்பது வயதுக்கு மேல், மேலும் அதிக சதவிகிதத்தில் வாய்ப்புகள் குறைந்து விடுகிறது. பெண்ணின் வயதைப் பொறுத்து அவளது கரு முட்டைகளும் பாதிக்கப்படுகின்றன.

    உடல் ரீதியாகக் கருப்பை முதிர்ந்துவிடும் நிலை கருத்தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. முப்பது வயதுக்கு மேற்பட்ட நிலையில் செயற்கை முறையில் கருத்தரிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் பெண்களின் கர்ப்பம் நிலைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

    அதில் முட்டை உருவாவது முக்கிய இடத்தை வகிக்கிறது. முட்டை வெளிப்படுவது, வயது முதிர்ந்த நிலையில் தன் கணவர் வெளிப்படுத்தும் குறைபாடுள்ள விந்தணுவோடு அது சேர முடியாமல் சிதைவது என பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிறது.

    30 முதல் 35 வயதுக்கிடையில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதற்கு முன்னதாக கருத்தரிப்பதில் இருக்கும் வாய்ப்பை விட இருமடங்கு தள்ளிப்போகிறது. 30 வயதை தாண்டினாலே பெண்களுக்கு குழந்தை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

    உடற்கூறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், ஹார்மோன் சார்ந்த காரணிகள், மற்றும் பிற நோய்களும் ஏற்படுகின்றன. வயது ஆக ஆக உடலின் ஆற்றல் குறைய ஆரம்பிக்கிறது. மேலும் உடலில் ஹார்மோன்களால் மாற்றங்கள் பல நிகழ்கின்றன.

    உயர் ரத்த அழுத்தம், கருப்பையில் கழலைகள், சினைப்பையின் செயல்திறன் குறைதல், நோய் எதிர்ப்புத் திறன் குறைவு, உடல் பருமன், நீரிழிவு, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. இதில் பெரும்பங்கு வகிப்பது மாதவிலக்கு குறைபாடுகளாகும்.
    contd..



    Sponsored Links

  2. #1102
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    ஹார்மோன் குறைவின் காரணமாக ஒழுங்கற்ற உதிரப்போக்கு அதாவது விட்டு விட்டு வருதல், சினைப்பையால் கருமுட்டைகளை உருவாக்க இயலாத நிலை போன்றவை ஏற்படுகின்றன. கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடுபவராக இருந்தால் அவற்றை நிறுத்திய மூன்று மாதங்களுக்குப் பிறகு கருத்தரிக்கும் வாய்ப்பை உண்டாக்கிக் கொள்வது நல்லது.

    ஏனென்றால் இந்த மூன்று மாத இடை வெளியில் உடலில் உள்ள ஹார்மோன்களின் நிலை பழைய நிலைக்குத் திரும்பிவிடும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் முப்பது வயதுக்கு மேல் கருத்தரிக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு அதிகளவில் ஏற்படுகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    சுற்றுச் சூழல் காரணிகள், பயணம், மன நிலைகள் போன்றவை இளம் வயதினரைவிட வயது முதிர்ச்சியடையும் நிலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் கருச்சிதைவுகள் தவிர்க்க இயலாததாகி விடுகின்றன. இளம் வயதில் கருவைச் சுமக்கும் தாயைப் போல் அல்லாமல் முதிய வயதில் கருவைச் சுமக்கும்போது சோர்வு, படபடப்பு போன்ற பிரச்சினைகள் அதிகமாகத் தோன்றுகின்றன.

    முதிர் வயதுப் பெண்கள் பிரசவிக்கும்போது இடுப்புக்கூட்டுப் பகுதியிலுள்ள எலும்புகளின் விரிந்து கொடுக்கும் தன்மை வெகுவாக குறைந்துவிடுவதால் சுகப் பிரசவம் நடப்பது அரிதாகிறது. இதனால் சிசேரியன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தகுதியான வயதில் தாய்மை அடையாததால் பெண்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

    இவை அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்பதாலேயே மருத்துவர்கள் தகுதியான வயதில் குழந்தைப்பேறு அடைய வேண்டும் என்ற கொள்கையை ஆதரிக்கின்றனர்.

    ஆகவே தாய்மையை விரும்பும் பெண்கள் அதற்காகத் திட்டமிட சரியான வயது, தாய்மையை முழுமையாக அனுபவிக்கச் சிறந்த வயது இருபது முதல் முப்பது வயது வரைதான். அதற்கு அப்பால் வரும் ஒவ்வொரு வயதிலும் கருத்தரிப்பது என்பது சிக்கல் மிகுந்தாக உள்ளது


  3. #1103
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இரட்டை குழந்தை பிறக்க காரணம்
    இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. தந்தையிடமிருந்து வரும் ஆயிரக்கணக்கான விந்து செல்களில் ஒரே ஒரு விந்து செல்லானது தாயின் கர்ப்பப்பையில் உள்ள ஒரு அண் செல்லுடன் இணைந்து கரு முட்டை உருவாகிறது.

    மற்ற விந்து செல்கள் அழிந்துவிடுகின்றன. இந்த கரு முட்டையானது சிறிது நாட்களில் மொருலாவாக மாறுகிறது. அதாவது ஆண், பெண் அணுக்கள் இணைந்த கரு முட்டை இரண்டு இரண்டாக பிரிந்து கொண்டே சென்று, ஆயிரக்கணக்கான செல்கள் கொண்ட கரு முட்டையாக காணப்படும்.

    இந்த ஆயிரக்கணக்கான செல்கள் இணைந்த கரு முட்டையே மொருலா எனப்படும். மொருலாவானது மேலும் வளர்ச்சியடையும் போது மொருலாவின் குறிப்பிட்ட பகுதிகள் குறிப்பிட்ட குழந்தையின் உடல் உறுப்புகளாக மாறுகிறது.

    மொருலாவின் உறுப்புகளின் வளர்ச்சி தோன்றுவதற்கு முன்னதாகவே மொருலாவானது இரண்டாக பிரியுமானால், பிரிந்த இரண்டு மொருலாவும் வளர்சியடைந்து இரண்டு குழந்தைகளாக மாறுகிறது. இரண்டு மட்டும் இன்றி பத்து வரை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாம்.


  4. #1104
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாந்தி வருவது ஏன்?
    வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம். உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது.
    நம் வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாவோ, ரசாயனமோ புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் உள்ள சென்ஸார் செல்கள் உடனே உணர்ந்து, ‘வேகஸ்’ நரம்பு வழியாக முகுளத்துக்குத் தகவல் அனுப்பும். வாந்தி எடுத்தால்தான் பிரச்சினை சரியாகும் என்று முகுளம் தீர்மானித்துவிட்டால், அந்தச் செய்தியை வாந்தி மையத்துக்கு அனுப்பிவைக்கும். உடனே அது ‘வாந்தி எடு’, ‘வாந்தி எடு’ என்று வயிற்றை அவசரப்படுத்தும். இந்தக் கட்டளைகள் பிரெனிக் நரம்பு, வேகஸ் நரம்பு, தண்டுவட நரம்பு, பரிவு நரம்பு, மூளைமைய நரம்புகள் வழியாக வயிற்றுக்கு வந்து சேரும்.
    பேட்டரி சார்ஜ் தீர்ந்த கார் நடுவழியில் நின்றுபோனால், சம்பந்தமில்லாத நான்கு பேர் உதவிக்கு வந்து அதைத் தள்ளிவிடுகிற மாதிரி, இரைப்பை சிரமப்படும்போது, இரைப்பைக்குச் சம்பந்தமில்லாத வயிற்றுத் தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறுகுடலையும் இரைப்பையையும் அழுத்தும். அப்போது உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் உள்ள ‘வால்வு’ திறந்துகொள்ள, இரைப்பையில் உள்ள உணவு, நச்சு, அமிலம் எதுவானாலும் ‘ஓவ்’ என்ற பெரிய சத்தத்துடன் வெளியேற்றப்படும். இதுதான் வாந்தி. பெரும்பாலும் வாந்தி வருவதற்கு முன்னால் வாயில் எச்சில் ஊறுவது, வயிற்றைப் புரட்டுவது, புளித்த ஏப்பம் போன்ற முன்னறிவிப்புகளை வயிறு நமக்குத் தெரிவிக்கும்.
    contd..



  5. #1105
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    வாந்தி நல்லதா, கெட்டதா?
    வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான். அதற்காக ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் தண்ணீர்ச் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும். குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இது ஆபத்து.
    முக்கியக் காரணங்கள்
    கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவது, ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது, இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது, முன் சிறுகுடல் அடைப்பு, உணவுக் குழாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்று. வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சினைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப் பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோய் மருந்துகள் போன்றவை வாந்தியை ஏற்படுத்தும்.
    காதும் ஒரு காரணம்தான்!
    காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்சினைகளாலும் வாந்தி வரும். காதில் ‘வெஸ்டிபுலர் அப்பாரட்டஸ்’ என்று ஓர் அமைப்பு உள்ளது. இதுதான் நம்மை நடக்கவைக்கிறது; உட்காரவைக்கிறது; உடலைச் சமநிலைப்படுத்துகிறது, இந்த அமைப்பு தூண்டப்படும்போது வாந்தி வரும். இதனால்தான் பேருந்தில் பயணிக்கும்போது, கடல் பயணம்/விமானப் பயணங் களின்போது வாந்தி வருகிறது.
    கர்ப்பகால வாந்தி!
    கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் சில ஹார்மோன்களின் அளவு திடீர் திடீரென்று ஏறி இறங்குவதால், மசக்கை வாந்தி வருகிறது. முதல் நாள் இரவில் நிறைய மது குடித்தவர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு. சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது. தவிர, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் வாந்தி வரும். ஒற்றைத் தலைவலி, தலையில் அடிபடுதல், மூளையில் கட்டி, மூளை நீர் அழுத்தம் போன்றவற்றாலும் வாந்தி ஏற்படும். பூச்சிக் கடி, பாம்புக் கடி போன்ற விஷக் கடிகளின்போதும் வாந்தி வரும். ஊசி மருந்து, மாத்திரை அலர்ஜி ஆனாலும் வாந்தி வருவது நிச்சயம்.
    உளவியல் காரணங்கள்
    சிலருக்குக் கவலை, கலக்கம், பயம், பதற்றம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வாந்தி உண்டாவது வழக்கம். இந்த வாந்தி பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவு சாப்பிட்ட பின்பு ஏற்படும். பகல் நேரப் பணிகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயப்படுபவர்களுக்கு இம்மாதிரி வாந்தி வரும். உதாரணமாக, பள்ளிக்குச் செல்லப் பயப்படும் குழந்தைகள் காலையில் சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது இவ்வகையைச் சேர்ந்தது.
    contd..



  6. #1106
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    சின்னச் சின்னக் காரணங்கள்
    பார்வை, நுகர்தல், தொடுதல் போன்றவையும் வாந்தியை வரவழைக்கும். பள்ளி/கல்லூரி விடுதிகளில் பல்லி விழுந்த பாலைப் பார்த்தால் மாணவர்கள் எல்லோருக்கும் வாந்தி வருவது, துர்நாற்றம் வீசும் இடங்களைக் கடக்கும்போது உண்டாகும் வாந்தி, பல் தேய்க்கும்போது பல்துலக்கித் தொண்டையைத் தொட்டுவிட்டால் வாந்தி வருவது போன்றவை இதற்குச் சில உதாரணங்கள்.
    என்ன செய்யலாம்?
    வாந்தியை நிறுத்துவதற்குப் பல மருந்துகள் உள்ளன. என்றாலும், வாந்திக்கு என்ன காரணம் என்று தெரிந்து, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றால்தான் வாந்தி சரியாகும். அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.
    வாந்தியைத் தடுக்க வழி!
    # உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவையும் கெட்டுப்போன உணவையும் சாப்பிடாதீர்கள்.
    # அவசர அவசரமாகச் சாப்பிடாதீர்கள். அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாதீர்கள்.
    # அஜீரணத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிற கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த நொறுக்குத் தீனிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
    # வாந்தி எடுத்து உடல் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம். அல்லது காய்ச்சி ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் உப்பையும் கலந்து ஒவ்வொரு டீஸ்பூனாகக் குடிக்கலாம்.
    # பயண வாந்திக் கோளாறு உள்ளவர்கள் பேருந்துப் பயணம் செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு ‘அவோமின்’ போன்ற வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை டாக்டர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.


  7. #1107
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எது நல்ல கொழுப்பு?
    ரத்தத்தில் உள்ள மொத்தக் கொலஸ்ட்ரால் அளவு 200 மில்லி கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம்வரை ‘நல்ல கொழுப்பாக 'அமைய வேண்டும். அதாவது 40-50 மில்லி கிராம் அளவுக்காவது நல்ல கொழுப்பு இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் ஹெச்.டி.எல். கொழுப்பு (High-density lipoprotein - HDL) என்கிறார்கள்.
    இயல்பாகவே பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முன்பு அவர்களுடைய உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் காரணமாக, சரியான விகிதத்தில் ஹெச்.டி.எல். அமைவதால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது.
    ஹெச்.டி.எல். கொழுப்பு ஒரு போலீஸ்காரரைப் போல் செயல்பட்டு ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே படிந்த கெட்ட கொழுப்பை (இதை low-density lipoprotein - LDL என்கிறார்கள்) கல்லீரலுக்கு இழுத்து வந்து பித்த நீர் வழியாக வெளியேற்றிவிடுகிறது. பொதுவாக ஹெச்.டி.எல். கொழுப்பு 35 மில்லி கிராமுக்குக் கீழே இருப்பது உடலுக்கு நல்லதல்ல.
    நல்ல கொழுப்பை அதிகரிக்க வேண்டுமென்றால் முடிந்தவரை மாமிச உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கரு, கோழிக்கறியின் தோல், மூளை, ஈரல் முதலியவற்றைச் சாப்பிடக் கூடாது.
    நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். டாக்டரின் பரிந்துரையின் பேரில் குறிப்பிட்ட சில மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலமும் நல்ல கொழுப்பை அதிகரிக்கலாம். மாதவிடாய் நின்ற பெண்கள் ஹார்மோன் மாத்திரை (HRT) சாப்பிடுவதின் மூலம் ரத்தத்தில் நல்ல கொழுப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

    Dangu likes this.

  8. #1108
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அரிப்பு ஏற்படுவது ஏன்?
    அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.
    இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.
    எதிர்ப்புப் புரதம்
    அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.
    மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.
    பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? ‘லேன்ட்-லைன்’ போன் வேலை செய்யும் மெக்கானிஸம் போன்றது இது. லேன்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும்.
    இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே ‘நரம்பு கேபிள்’தான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.
    contd..



  9. #1109
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    என்ன காரணம்?
    அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.
    வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.
    குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.
    அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழு வதும் அரிப்பை ஏற்படுத்தும்.
    குளிரும் ஆகாது!
    சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.
    contd..



  10. #1110
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    தொடை இடுக்கு அரிப்பு
    காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.
    அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
    வயதானால் வரும் அரிப்பு
    முதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக்கிறது. வயதானவர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும்.
    எச்சரிக்கும் நோய்கள்
    உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.
    தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.
    உணவும் மருந்தும்
    நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல லாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter