Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1111
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    மனப் பிரச்சினைகள்
    அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.
    ‘உடம்பு அரித்தால் ஒரு ‘அவில்’ போட்டுக்கோ’ என்று சாதாரணமாக வீடுகளில் சொல்வார்கள். அதேவேளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல.


    Sponsored Links

  2. #1112
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    லிபிட் ப்ரொஃபைல்
    “எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கையை ‘திடுக்’ என முடித்து வைக்கும் வில்லன் கொழுப்பு. நம் தாத்தாக்களின் தலைமுறையில் 60 வயதுகளில் வந்த மாரடைப்பு, இப்போது இருபதுகளிலேயே வர ஆரம்பித்திருப்பதற்கு கொழுப்பு பிரதான காரணமாக இருக்கிறது.

    இந்த கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளும் முறைதான் லிபிட் ப்ரொஃபைல் (Lipid profile)’’ என்று அறிமுகம் கொடுக்கிறார் இதய சிகிச்சை மருத்துவரான கிருபாகரன்.

    லிபிட் ப்ரொஃபைலில் என்னென்ன இருக்கும்?

    ‘‘லிபிட் ப்ரொஃபைலில் பல வகை கொழுப்புகள் அடங்கி யிருக்கும். குறிப்பாக, ஹெச்.டி.எல். (Highdensity lipoprotein) என்கிற நல்ல கொழுப்பு, எல்.டி.எல். (Lowdensity lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பு என 2 வகைகள் இருக்கின்றன.

    இந்த இரண்டு வகைகளில்தான் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். லிபிட் ப்ரொஃபைலில் காணப்படும் டிரைகிளிசராய்ட்(Triglycerides) என்பதும் கெட்ட கொழுப்புதான்...’’

    லிபிட் பரிசோதனை ஏன் அவசியம்?

    ‘‘பொதுவாக நல்ல கொழுப்பின் அளவு சராசரியாக ஆண்களுக்கு 40 mg/dl என்ற அளவில் இருக்க வேண்டும். பெண்களுக்கு 50 mg/dl என்ற அளவு இருக்க வேண்டும். நம் நாட்டிலோ, இது தலைகீழாக நல்ல கொழுப்பின் அளவு குறைவாகவும், கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாகவும் இருக்கிறது.

    இந்தக் கொழுப்பின் அளவை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, அதற்கேற்றாற் போல வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால், பல நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, ‘கொழுப்பு - இதயத்துக்கு எமன்’ என்பதால் மாரடைப்பு நம் பக்கம் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். இதற்குத்தான் லிபிட் ப்ரொஃபைல் சோதனை உதவுகிறது...’’

    யார் யார் செய்து கொள்ள வேண்டும்?

    ‘‘பொதுவாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்தப் பரிசோதனையை செய்துகொள்வது நல்லது. பருமன் பிரச்னை உள்ளவர்கள், பரம்பரை ரீதியாக இதய நோய் உள்ளவர்கள், தைராய்டு குறைவாக சுரப்பவர்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு இப்பரிசோதனை கட்டாயம்.

    மேற்கத்திய நாடுகளுக்கு வரும் இதயம் தொடர்பான நோய்கள் 10 வருடங்களுக்கு முன்னரே இந்தியர்களுக்கு வந்துவிடுவதாக சமீபத்தில் ஓர் ஆய்வு தெரிவித்திருக்கிறது. அதனால், இதயம் தொடர்பான நோய்கள் வர அதிகம் சாத்தியம் உள்ளவர்கள் முன்னரே லிபிட் பரிசோதனை செய்ய வேண்டும்...’’
    contd..



  3. #1113
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    இதற்கு என்ன சிகிச்சை?

    ‘‘வாழ்க்கை முறையை மாற்றுவதுதான் முக்கியமான சிகிச்சை. புகைப்பழக்கம், உடல் உழைப்பற்ற வேலை, தவறான உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் கெட்ட கொழுப்பின் அளவு உடலில் அதிகமாகிறது.

    அதனால் இந்த காரணிகளைத் தவிர்ப்பது முக்கியம். எளிமையான உடற்பயிற்சிகள், நாள் ஒன்றுக்கு 30 நிமிடமாவது நடைப்பயிற்சி ஆகியவை அவசியம். துரித உணவுகள், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், முட்டையின் மஞ்சள்கரு, எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடாமல் இருப்பது என, நம் பழக்கங்களை மாற்றிக் கொண்டாலே போதும்.

    பழங்கள், காய்கறிகள் நிறைய சேர்ப்பது எல்லா வகையிலும் நல்லது. இப்போது இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதால், கொழுப்புப் பிரச்னையை கவனமாகக் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...’’

    லிபிட் பரொஃபைல் பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?

    ‘‘வழக்கமான ரத்தப் பரிசோதனை செய்யும் முறையிலேயே இந்தப் பரிசோதனையையும் செய்கிறார்கள்.

    லிபிட் ப்ரொஃபைல் பரிசோதனை செய்வதற்கு முன் 8 மணி நேரம் எந்த உணவும் சாப்பிட்டிருக்கக் கூடாது. அதனால், இரவு சாப்பிட்ட பிறகு, காலை உணவுக்கு முன் இந்த இடைவெளி தானாகவே கிடைத்து விடும் என்பதால் காலையில்தான் இந்த பரிசோத னையை செய்வார்கள்.

    இதை Fasting lipid profile என்பார்கள். ஒரு கப் காபி கூட தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், காலையில் டீ, காபி கூட சாப்பிடக் கூடாது.

    இந்தப் பரிசோதனையில் கொழுப்பின் அளவோடு, வேறு ஏதேனும் நோய்கள் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். இதய நோய், நீரிழிவு போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்களுக்கு இந்தப் பரிசோதனையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

    அதாவது, நீரிழிவு உள்ளவர்களுக்கு எல்.டி.எல். கொழுப்பு சராசரி அளவு இருந்தால் கூட, அதை எந்த அளவு குறைக்கிறோமோ அவ்வளவு நல்லது!’’

    எவ்வளவு செலவாகும்?

    ‘‘அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் கட்டணம் இருக்கக்கூடும். இந்த மதிப்பு மருத்துவமனைகளைப் பொறுத்தும், பரிசோதனை நிலையங்களைப் பொறுத்தும் மாறும். சராசரியாக 4 மணி நேரத்தில் இந்த முடிவுகளை சொல்லிவிடுவார்கள்.

    இந்தப் பரிசோதனையை பெரிய மருத்துவமனைகளில்தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. தரமான பரிசோதனை நிலையங்களில் எங்கு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். பரிசோதனைக்குச் செல்பவர்கள் கொலஸ்ட்ரால் மட்டும் பரிசோதிக்க வேண்டும் என்று கேட்டால், இந்த லிபிட் பரிசோதனை செய்து கொடுப்பார்கள்.

    பொதுவாக மற்ற பரிசோதனைகளோடு இதையும் செய்துகொள்ளலாம். நாமாகவே ஒரு பரிசோதனை நிலையத்துக்கு சென்று பரிசோதித்துக் கொள்வதைவிட ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் செல்வதே நல்லது!’’


  4. #1114
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அழகான சருமத்தை தரும் வாழை இலை
    முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே அதன் இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தை நாம் சாப்பிட்டால் உடலின் உட்பகுதிக்கு சிறந்தது. ஆனால் அதன் இலைகளை உடலின் வெளிப்புறத்திற்கு, அதாவது சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் சருமத்திற்கு மெருகேற்ற, இது ஒரு சிறந்த அழகுப்பொருளும் கூட. இப்போது அந்த வாழை இலையை எப்படி பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
    வாழை இலையின் நன்மைகள்…
    * அழகை கெடுக்கும் வகையில், சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. இதன் புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் ஜூஸை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால், அந்த பிரச்சனையானது முற்றிலும் சரியாகிவிடும். மேலும் இதன் இலையை தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தின் மேல் வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

    * வாழை இலையில் பல மருத்துவ பொருட்கள் இருப்பதால், இவை விஷமிக்க பூச்சிக்கடித்தல், தேனீக்கடி, சருமத்தில் அரிப்புகள் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது. சொல்லப்போனால், இத்தகைய சிறப்பால் இதனை ஒரு இயற்கை அளிப்பான் என்றும் சொல்வார்கள்.
    * அழகுப் பொருட்களான கிரீம் மற்றும் லோசனில் இருக்கும் அலன்டாயின் (Allantoin) என்னும் பொருள், இந்த சிறப்புமிக்க வாழை இலையில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பொருள் கிருமிகளை அழிப்பதோடு, விரைவில் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும். மேலும் இது புதிய செல்கள் வளரவும் வழிவகுக்கும்.
    * குழந்தைகளுக்கு டயாஃபர் அணிவதால் வரும் அரிப்பு, கொசு கடி போன்றவற்றில் இருந்து காப்பாற்ற, வீட்டிலேயே இயற்கையாக மருந்துகளை வாழை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அதற்கு வாழை இலைச்சாற்றுடன், சிறித ஆலிவ் ஆயில், சிறிது தேன் மெழுகு கலந்து, அதனை பயன்படுத்த வேண்டும்.
    * மன அழுத்தம் போவதற்கும் மற்றும் மென்மையான சருமத்தை பெறுவதற்கும், வாழை இலையில் ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
    இவ்வாறெல்லாம் செய்தால், சருமமானது மென்மையடைவதோடு, எந்த ஒரு நோயும் சருமத்தில் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.அழகான சருமத்தை தரும் வாழை இலை
    முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே அதன் இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தை நாம் சாப்பிட்டால் உடலின் உட்பகுதிக்கு சிறந்தது. ஆனால் அதன் இலைகளை உடலின் வெளிப்புறத்திற்கு, அதாவது சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் சருமத்திற்கு மெருகேற்ற, இது ஒரு சிறந்த அழகுப்பொருளும் கூட. இப்போது அந்த வாழை இலையை எப்படி பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
    வாழை இலையின் நன்மைகள்…
    * அழகை கெடுக்கும் வகையில், சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. இதன் புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் ஜூஸை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால், அந்த பிரச்சனையானது முற்றிலும் சரியாகிவிடும். மேலும் இதன் இலையை தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தின் மேல் வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

    * வாழை இலையில் பல மருத்துவ பொருட்கள் இருப்பதால், இவை விஷமிக்க பூச்சிக்கடித்தல், தேனீக்கடி, சருமத்தில் அரிப்புகள் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது. சொல்லப்போனால், இத்தகைய சிறப்பால் இதனை ஒரு இயற்கை அளிப்பான் என்றும் சொல்வார்கள்.
    * அழகுப் பொருட்களான கிரீம் மற்றும் லோசனில் இருக்கும் அலன்டாயின் (Allantoin) என்னும் பொருள், இந்த சிறப்புமிக்க வாழை இலையில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பொருள் கிருமிகளை அழிப்பதோடு, விரைவில் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும். மேலும் இது புதிய செல்கள் வளரவும் வழிவகுக்கும்.
    * குழந்தைகளுக்கு டயாஃபர் அணிவதால் வரும் அரிப்பு, கொசு கடி போன்றவற்றில் இருந்து காப்பாற்ற, வீட்டிலேயே இயற்கையாக மருந்துகளை வாழை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அதற்கு வாழை இலைச்சாற்றுடன், சிறித ஆலிவ் ஆயில், சிறிது தேன் மெழுகு கலந்து, அதனை பயன்படுத்த வேண்டும்.
    * மன அழுத்தம் போவதற்கும் மற்றும் மென்மையான சருமத்தை பெறுவதற்கும், வாழை இலையில் ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
    இவ்வாறெல்லாம் செய்தால், சருமமானது மென்மையடைவதோடு, எந்த ஒரு நோயும் சருமத்தில் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.


  5. #1115
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உலர் திராட்சையின் மருத்துவக் குணங்கள்.
    திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

    குழந்தைகள் வளர்ச்சிக்கு: வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.

    கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

    இரத்த விருத்திக்கு: எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
    contd..



  6. #1116
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    உடல் வலி குணமாக: பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

    மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு: மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

    குடல்புண் ஆற: அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

    இதயத் துடிப்பு சீராக: சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

    சுகமான நித்திரைக்கு: தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு: சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

    உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.


  7. #1117
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல் எடையை குறைக்க சுலபமான சில வழிகள் உங்கள் வீட்டிலேயே இருக்கு.
    இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து, அதற்காக பல டயட்களை மேற்கொண்டு இருப்போர் நிறைய பேர் இருக்கின்றனர். அதிலும் சிலர் ஒரு நாளில் பாதியை ஜிம்மிலேயே செலவழிக்கின்றனர். அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, எனர்ஜி மற்றும் நேரத்தை வீணடிக்காமல், உடல் எடையை குறைப்பதை விட, வீட்டிலேயே ஈஸியாக ஒரு சில பானங்களை செய்து தினமும் குடித்து வந்தால், உடல் எடையானது எளிதில் குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய எளிமையான வீட்டு பானங்கள் என்னென்னவென்றும், எப்படி சாப்பிட வேண்டும் மற்றும் என்ன பலன் அதில் இருக்கிறதென்றும் மருத்துவர்கள் பட்டியலிட்டு கூறியுள்ளனர்.

    கிரீன் டீ: அனைவருக்கும் கிரீன் டீ-யை பற்றி தெரிந்திருக்கும். இது உடலுக்கு, சருமத்திற்கு மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை தரும். அத்தகைய கிரீன் டீ-யை, அதன் இலைகளால் அல்லது கடைகளில் விற்கும் டீ பைகளை வாங்கி, வீட்டில் தயாரிப்போம். கிரீன் டீ சாப்பிட்டால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, எளிதில் எடையானது குறைந்துவிடும். அதிலும் அந்த கிரீன் டீ-யின் இலையை இரவில் படுக்கும் முன் நீரில் போட்டு, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஏனெனில் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் கிரீன் டீ இலையில் இருக்கும் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நீரில் இறங்கி, அதனை நாம் பருகினால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எடையும் குறைந்துவிடும். மேலும் அந்த கிரீன் டீ உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து, அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் கிரீன் டீ குடித்தால், 2-4 மணிநேரம் பசியானது ஏற்படாமல் நன்கு கட்டுப்படும்.
    contd..


    umasaravanan likes this.

  8. #1118
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    சிட்ரஸ் ஜூஸ்: ஜூஸ் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அத்தகைய ஜூஸில் சிட்ரஸ் இருக்கும் ஜூஸ்களை பருகினால், உடல் எடையானது குறைந்துவிடும். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் இருக்கும் அமிலங்கள், உடல் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். அத்தகைய சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது. திராட்சை பழங்களிலும் ஜூஸ் செய்து குடித்தால் உடல் எடையானது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் திராட்சை பழங்களில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் போன்றவை அதிகமாக உள்ளது. மேலும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. ஆகவே அதன் தினமும் ஒரு டம்ளர் பருகினால் உடல் எடை விரைவில் குறைந்துவிடும். முக்கியமாக எலுமிச்சை பழ ஜூஸ் சாப்பிடும் போது, அதில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். ஏனெனில் சர்க்கரையே உடலில் கொழுப்புகளை அதிகப்படுத்துகிறது. ஆகவே அப்போது அந்த ஜூஸ் உடன் உப்பை சேர்த்து குடிக்கலாம். வேண்டுமென்றால் சுடு தண்ணீரில் கூட கலந்து குடிக்கலாம்.
    ஆப்பிள் வினிகர் : குளிர்ந்த தண்ணீரில் தேன் மற்றும் ஆப்பிள் வினிகரை கலந்து குடித்தால், எடை விரைவில் குறையும். மேலும் இது செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. ஆகவே எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு டம்ளர் இந்த ஆப்பிள் வினிகரை நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் அளவுக்கு அதிகமாக உணவை உண்ணாமல் அது தடுக்கும். அதிலும் இதனை தினமும் இருமுறை குடித்தால் நல்லது.
    காபி: இது மற்றொரு எடையை குறைக்கும் பானம். காப்ஃபைன் ஒரு ஆல்கலாய்டு. ஆகவே காப்ஃபைன் கலந்திருக்கும் காபியை அளவோடு குடித்தால், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த பானமாக இருக்கும். மேலும் கொக்கோ, காபி மற்றும் டீ போன்றவையும் காப்ஃபைன் இருக்கும் பொருட்களே. அதிலும் இந்த பொருட்களை ஒரு நாளைக்கு ஒரு கப் குடித்தால் உடல் எடை குறையும், அதற்கு அதிகமாக குடித்தால் தூக்கமின்மை, உடலில் வெப்பம் அதிகமாதல் போன்றவை ஏற்படக்கூடும்.
    எனவே, மேற்கூறிய பானங்களை குடித்து உடல் எடையை ஈஸியாக குறைத்து, அழகாக, பிட்டாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

    umasaravanan likes this.

  9. #1119
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கொழுப்பை குறைக்கும் நாகர்கோவில் கொடம்புளி!

    பசுமை புரட்சி, நவீன கலாச்சாரம் இவற்றால் நாம் அடைந்ததைவிட, இழந்ததே அதிகம். குறிப்பாக விவசாயத்தில் சிறுதானியங்கள், இயற்கை விவசாயத்தை இழந்து விட்டோம். மருத்துவத்தில் மூலிகைகள், இயற்கை கை வைத்திய முறை, உணவே மருந்தாகும் முறை இவற்றையெல்லாம் இழந்து விட்டோம்.

    இந்த நவீன உலகத்திலும் அதை மீட்டெடுக்கும் முயற்சியே ஊர்கள்தோறும் நடத்தப்பட்டு வரும் சிறுதானிய விழாக்கள். இதன் ஒருபகுதியாக திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் கடந்த 16 ஆம் தேதி சிறுதானிய உணவுத்திருவிழா மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

    கருத்தரங்கில் பேசிய இயற்கை விவசாயி காதர், “நான் தெளித்த ரசாயன உரத்தினால் காய்கறிகள் விஷமாய் போச்சு. மண்ணின் உயிரூட்டம் செத்தே போய்விட்டது. அதை திரும்ப மீட்டு எடுத்தது இயற்கை விவசாயத்தால்தான். மூக்கை பொத்திக்கொண்டு தெளித்த உர நெடியைவிட இன்று பயன்படுத்தும் சாணியின் மணம் கஷ்டமாக தெரியவில்லை. நஞ்சில்லா உணவை மட்டும்தான் விளைவித்து கொடுப்பேன். அதனால் கிடைக்கும் லாபமே போதும்” என்றார்.

    அவரைத் தொடர்ந்து பேசிய காந்திஜி இயற்கை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மோகன், "இன்று நாம் பயன்படுத்தும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் கடலை மாவு, கோதுமை மாவு வகையறாக்களில் நாம் பார்ப்பது கவரில் போடும் தேதிகளே. அதில் நிறம், மணம் கிடைக்க சேர்க்கப்பட்ட ரசாயனங்கள், தானியத்தை இருப்பு வைப்பது முதல் பேக்கிங் செய்வது வரை பூச்சிகள் வராமல் தடுக்க பயன்படுத்தப்பட்ட பூச்சுக்கொல்லிகள் பற்றிய விவரங்களை போடுவதில்லை.

    இதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு என்ன நன்மை கிடைத்துவிட போகிறது? வீட்டிலேயே கோதுமை முதலிய தானியங்களை வாங்கி நாமே சுத்தம் செய்து சாப்பிடுவதே சிறந்தது. வண்டு கூட சாப்பிடாத பேக்கிங் மாவை நாம் சாப்பிடுவதா?” என்று கேள்வியெழுப்பினார்.

    தொடர்ந்து பேசிய சித்த மருத்துவர் மு.பரமசிவன், " 'சைதன்யா' என்ற இசையை இரவில் கேட்டால் மன அழுத்தம் குறைகிறது என சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதை நானும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். ஒரு நாளில் 1600 கலோரி ஒரு மனிதன் சாப்பிட வேண்டும். காலையில் சிறிதளவு இட்லி, தோசை என சிறுதானிய உணவில் செய்தது.

    மதியம் முக்கால் வயிறு சாப்பாடு, இரவு காயகல்பம் அதாவது ஒரு டம்ளர் பசும்பாலில் 10 முருங்கை பூ சேர்த்து அருந்த வேண்டும். அதோடு 2 பேரீச்சம்பழம், 2 வாழைப்பழம் என கலப்படமில்லாததாய் உண்ணவேண்டும். வெந்தயம் உடலுக்கு நல்லது என்றாலும் கால் கிலோ வெந்தயத்தை களி, தோசை, சாதம் என வெளுத்துக்கட்ட கூடாது. அரை ஸ்பூன்தான் சாப்பிட வேண்டும். நம் உணவே மருந்தாக கொண்ட சித்த மருத்துவத்தை பின்பற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை மிக மிக அவசியம்” எனப் பேசினார்.

    இயற்கை ஆர்வலரும், முன்னோடி விவசாயியுமான வைகை.குமாரசாமி பேசும்போது, "நீங்கள் நாட்டு கோழிகளுக்கு என்னதான் உணவு போட்டாலும் முதல் முட்டை பெரியதாகவும், கடைசி முட்டை சிறியதாகவும்தான் இருக்கும். ஆனால் பிராய்லர் முட்டைகளோ முட்டை ஓடு தடிமனாக, ஒல்லியாக என பல வடிவங்களில் கிடைக்கிறது என்றால் அத்தனையும் ரசாயனங்கள், ஹார்மோன் ஊசிகள். அதை அறியாமல் குழந்தைகள் வரை பழக்கப்படுத்தி இன்று சீக்கிரம் பூப்படைதல், தொப்பை போடுதல் என பல பிரச்னைகளை உருவாக்கி விட்டோம். நாட்டுக் கோழி முட்டையுடன் சம அளவு இஞ்சி சாறு சேர்த்து கொடுத்தால் சட்டென சளி குறையும். இதே பிராய்லர் முட்டையில் கொடுத்தால் பலன் கிடைக்காது. இப்படி தான் நம் பாரம்பரிய மருந்தான உணவுகள் மறைந்தும், குறைந்தும் போயின.

    நாகர்கோவிலில் கிடைக்கும் கொடம்புளியில் மீன் குழம்பு வைத்தால் அந்த புளி கொழுப்பை கரைத்துவிடும். அதை அரைக்கவோ இடிக்கவோ கூடாது. கொதிக்கும் குழம்பில் போட்டு எடுத்துவிட வேண்டும். சிகப்பு அரிசி உமியுடன் இருப்பதை 2 வருடம் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் கிடைக்கும். புதுக்கோட்டையில் கிடைக்கும் காட்டுயானம் கர்ப்பிணிகளுக்கு உகந்தது. புளியங்குடி பகுதியில் கிடைக்கும் முளி கருப்பன் அவல், ஹீமோகுளோபினை அதிகரிக்கும். இதை சாப்பிட்டால் 2 மாதத்தில் வித்யாசம் தெரியும். நமக்கு கிடைக்கும் பாரம்பரிய அரிசி வகைகள் பெரும்பாலும் பச்சரிசி வகையாக இருப்பதால் பொங்கல், தோசை, அதிரசம் என செய்யலாம். சாதமாக சாப்பிடும்போது அதிக தயிர் சேர்த்து உண்ண வேண்டும். அப்போதுதான் சூட்டு பிரச்னை வராது” என்று புட்டு புட்டு வைத்தார்.

    நாம் வாழும் வீட்டை பராமரிக்க பல லட்சங்கள் செலவு செய்றோம். நம் உயிர் தங்கும் உடல் கூட்டை பராமரிக்க சிறுதானியங்களுக்காக செலவு செய்வது அவசியம். உடல் மேல் போடும் ஆடையில் காட்டும் அக்கறை உண்ணும் உணவில் இருக்க வேண்டாமா? என்ற சிந்தனையை தூண்டுவதாக நிறைவுற்றது கருத்தரங்கம்.

    umasaravanan likes this.

  10. #1120
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அவசியம் கவனிக்கவேண்டிய 10 நோய்களின் பட்டியல்!

    இன்றைக்கு அதிக அளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவது எபோலோவோ, எய்ட்ஸோ அல்லது வேறு எந்த தொற்றுநோய்களோ அல்ல. கொஞ்சம் உடலில் அக்கறை செலுத்தியிருந்தால் தவிர்த்திருக்கக் கூடிய பக்கவாதம், மாரடைப்பு போன்ற நோய்கள்தான் என்கிறார் டாக்டர் தமிழ்மணி.

    அதிக எண்ணிக்கையில் மனிதர்களைக் கொல்லும் நோய்களின் பட்டியலில் இவைகளுக்கு நிரந்தரமான இடங்கள் உண்டு எனும் பகீர் தகவலைச் சொல்லும் இவர், 2012 ல் அதிக எண்ணிக்கையில் மக்களை பலிவாங்கிய 10 நோய்கள் என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட பட்டியலை தந்து எச்சரிக்கிறார் நம்மை.

    கொஞ்சம் கவனமா இருந்தால் அடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையைக் கணிசமாக குறைத்து விடலாம் என்றும் நம்பிக்கை தந்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். நோய்களின் பட்டியல் கீழே.....
    contd..


    umasaravanan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter