Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1141
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூளை..!

    நம்ம மூளை வேலை செய்யாமல் இருக்க காரணங்கள்............

    1. புகைப்பிடிப்பதால், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மூளையில் உள்ள
    சுருக்கங்கள் அதிகரிப்பதோடு,
    அல்சீமியர் நோயை உண்டாக்கும்.

    2. உணவை தவிர்த்தால் ,இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது குறைந்து
    மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள்
    கிடைக்காமல், மூளையின் செயல்பாடானது
    தடைபட ஆரம்பிக்கும்.

    3. அதிகமாக சாப்பிடுவது மூளைத்
    தமனிகளை கடினமடையச் செய்து,
    ஞாபக சக்தியை குறைத்துவிடும்.

    4. அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள்
    உடலில் உறிஞ்சாமல், ஊட்டச்சத்து
    குறைபாட்டை உண்டாக்கி, மூளை வளர்ச்சியை
    தடை செய்யும்.

    5. உடலில் ஆக்ஸிஜனை அதிகம் உறிஞ்சுவது
    மூளை என்பதால் மாசுபட்ட காற்றினை
    சுவாசிக்கும் பொழுது , மூளையின்
    செயல்திறனானது குறைந்துவிடும்.

    6. நல்ல தூக்கம் இல்லாவிட்டால், மூளையில்
    உள்ள செல்கள் இறக்க நேரிடும். மேலும்
    தூங்கும் போது முகத்தை போர்வையால்
    போர்த்திக் கொண்டு தூங்கக் கூடாது.
    ஏனெனில் பின் மூளைக்கு வேண்டிய
    ஆக்ஸிஜன் கிடைக்காமல், மூளையானது பாதிக்கப்படும்.

    7. உடல் நலம் சரியில்லாத நேரத்திலும் வேலை செய்தாலோ அல்லது படித்தாலோ மூளை பாதிக்கப்படும்.

    8. குறைவாக பேசினால் மூளையின் செயல்திறனும் குறையும் . அதிகமாக பேசுவதன் மூலம் மூளையின் செயல்திறனை மேம்படுத்த முடியும்....


    Sponsored Links

  2. #1142
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
    நம் நாடு உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடு. சர்க்கரை நோயின் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு இங்கு சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர். சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் நம் உணவு வகைகளும், போதிய உடற்பயிற்சியும் இல்லாததால் தான். அதனால் நம் உணவு பழக்கவழக்கங்களை மாற் றிக் கொண்டு உடற்பயிற்சி செய்து வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க வாய் ப்புள்ளது.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்த கொதிப்பு, கொலஸ்டிரால் போன்ற நோய்களும் உடன் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சர்க்கரை நோயாளிகள் இதனையும் கண்டுபிடித்து கட்டுப்படுத்தி கொள்வது அவசியம்.

    தேரேகால்புதூர் மனுவேல் மருத்துவமனை சர்க்கரை நோய் மையத்தில் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகி றது. இங்கு 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சை மையம் செயல்படுகிறது. சர்க்கரை வியாதி உள்ள வர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து டாக்டர் கே.எம்.சிவகுமார் கூறியதாவது;
    contd..



  3. #1143
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    உணவில் சேர்க்க வேண்டியவை:

    * கொண்டைக் கடலை, கடலை, பச்சைப் பட்டாணி, காராமணி, சோயாபீன்ஸ் வகைகள்போன்றவற்றை மருத்துவர் குறிப்பிட்ட அளவிற்கு மேற்படாமல் சமைத்து சாப்பிடலாம்.

    *
    மருத்துவர் குறிப்பிட்ட அளவிற்குமேற்படாமல் கோழிக்கறி, மீன், இறைச்சி வகைகள் மற்றும்முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றைசாப்பிடலாம்.

    *
    நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், கீரை வகைகள் சாப்பிடலாம்.

    தவிர்க்க வேண்டியவை:

    * நிலத்திற்கு அடியில்விளையும் கிழங்கு வகைகள், உதாரணமாக கேரட், பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, கருணைக் கிழங்கு, உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, நிலக்கடலை போன்ற வற்றைதவிர்க்கவும்.

    *
    முட்டையின் மஞ்சள்கரு, ஆட்டிறைச்சி.

    *
    முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு.

    நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம்உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்:

    * மதுபானங் கள், புகை யிலை, பீடி, சிகரெட், பாக்கு, ஜரிதா பீடா
    *
    எண்ணெயில் செய்த உணவுகள் (உதாரணம்) பூரி, வடை, அப்பளம், புரோட்டா, வருவல், பக்கோடா.
    *
    எல்லாவித கிழங்கு வகைகள் (உதாரணம்) சேனை, உருளை.
    *
    தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நிலக்கடலை.
    *
    ஹார்லிக்ஸ், விவா, ஓவல்டின், போர்ன்விட்டா.


  4. #1144
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எளிய முறையிலான சித்த மருத்துவ குறிப்புகள்
    நமது தினசரி உணவு பழக்கத்தில் சில பழங்கள் மற்றும் பொருட்களை சேர்ப்பதன் மூலம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வை பெறலாம்.

    கல்லீரல் பலப்பட ... தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து மிக்கது.

    ரத்த அழுத்தம் சரியாக.... டீ, காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராகும்.

    இதயத்திற்கு பலம் கிடைக்க: மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிட மாதவிடாய் பிரச்சனை வயிற்று வலி குறையும். ஊமத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காதுவலி குணமாகும். விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட பித்தம் குறையும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும்.

    கறிவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளை குளிப்பாட்டிய உடன் கொடுக்க மாந்தம் குறையும். பசி எடுக்கும். துளசி சாறு கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும். அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு குணமாகும். அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் சரியாகும். கோவைப்பழம் தினசரி ஒன்று சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.
    contd..



  5. #1145
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும்.

    வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூச புண் ஆறும்.
    மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

    அரசமரத்து பாலை பித்த வெடிப்பு மீது தடவி வர குணம் கிடைக்கும்.

    வாழைப்பழம், ஏலக்காய் பொடி செய்து பிசைந்து சாப்பிட வயிற்று வலி சரியாகும்.
    முருங்கை பூவை பாலில் காய்ச்சி சாப்பிட மோகம் ஏற்படும்

    இலந்தை பழம் தினசரி சாப்பிட்டால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசி ஏற்படும்.

    முருங்கை இலை ஒருபிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் கர்ப்பிணிகளுகஙகு பேறுகால வலி குறையும்.
    தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மாறும் ஆல மரத்தின் இளம் கொழுந்தை மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும். அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குறையும்.

    எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடம் கண்வலி ஏற்படாது.

    அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் சாப்பிட ஆண்மை பெருகும்.

    காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

    தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட நரம்புத் தளர்ச்சி சரியாகும்.

    அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.

    மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும், உறுதியாகவும் இருக்கும்.
    நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் உறைவதை தடுக்கலாம்

    குழந்தைகளுக்கு நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுக்க கண் சூடு குணமாகும்.

    இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தம் சுத்தமாகும்.

    தினசரி இரவு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வர தொற்று நோய் நம்மை அணுகாது.

    பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட்டு வர ரத்தசோகை நீங்கும்


  6. #1146
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இருமல், தொண்டைப்புண்களை சீர் செய்யும் கொய்யா

    மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலிவானது மட்டுமல்ல. பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு கொய்யாபழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கொய்யாபழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும். இதில், முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவையாகும். கொய்யாபழத்தில் வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன.

    கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். பல்வேறு மருத்துவ குணம் உள்ள கொய்யாபழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், வயிற்றுவலி உண்டாக்கும். மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். கொய்யாபழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் கண்களில் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கலாம்.

    ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி சிறிது நேரம் கழித்து வாயை கொப்பளித்தால், வலி மற்றும் ஈறு வீக்கம் குறையும். மழைக்காலத்தில் பெரும்பாலானோருக்கு இருமல் மற்றும் தொண்டைப்புண் வரக்கூடும். இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி, வாயை கொப்பளித்தால் விரைவில் குணமாகும்.

    மது போதைக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும். இதன்மூலம் மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெற முடியும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடக்கூடாது. வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் கொய்யாபழத்தை சாப்பிடக்கூடாது.


  7. #1147
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    முக்கியமாக பயன்படுத்தும் 5 மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள்
    நாம் அன்றாட சமையலுக்கு பொதுவாக பயன்படுத்தக்கூடிய ஆயுர்வேத மசாலாக்கள் உணவில் சுவை கூட்டுவதாகவும், போஷாக்கு நிறைந்த உணவாகவும் கருதப்படுகிறது.

    கொத்தமல்லி

    உண்மையாகவே சமையலுக்கு சிறந்த நண்பனாக உதவி புரிவது கொத்தமல்லி விதைகள். இதை சமையலில் தனியாக பயன்படுத்தாமல் மசாலா பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லி விதைகள் ஆயுர்வேதத்தில் உடல் மற்றும் மனதை சமநிலைப் படுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர்.. ஆரோக்கியமான உடலுக்கு நன்மை சேர்க்கும் கொத்தமல்லி விதைகள் செரிமான பிரச்சனையை தவிர்த்து சுவாச பிரச்சனைகள், சிறுநீர் கோளாறுகள், பித்தம் அதிகமாகுவதால் ஏற்படக்கூடிய தோல் வியாதி ஆகியவற்றை சரிசெய்கிறது.. பித்தம் அதிகமாகி பித்த வாந்தி ஏற்பட்டால் கொத்தமல்லி விதைகளை இடித்து போட்டு காபி குடித்தால் பித்தம் தெளியும்.
    contd..



  8. #1148
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி


    இஞ்சி

    பெரும்பாலோனர் வீட்டில் இஞ்சி இல்லா சமையலை காண்பது அரிது. சமையலறையில் இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு நறுமணப்பொருள் இஞ்சி. இது உணவிற்கு சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் பயன்படுகிறது. பிரபஞ்ச மருந்து என அழைக்கப்படும் இஞ்சியானது கபம் மற்றும் வாதம் தீவிரமடைவதால் ஏற்படக்கூடிய மூச்சு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. காய்கறிகள் மற்றும் பயறுகள் உட்கொள்வதால் நமது உடலில் ஏற்படக்கூடிய உற்சாகத்தை, நறுமணப்பொருளான இஞ்சி நமக்கு தருகிறது. மேலும் ஜலதோஷம், இருமலை குணப்படுத்தக்கூடிய மூலிகை தேநீராகவும் பயன்படுத்தபடுகிறது.

    சீரகம்

    இது பெரும்பாலும் சுவையை கூட்டுவதற்காக ஊறுகாய் மற்றும் குழம்பு வகைகளில் சேர்க்கப்படும் நறுமணப்பொருளாக உள்ளது. இது செரிமான கோளாறை போக்கி கிருமிநாசினியின் தூண்டியாக செயல்படுகிறது. அதாவது உடலில் திரட்டப்பட்ட நச்சுகளை சுத்தப்படுத்தும் போது அவற்றிலிருந்து வெளியாகும் சிறந்த சத்துக்களை உறிஞ்சி நமது உடலை பாதுகாக்கிறது. கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாட்டை இது மேம்படுத்துகிறது.
    contd..



  9. #1149
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    வெந்தயம்

    உடல்நலத்திற்கு தேவைப்படும் சிகிச்சைமுறைபண்புகளை மிகச்சிறப்பாக கொண்டுள்ளது வெந்தயம். இந்த வெந்தயமானது செரிமானம், சுவாசகோளாறு, நரம்பு மற்றும் மாதவிடாய்கோளாறுகளை சீர்படுத்த பெரிதும் பயன்படுகிறது, மேலும் தோல்களை தூய்மைபடுத்துகிறது. எடைக்குறைப்புக்குமிக எளிய முறையில்வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத் தண்ணீரை குடிப்பதால்உடலில் உள்ள இரத்த சர்க்கரைஅளவை குறைக்கிறது. இந்திய சமையலில் வெந்தயத்தை வாசனைப்பொருளாகவும்பயன்படுத்துவார்கள்.

    மஞ்சள்

    இந்தியாவைப் பொறுத்தவரை மஞ்சள் மங்களஅடையாளம். எந்தவொரு நல்ல நிகழ்விலும் மஞ்சளுக்குத்தான் முதலிடம். -இந்தியாவின்குங்குமப்பூஎன்று மஞ்சளைகுறிப்பிடுகிறார்கள். கசப்பை கட்டுபடுத்தக்கூடிய காரமான வாசனை கொண்ட மஞ்சள் பலமருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நம்உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழிப்பதில் மஞ்சளுக்குப் பெரிய பங்கு உண்டு.-டைப் 2 நீரிழிவுக்காரர்களுக்கும்மஞ்சள் சிறந்த மருந்து.மஞ்சளானது இன்சுலின்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது குளூக்கோஸ் கட்டுப்பாட்டை ஒரே அளவில் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. நம்உடம்பில் எந்த இடத்தில் புண் வந்தாலும் வீக்கத்தைக் குறைத்து விரைவில் ஆறவைப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் மிகச் சிறந்தஆன்ட்டி ஆக்சிடன்ட்மருந்தாகும். நாம் சாப்பிடுகிற உணவுப் பொருட்களின் வழியே உள்ளே செல்கிற நச்சுக்கிருமிகளை அழித்து, நம் ரத்தத்தைசுத்திகரிக்க வல்லது.


  10. #1150
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடலின் கவசம் மிளகு
    பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம் என்று சித்தமருத்துவ பழமொழி ஒன்று உண்டு. அந்த பழமொழி சொல்லவருவது மிளகு உணவின் நச்சுத்தன்மையை (Antidote) போக்கும் குணமுடையது என்பதுதான். திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி கூட்டணியில் உள்ள மிளகு, உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் நறுமணப் பொருள். இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர் செல்வமூர்த்தி கூறியதாவது: ஒவ்வொரு உணவிலும் மிளகு இருப்பது ஹெல்த் இன்ஷியூரன்ஸுக்கு கட்டும் பிரீமியத்தைக் காட்டிலும் பாதுகாப்பு தரும்.

    மிளகை அதன் உலர்ந்த பழமாகவே (கருப்பு குறு மிளகு) நாம் பெரும்பாலும் பயன்படுத்தினாலும், சில இடங்களில் தொலி நீக்கிய வெண்மிளகாகவும் பயன்படுத்துவர். வெண் மிளகில் காரம் குறைவு. சத்தும் சற்று குறைவுதான். சூப்பில் போட்டு கொஞ்சம் மணமோடு அலங்கரிக்க உதவுமே தவிர வேறு விசேஷமில்லை. அதனால் கருப்புதான் சிறந்தது. மிளகு சற்று வெப்ப குணமுடையது. சீதளத்தை போக்குவதில் மிளகு முதல் மருந்து. நமக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் உணவிலும் பழங்களிலும் மிளகைத்தூவி சாப்பிடுவது அந்த உணவால் சளி பிடிக்காமல் இருக்கத்தான்.

    வெள்ளரிக்காயில் மிளகைத் தூவி சாப்பிட உடலும் குளிரும். சளியும் பிடிக்காது. வெள்ளரி, வெள்ளைப்பூசணி, சுரைக்காய், தர்ப்பூசணி, பாசிப்பருப்பு போட்டு செய்யப்படும் வெண்பொங்கல் முதலான உணவுவகைகளில் மிளகு சேர்ப்பது அவசியம். சளி, இருமல் இருப்பவர் பால் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயமிருப்பின், சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவது நல்லது. மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter