Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1151
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Antiinflamattory)வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha) பசியைத் தூண்டும்பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (கிஸீtஹ்ஜீஹ்க்ஷீமீtவீநீ), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாகசெயல்படும் பண்பும் (Antihelmenthetic) உள்ளது.

    நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும்மதிமயக்கம், இவற்றிக்கு மிளகுசிறந்த மருந்தாகும்.
    நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும்மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.நல்லமிளகில்ஜீவீஜீமீக்ஷீவீஸீமீ என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது.

    வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டிசுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மைஅதிகரிக்கப்படுகிறது.
    வாயு தொல்லை இல்லை. சித்த மருத்துவத்தில்தயாரிக்கப்படும் அதிக மாத்திரைகள், மருந்துகள், தைலம் மிளகு ஒரு துணைமருந்தாகவும், விஷமுறிவாகவும்சேர்க்கப்படுகிறது..


    Sponsored Links

  2. #1152
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வயிற்றில் பிரச்னையா கருவேப்பிலை ருசிங்க...

    தமிழர்களின் சமையலில் முக்கிய பங்கு வகிப்பது கறிவேப்பிலை. சமையலில் கறிவேப்பிலையை பயன்படுத்தினால் உணவு ருசிமிகுந்தாகவும், வாசனை மிகந்ததாகவும் மாறும். கறிவேப்பிலை தென்னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இது இந்திய, இலங்கை உணவு வகைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. இத்தாவரத்தின் தோற்றம் தென்னிந்தியாவாகும். இதன் விதைகள் நச்சுத் தன்மையுடையவை.

    இலங்கை, இந்தியா தவிர்ந்த மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படுகின்றது. தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு பிற இனத்தவர்களான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற மக்களிடமும் கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது. கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணி.. இது குறித்து அரசு சித்தா மருத்துவர் செல்வமூர்த்தி கூறியதாவது: கறிவேப்பிலை தூக்கி எறிவதற்கல்ல, உண்பதற்கே.

    புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி. இவற்றால் கண் பார்வைக் கோளாறுகள் வராது. எலும்புகள் ஏற்றம் பெறும். சோகை நோய் அண்டாது. தொற்று நோய் ஊரில் இருந்தாலும் நமக்கு வராமல் தடுக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு. புண்கள் விரைவில் ஆற கறிவேப்பிலை உதவும். சிறப்பாக வாய்ப்புண் குணமாகும். பல் ஈறு வலுவாகும். வயிறு தொடர்பான சிக்கல்களை விரட்டியடிக்கும் வலிமை இதற்கு உண்டு. மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை மிகுவிக்கும்.

    பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தை மாற்றி வாந்தியை தடுத்து வயிற்று இரைச்சலைத் தொலைக்கும். தலைமுடி வளரவும், வனப்பாக விளங்கவும், கண்களுக்கு ஒளிதரவும், சுக்கிலம் விருத்தியடையவும் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவும். முகத்தில் அம்மை வடுவா? கவலை வேண்டாம். கறிவேப்பிலை ஒரு பிடி, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு, அம்மியில் வைத்து அரைத்து முகத்தில் தடவுங்கள் அரை மணிநேரம் ஊறவைத்த பின் கழுவுங்கள்.
    contd..



  3. #1153
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    இதுபோல 15 நாட்கள் செய்துபாருங்கள் இம்மைத் தழும்புகள் மறையும். பசி எடுப்பதில்லையா? ஜீரண மந்தமா? கறிவேப்பிலையை வறுத்துமிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடிசெய்து உப்புச் சேர்த்து சோறுடன் பிசைந்து உண்ணுங்கள். பசி கிளர்ந்தெழுந்து கொண்டுவா கொண்டு வா என்பீர்கள் என்றார்.

    கறியில் போடும் இலை

    கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம்வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை எனபெயர் பெற்றுள்ளது. கறி எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும்(Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும். குறிப்பாக, யாழ்ப்பாணத் தமிழரின்பேச்சு வழக்கில் கேட்கலாம். இருப்பினும் கறுவேப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என்றும் பேச்சுவழக்கில் பயன்படுவதும் உண்டு.


  4. #1154
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகள்

    ஆரோக்கியமான பெண்களால் தான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர்.சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம். குடும்பத்தை பற்றிய சிந்தனையாலும், பணிச் சூழலாலும் பெண்களுக்கு தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.

    கரோட்டினாய்டு உணவுகள்

    பெண்கள் உண்ணும் உளவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறி பழங்களில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவுகள் பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.

    ஒமேகா 3 உணவுகள்

    பெண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் மத்தி உள்ள அனைத்து வகை மீன்களையும் உட்கொள்ளலாம்.
    மீன் தவிர, சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றையும் உட்கொள்ளலாம்.
    இதன் மூலம் இதயநோய்கள், முடக்குவாதம் போன்றநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். வால் நட் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
    contd..


    Last edited by chan; 7th Dec 2014 at 12:40 PM.

  5. #1155
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    அத்திப்பழம், பால்

    அத்திப்பழம் எண்ணற்ற தாதுச் சத்துக்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அணுக்களை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் சத்து போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக கிடைக்கச் செய்கின்றன. எனவே வாரம் இருமுறையாவது அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    அதேபோல் பெண்கள் தினசரி இருவேளை பால் உட்கொள்ள வேண்டும். பாலில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.

    ஓட்ஸ், தக்காளி

    ஓட்ஸ் உணவில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் வைட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு பிஎம்எஸ் எனப்படும் மாதவிடாய் கால சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
    கீரைகளில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் பெண்களுக்கு பி.எம்.எஸ் சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. எனவே தினசரி உணவில் பெண்கள் கீரையை உட்கொள்ள வேண்டும்.
    தக்காளியில் உள்ள லைகோபீன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது மிகச்சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது.
    இது இதயநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்கள் அன்றாட உணவில் தக்காளியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


  6. #1156
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அத்திப் பழம்..!

    1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,

    2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,

    3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

    4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.

    5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

    6.சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.


  7. #1157
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    புத்துணர்வு பானங்கள் தரும் புதிய பயம்
    சோர்வாக இருக்கும்போது புத் துணர்வு பானங்களைப் (Energy drinks) பருகினால் பல மணி நேரத்துக்கு மனம் உற்சாகத்தில் கரைபுரளும் என்று டிவி விளம்பரங்கள் நம் தலைக்குள் நுழைந்து, வாங்கச் சொல்லும் காலம் இது. ஒரு காலத்தில் தேநீர் இலவசமாக வழங்கப் பட்டுப் பழக்கப்படுத்தப்பட்டது போல, விலை கூடிய புத்துணர்வு பானங்கள் மக்கள் கூடும் இடங்களில் இலவசமாகத் தரப்படுகின்றன.
    இந்தியச் சந்தையில் தற்போது பிரபலமாகி வரும் புத்துணர்வு பானங்கள் இளைஞர்கள் இடையே பரவலான வரவேற்பைப் பெற ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், இப்பானங் கள் அச்சுறுத்தும் ஆரோக்கியக் கேடுகளைத் தோற்றுவிக்கப் போகின்றன என்று எச்சரிக்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.
    கேஃபைன் எச்சரிக்கை
    புத்துணர்வு பானத் தயாரிப்பின்போது கேஃபைன் (caffine) என்னும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இதுவே உற்சாகம் உண் டாகக் காரணம். கேஃபைன் சேர்க்கப்படும் அளவுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். கேஃபைனின் அளவு அதிகரித்தால் படபடப்பு, ரத்தஅழுத்தம், வாந்தி, வலிப்பு, அதிகப் பட்சமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் ஆபத்துவரை நேரலாம்.
    புத்துணர்வு பானங்களில் இருக்கும் அதே அளவு கேஃபைன் நாம் அருந்தும் காபியிலும் இருக்கிறது. ஆனால், புத்துணர்வு பானங்கள் குளிரூட்டப்பட்டிருப்பதால் நாம் சட்டென்று குடித்துவிடுகிறோம். அதுவும் ஒரு விதத்தில் சிக்கலை அதிகப்படுத்தலாம்.
    சமீபத்தில் நடத்தப் பட்ட ஆய்வுகளின்படி புத்துணர்வு பானங்களில் கேஃபைன் தவிரக் குவாரனா (guarana), தாரைன் (taurine), வைட்டமின் பி உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை கேஃபைனோடு சேரும்போது ஏற்படும் எதிர்விளைவுகள் பற்றித் தெரியவில்லை.
    குளிர்பானமும் மதுபானமும்
    அடுத்த சிக்கல், புத்துணர்வு பானங்களை மதுவுடன் கலந்து பருகுவதால் ஏற்படும் விளைவுகள். உலகளவில் 18 முதல் 29 வயதுவரையிலான இளைஞர்களில் 70% பேர் புத்துணர்வு பானங்களை மதுவோடு கலந்து குடிப்பதாக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இப்படிக் கலந்து குடிப்பது கூடுதல் ஆபத்து.
    விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட, உடல் எடை குறைய, பல் வலி குறையப் புத்துணர்வு பானங்கள் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், விளைவுகள் விபரீதமாகலாம்.
    எச்சரிக்கை தேவை
    இப்பானங்கள் அடைக்கப்பட்டுள்ள பாட்டில்களில் “குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார் களுக்கு உகந்ததல்ல” எனக் குறிப்பிட வேண்டும் என்கிறது உலகச் சுகாதார நிறு வனம். அது போன்ற எச்சரிக்கை அறிவிப்பும், நம் உடலில் ஆபத்தான விளைவுகளும் ஏற்படும்வரை நாம் காத்திருக்க வேண்டுமா?


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-4_2165486f.jpg  

  8. #1158
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மாணவர்களை தாக்கும் மன அழுத்தம்!

    மனசே... மனசே... டாக்டர் சித்ரா அரவிந்த் மனநல நிபுணர்

    பொதுவாகவே பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்கள் - குறிப்பாக 10, 12ம் வகுப்பு - எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது வழக்கம். படிக்காவிட்டால் அவர்கள் எதிர்காலமே இருண்டு போய்விடுமே என்ற எண்ணத்தால்தான் இத்தனை எதிர்பார்ப்பும்.

    ஆனால், இப்படி அவர்களை இடைவெளியில்லாமல், எந்த பொழுதுபோக்கும் இல்லாமல் கட்டாயப்படுத்தி படிக்க வைத்தால் நிச்சயம் மன அழுத்தம் ஏற்படும். இதனால், தேர்வில் தோல்வியடையவில்லை என்றாலும், வாழ்க்கையில் தோல்வியை தழுவுவார்கள் எனப் பல ஆராய்ச்சி முடிவுகள் உரைக்கின்றன.

    நல்ல கல்லூரியில் சேர்க்கை... நல்ல அலுவலகத்தில் வேலை, கை நிறைய சம்பளம்... நிறைவான வாழ்க்கை... இப்படி எதிர்காலம் பிரகாசமாக அமைய வேண்டும் என்ற பெற்றோரின் ஆசைகள் மன அழுத்தம் காரணமாக நிராசையாகவே ஆகிவிடும்.

    சில நேரங்களில் மன அழுத்தத்துடனே விருப்பமில்லாமல் படித்து நல்ல வேலை அமைந்தாலும் குழந்தைகள் பிற்காலத்தில் பெற்றோரை பெரும்பாலும் மதிக்க மாட்டார்கள்.

    பல தருணங்களில் குடி மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது. மொத்தத் தில், அவர்களின் ஆளுமையே (Personality) பாதிக்கப்படலாம்.

    இதற்காக மாணவர்களை படிக்க வேண்டாம் என கூறவில்லை. எந்தவொரு விஷயத்தையும் ரசித்து அதன் அர்த்தத்தை உணர்ந்து செய்தால் வெற்றி நிச்சயம். கட்டாயத்தால் பிடிக்காத பாடப்பிரிவை எடுப்பவர்கள், தங்கள் வாழ்க்கையை எந்த மகிழ்ச்சியும் இன்றி மற்றவர்களை குறை சொல்லியே காலத்தை கழிப்பார்கள்.

    இப்படியொரு வாழ்க்கை அவசியம்தானா?மாணவர்களுக்கு மன அழுத்தம் வராமல் இருக்க பெற்றோரின் பங்கு மிகவும் அவசியம். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கல்வியின் சக்தியை சொல்லியே வளர்க்க வேண்டும். இதற்காக, ‘படித்தால்தான் நல்லா சம்பாதிக்கலாம்’, ‘படிக்கலைன்னா மாடுதான் மேய்க்கணும்’, ‘படி படி’ என்பது போன்ற வாசகங்களை தவிர்க்க வேண்டும்.
    contd..



  9. #1159
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    மாறாக, கல்வியினால் என்னென்ன நன்மைகள் என்பதை நாசுக்காக சிறுவயதிலேயே உணவோடு சேர்த்து புகட்ட வேண்டும். மதிப்பெண்களுக்காகப் படிப்பதைத் தவிர்த்து, எதிர்கால வாழ்க்கைக்காக படிக்க வேண்டும் என உணர்த்தினாலே அர்த்தம் புரிந்து ஆர்வத்துடன் படிப்பை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அடுத்ததாக... தங்களுடைய கனவு, ஆசைகளை பிள்ளைகள் மீது திணிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    அது அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்காது... சுமையாகவே அமையும். இது உங்களுக்கு பொருந்துகிற உடையை, உங்கள் பிள்ளைகளை அணியச் செய்வதற்கு சமம்! உங்கள் குழந்தைகள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். தனிப்பட்ட ஆசை, கனவு, திறன் என பல விஷயம் சேர்ந்த ஆற்றல் மிக்க அற்புத கலவை. இவ்வுலகில் எல்லோருக்கும் தனித்தன்மை உள்ளது... ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிடுவதே சாத்தியமில்லை.

    பறவைக்கு எவ்வளவுதான் நீச்சல் சொல்லிக் கொடுத்தாலும் அதனால் நீந்த முடியாது. மீன் எவ்வளவு பயிற்சி எடுத்தாலும் பறவை போல பறக்க முடியாது. அதனால், குழந்தைகளின் ஆர்வம் மற்றும் தனித் திறமையையும் பலவீனத்தையும் நன்கு புரிந்து, அதற்கு தகுந்தவாறு ஊக்கமளிக்க வேண்டும்.

    அவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் உரிமையையும் சுதந்திரத்தையும் அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்கக் கூடாது. அதிக மதிப்பெண் வாங்க வைப்பதை விட பிள்ளைகளின் வாழ்க்கையை நிறைவாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குவதே உண்மையான வெற்றி என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

    மாணவர்கள் வாழ்வில் படிப்பும், பொழுதுபோக்கும் சமமாக இருப்பின் மன அழுத்தம் இல்லாமல் தங்களின் முழுத் திறமையை வெளிக்காட்டி நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

    பறவைகளும் விலங்குகளும் குறிப்பிட்ட காலகட்டம் வரையே குழந்தைகளை பாதுகாக்கும். அவற்றுக்குத் தனியே வாழும் பக்குவம் வந்தவுடன், அதன் சுதந்திரத்தில் தலையிடாமல் அடுத்த வேலையை பார்க்க போய்விடும்.

    இந்த இயற்கை நியதி மனிதனுக்கும் பொருந்தும். நம் நாகரிகத்திலோ, பிள்ளைகளுக்கு எவ்வளவு வயதானாலும் பெற்றோரின் தலையீடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    இப்படி எல்லா விஷயத்துக்கும் தங்களையே சார்ந்திருக்கும்படி பெற்றோர் வளர்த்துவிட்டு, 20 வயதானவுடன் திடீரென பிள்ளைகள் சுயமாக இருக்க வேண்டு மென எதிர்பார்ப்பார்கள்.
    contd..



  10. #1160
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகள்

    1. அறிவுத்திறனை பாதிக்கும். கவனம் செலுத்த முடியாது. மறதி ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை உண்டாகும்.
    2. உறவுகளை பாதிக்கும். அம்மா, அப்பாவுடன் சண்டை, சக மாணவியருடன் தகராறு, ஆசிரியர்களிடம் பிரச்னை ஏற்படும்.
    3. தற்கொலை எண்ணம் தோன்றக்கூடும்.
    4. தன்னம்பிக்கை குறையும்.
    5. குடி / சிகரெட் / போதைப் பழக்கம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
    6. தோல்வி அடைந்து விடுவோம் என்கின்ற எதிர்மறை மனப்பான்மை ஏற்படும் (Fear of failure).
    7. தன் திறமையை / அறிவுத்திறனை விட குறைவாக மதிப்பெண் எடுப்பது வழக்கமாகும் (underachievers).
    8. உடல், மனநல பிரச்னைகள் (வலிகள், மனச்சோர்வு, மனப்பதற்றம், பயம் மற்றும் பல...)


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter