Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1161
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நூடுல்ஸ் ஆரோக்கியமானதா?

    நூடுல்ஸ் என்பது அனைத்து வயதினராலும் விரும்பப்படும் மலிவான மற்றும் விருப்பமான உணவாகும்! சமையலறையில் நுழைவதற்கு கூட நேரம் கிடைக்காதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    இன்றைய தலைமுறையினருக்கு எதற்கும் நேரம் கிடைக்காததால், ஆரோக்கியமற்ற சுத்தமில்லாத உணவுகளை உண்ண பழகிக் கொண்டார்கள்.

    தற்போதைய சூழலில், உடனடி நூடுல்ஸை 'புற்றுநோய் நூடுல்ஸ்' எனவும் குறிக்கலாம். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். இன்றைய வேகமான உலகத்தில், அளவுக்கு அதிகமான வேலைவின் காரணமாக நூடுல்ஸ் போன்ற உணவுகளை உண்ணும் நிலைக்கு நம்மை தள்ளி விட்டுள்ளது. அதை உட்கொள்வதற்கு 2 கப் வெந்நீர் இருந்தால் போதும் தானே.

    ஆனால் இவ்வளவு வேகமாக தயாராகும் உணவுக்கு கண்டிப்பாக ஜங்க் உணவு பட்டியலில் இடமுள்ளது. பெரும்பாலும் நூடுல்சை நம்பி வாழ்பவர்களுக்கு செரிமான அமைப்பில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

    உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் வயிற்று வலி, ஈரல் மற்றும் கணைய பிரச்சனைகள் ஏற்படலாம்.

    வெகு விரைவிலேயே தயாரிக்கப்படும் இந்த உணவில் மட்டும் தான் உலகத்திலேயே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்றும் எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை இன்னும் பலருக்கு தெரிவதில்லை.

    உடனடி நூடுல்ஸ்களில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் குறைவாக உள்ளது என மருத்துவர்கள் மற்றும் உடல் ஆரோக்கிய வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒரு முறை உண்ணும் நூடில்ஸில், தேவையான புரதம் மற்றும் வைட்டமின்கள் கிடைக்காமல் குறைபாடு ஏற்படும்.

    அதிக இரத்த கொதிப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு சோடியம் என்பது உயிர் கொல்லியாக விளங்குகிறது. நமக்கு பிடித்தமான நூடுல்ஸில் சோடியம் என்பது ஒரு புதையல் அளவிற்கு இருக்கிறது என ஆய்வுகள் கூறுகிறது. இதனால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு இடர்பாடு அதிகம்.

    நூடுல்சை தினமும் உட்கொண்டு வந்தால், சின்ன குழந்தைகள் பல வகை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இரத்த கொதிப்புக்கும், இதய நோய்களுக்கும் கூடுதல் அளவிலான சோடியமும் காரணமாகும்.

    நூடுல்ஸில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது என பலரும் கூறுகின்றனர். பேக் செய்யப்படுவதற்கு முன்பு நூடுல்ஸ் சூடுபடுத்தப்படுகிறது என கூறப்படுகிறது.

    இதனால் நூடில்ஸில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. மேலும் நம் விருப்ப உணவான உடனடி நூடுல்ஸில் கார்போஹைட்ரேட்ஸ் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
    contd..



    Sponsored Links

  2. #1162
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    இதனால் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். பேக் செய்யப்படுவதற்கு முன்பாக செய்யப்படும் இந்த பதனிடப்படுதல், ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கைகளை குறைத்துவிடும்.

    இதனால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள உணவாக இது மாறுகிறது. முழு கோதுமையால் நன்றாக தயாரிக்கப்பட்டுள்ள ஆட்டா நூடுல்ஸ் நல்ல உணவாக தெரியலாம்.

    ஆனால் அதில் அளவுக்கு அதிகமான காய்கறி ஊட்டச்சத்துக்கள் என கூறப்படுவதெல்லாம் உண்மையல்ல. அதில் காணப்படும் உலர்ந்த பட்டாணி மற்றும் சில கேரட்கள் எவ்விதத்திலும் நமக்கு நன்மையை அளிக்காது.

    இவையெல்லாம் அவர்களின் பொருட்களை விற்பதற்கு மக்களை ஏமாற்றும் ஒரு வேலையாகும். புதிய ஆட்டா நூடுல்ஸ் அதன் ஊட்டச்சத்துக்களுக்காக சற்று முக்கியமான உணவாக மாறிவிட்டது.

    ஆனால் உண்மைக்கு புறம்பாக பல அடி ஆழத்தில் பொய் மறைந்திருக்கிறது. ஒரு பாக்கெட் நூடுல்சில் தோராயமாக 400 கலோரிகள் இருப்பதாக அறியப்படுகிறது.

    இதில் அதிக கலோரிகள் இருக்கிறது என்பதற்கு இது போதாதாப அதனால் இதய நோய்கள் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஆரோக்கியமற்ற உணவாகும்.

    அதனை பற்றிய பல ஆபத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டாலும் கூட இன்னமும் பலர் அதனை பிரியப்பட்டு உட்கொண்டு வருகின்றனர்.


  3. #1163
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    "தியானத்தின் பலன்கள்"

    1) வியாதிகளிலிருந்து நிவாரணம்
    2) வியாதி வராமல் தடுக்கும் சக்தி பெருகி, நிரந்தர ஆரோக்கியம் பெறுதல்.
    3) தேவையற்ற பழக்க வழக்கங்கள் மடிந்து மறைதல்
    4) மனம் எப்பொழுதும், அமைதியான, ஆனந்த நிலையில் இருத்தல்
    5) மற்றவருடன் தோழமை, நட்பு வளர்ந்து, செம்மைப்படுதல்.
    6) எண்ணிய எண்ணம் வலுப்பெற்று, நிறைவேறுதல்.
    7) ஞாபக சக்தி அதிகரிப்பு.
    இந்த வாழ்க்கையின் இலட்சியத்தை குறிக்கோளை - தெள்ளத் தெளிவாக அறிதல்.
    9) வேலைத்திறன் கூடுதல், மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்தல்.
    10) மேலுலக குருமார்களுடன், தியானத்தில் தொடர்பு கொண்டு, அவர்கள் அறிவுரைப்படி தீராத பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.
    11) சூட்சும சரீர யாத்திரை, வருமுன் கண்டறிதல் இன்னும் பற்பல தியான அனுபவங்கள் ஏற்பட்டு தன்னையறிந்து, முக்தி பெறுதல்.
    12) முன் ஜன்மங்களை தியானத்தில் கண்டறிதல்.
    13) எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் (awareness) செயல்படல்
    contd..



  4. #1164
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    மாணவ, மாணவியருக்கு:
    1)
    உடல்ஆரோக்கியம் அடையும்.
    2)
    தேவையற்றபழக்கங்கள் மடிந்து மறையும்.
    3)
    பாடத்தில், கூடுதல் கவனம் ஏற்படும்.
    4)
    ஞாபகசக்தி வளரும்.
    5)
    எல்லோருடனும்சுமூக உறவு ஏற்பட்டு செம்மை பெறும்.
    6)
    உள்ளேஉறங்கிக் கொண்டிருக்கும் கலைத்திறமை, மற்றும்பற்பல திறமைகளை கண்டறிந்து, வளரச்செய்ய இயலும்.
    7)
    பயம், போன்ற தேவையற்ற உணர்ச்சிகள் நம்மைவிட்டு அகலும்.தன்மைபிக்கை பன்மடங்காகும்.
    உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாமல் மனம், குதூகலம், அமைதி, திருப்தி அடையும்.
    9)
    மற்றவர்களைப்புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும்.
    10)
    நஷ்டங்களைமற்றும் தோல்விகளைக் கண்டு தளராத மனவலிமை ஏற்படும்.
    11)
    அளவானதூக்கம் மற்றும் பேச்சு உண்டாகும். தேவைக்கதிகமான தூக்கத்திலும், பேச்சிலும், நேரம்வீண் போகாது.
    12)
    சூட்சுமமானவற்றையும்புரிந்து கொள்ளும் நுண்ணறிவு வளரும்.
    13)
    தேர்ந்தெடுக்கும்திறன் (Power of choice) எண்ணத்தின் வலிமை (thoughtpower) இவை உண்டாகும்.

    contd..



  5. #1165
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    கர்ப்பினிப் பெண்களுக்கு - தியானம் மிக மிக அவசியம்
    1) தாய், சேய் நலம் உண்டாகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராகும்.
    2) மன வலிமை, மன அமைதி ஏற்படும்.
    3) பயம் அகன்று, தைரியம் உண்டாகும்.
    4) சுகப் பிரசவம் உண்டாகும். பழைய ஆரோக்கிய நிலைக்கு உடனடியாகத் திரும்பலாம்.
    5) குழந்தைக்கு ஆன்மீக நெறியான அடிப்படை பாடம், பிறக்கும் முன்பே உருவாகி, வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும்.


  6. #1166
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்கள் . . .

    குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடை பயிற்சி, கடுமையான உடற்பயிற்சி

    யை மேற்கொள்கின்றனர். விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.

    இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வருமாறு:-

    குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

    பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது.

    இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது


  7. #1167
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொப்பையைக் குறைக்கும் அன்னாசிப்பழம்...!

    இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்பளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மரு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும்.

    அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.


  8. #1168
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மணதக்காளி...!!!

    வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

    மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது


  9. #1169
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆயுர்வேதம் சொல்லும் உணவின் அளவு எவ்வளவு !

    நாம் உண்ணும் உணவை இரண்டு வகையாக பிரிக்கலாம். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவை 'லகு' என்றும், சிரமப்பட்டு உணவை உடைத்துக் கூழாக்கி நீண்ட நேரத்திற்குப் பிறகு ஜெரிக்கும் உணவு வகைகளை 'குரு' என்றும் இருவகைகள். அரிசி, கொள்ளு, பொரி, கசப்பு, துவர்ப்பு மிகுந்த பொருட்களை எளிதில் ஜீர்ணமாக்கி விடுகிறோம். மாப்பண்டங்கள், இனிப்பு வகைகள் அனைத்தும் மெதுவாக ஜீர்ணமாகின்றன. இது இயற்கையான நியதி என்றிருந்தாலும் உணவை சமைப்பதன் மூலம் 'குரு'வான உணவை எளிதில் ஜெரிப்பதிலும், 'லகுவான' உணவை குருவாக்கவும் செய்து விட முடிகிறது. கோதுமை சப்பாத்தியை நெருப்பில் இட்டு பாகப் படுத்துவதும், அரிசியை பொங்கலாக்குவதும் அதற்கு உதாரணங்கள். உடற்பயிற்சியின் மூலமாக உடல் பலமும் அக்னி பலமும் நன்றாக அமைந்தவர்களுக்கு எவ்வித உணவையும் எளிதில் ஜீரணித்து விடுகின்றனர்.

    உடல் பலமும் அதற்கேற்ப அக்னி பலமும் பருவநிலைகளால் மாறுபடுகின்றன. குளிர் காலங்களில் உடலும் அக்னிபலமும் அதிகரித்திருக்கும். மழைக்காலம், கோடைக்காலம் இவைகளில் குறைந்தும், இளவேனிற் காலம், இலையுதிர் காலம் போன்ற பருவங்களில் நடுத்தரமாகவும் இருக்கும்.கர்ப்பப்பையில் சினை முட்டையின் சேர்க்கை நிகழ்ந்ததும் குழந்தையின் வாத பித்த கப தோஷங்களின் சேர்க்கையின் அளவும், ஜீரண சக்தியின் பலமும் அந்த தோஷங்களாலும் தீர்மாணிக்கப்படுகின்றன. தாயாரின் பாலை மட்டுமே அருந்தி வளரும் குழந்தை பெரிதானதும் அறுசுவை உணவையும் ஜீர்ணிப்பதை காண்கிறோம்.குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் முடிய உள்ள வயது காரணமாகவும், வசிக்கும் இடம் காரணமாகவும், ஜீரண சக்தி வேறுபடுகிறது. கடற்கரை ஓரம், சதுப்பு நிலங்கள் போன்ற இடங்களில் சிறிதளவு உணவைக் கூட ஜீரணிக்க முடியாத சில உடல் நிலைகள், வரண்ட இடங்களில் வசிக்கும்போது எவ்வித உணவையும் ஜீரணிக்கும் தன்மையை பெறுகின்றன.
    contd..



  10. #1170
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    நமதுபுலன்களுக்குப் புலப்படாத இந்த அக்னியின் பலத்தை அவரவர்கள் தான் நன்கு உணரமுடியும். சர்க்கரையில் உள்ள இனிப்பு, அனுபவவாயிலாகவே அறிய முடியும். எனவே அவரவர் தன் உடல் நிலையைத் தானாகவே நன்கு அறிந்துகொண்டு அக்னி பலத்தைத் தீர்மாணித்து எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருள்களை திருப்திஏற்படும் வரையில் உண்ணலாம். அதிலும் அதிக திருப்தி ஏற்படும்வரை உட்கொள்ளுதல்கூடாது. தாமதித்து ஜீரணமாகும் உணவுப் பொருட்களை "மேலும் ஓர் பங்குசாப்பிடலாம்" என்று தோன்றும் பொழுதே உண்பதை நிறுத்த வேண்டும். அப்பொழுதுதான்அவை நன்கு ஜீரணம் அடையும். அவரவர் ஜீரண சக்திக்குத் தகுந்தவாறு உண்ண வேண்டும்என்று கூறியதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. தன் ஜீரண சக்தியை அறிந்து தன்இரைப்பை கொள்ளும் அளவை நான்கு சமபாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அவற்றுள்இரண்டு பாகங்களை அன்னம் போன்ற கனமான பொருள்களாலும், மற்றொருபாகத்தை தண்ணிர் முதலிய திரவங்களாலும் நிரப்பி எஞ்சியுள்ள மற்றொரு பாகத்தைகாலியாகவே விட்டுவிட வேண்டும். இந்த அளவு முறையை அநுபவ வாயிலாக அறிய வேண்டும்.வேறு எந்த வழியும் பூரணமான வழியாகாது. அவ்வப்போது அவரவர் தீர்மாணிப்பதே சாலச்சிறந்தது.

    இடைவெளியில்லாமல் வயிற்றின் முழு பகுதியையும் உணவால்நிரப்பியால் உணவு அசையக்கூடமுடியாமல் தேங்கி ஜீரணமாகாமல் நிற்கும். ஆகவேதான்நான்கில் ஒரு பகுதியை காலியாக விட வேண்டும் என்ற உபதேசத்தை ஆயுர்வேதம்நமக்களிக்கிறது. அதிக அளவில் கனமான பொருளை சாப்பிட்டால் உணவு நெகிழ்ச்சி ஏற்படாமல்மந்தித்து நிற்கும். அதை தளர்வு செய்ய தண்ணீரை உணவின் இடையில் சிறிய அளவில் பருகவேண்டும். திரவமான உணவை அதிக அளவில் ஏற்றால் அது எளிதில் ஜீரணமாகி மறபடியும் பசியைஎடுக்கச் செய்யும். அடிக்கடி உண்பது ஆரோக்யத்திற்கு ஏற்றதல்ல. திரவ உணவிற்குசத்தும் குறைவு என்பதால் உடல் மெலிந்து விடும். தண்ணீரை உணவிற்கு முன்பும்உணவிற்குப் பின்னர் குடிப்பதும் தவறாகும். உணவிற்கு முன் குடித்தால் வயறு நிரம்பிவிடும். கனமான பொருளை சரியான விகிதத்தில் உண்ண முடியாது. ஜீரணமாகாது. உணவிற்குப்பின் தண்ணீர் குடித்தால் கபநோய்கள் ஏற்பட்டு உடல் பருமன், ஜலதோஷம் போன்றவை ஏற்படலாம். ஆகவே பசியை நன்குணர்ந்துஉணவை நாம் உண்ண வேண்டும்.




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter