Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1171
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எலுமிச்சை
    எலுமிச்சை இதை தேவக்கனி, இராசக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலிகடித்து விடும். ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம்வைத்ததாதல்தான், இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்பது மருவி, எலுமிச்சை என்ற பெயர் வந்ததெனக் கூறுவர்.

    இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும்பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

    இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கிஅவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றிரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

    ஆம்எலுமிச்சைச்சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோகுருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம்ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

    அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின்இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

    சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்துவழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

    பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம்உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்டபழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

    எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள்.இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.

    தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டுலிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்குநான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம்பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையானசிகிச்சை.

    இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13விகிதமாகக்குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும்தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம்இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம்ஆக்ஸலேட்தான்.

    பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள்இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

    contd..



    Sponsored Links

  2. #1172
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    சிறுநீரகக்கல் பிரச்சினை எப்போது தெரியும்?

    சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள்மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம்வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும்இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில்ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போதுஉடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில்உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவுஅதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாகவெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளைஉண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

    இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள்என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள்இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

    ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாகஇறங்க வேண்டும். காரணம், அடுத்த10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்புஉள்ளது.

    கற்கள் பெரிதாகி, வேறுவழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச்சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy),பெர்குடானியஸ்நெப்ரோலிதோடமி (percutaneousnephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடியயூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laserlithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

    இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ளஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

    திரும்பத்திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதேநமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிகமுக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாகஉள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்என்கிறார்ரோஜர் சர்.

    அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளைஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்


  3. #1173
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

    மூலிகை மருந்துகள்

    1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
    ்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

    2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

    3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.


  4. #1174
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

    5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

    6 ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

    7 இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
    8 அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

    9. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
    க்கும்.

    10. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

    11 குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.


  5. #1175
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்:-

    கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
    . . . . உலகோர்க் கெல்லாம் காரமா
    மூலியடா பங்கம்பாளை கொண்டு
    . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
    கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
    . . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
    நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
    . . . . அன்றான ஆகாசகருடன் மூலி
    அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

    - சித்தர் பாடல்.

    ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.

    பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.


  6. #1176
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கொழுப்பைக் குறைக்கும் கிவிப் பழம்!

    ''மாதுளை, சப்போட்டா, கொய்யா என நம் ஊர் பழங்களுக்குப் பதிலாக, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பழங்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். ஆனால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெளிநாட்டில் மட்டுமே விளையக்கூடிய பழங்களை, பெரும்பாலானோர் வாங்குவது இல்லை. நம் ஊரில் விளையாமல் இறக்குமதியாகும் அவகேடோ, கிவி போன்ற பழங்களைச் சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியம்தான்'' என்கிற தஞ்சையைச் சேர்ந்த உணவு நிபுணர் ஜெயந்தி தினகரன்,

    வைட்டமின்கள், தாது உப்புகளின் 'பவர் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் கிவிப் பழத்தின் மருத்துவப் பலன்கள் பற்றிச் சொல்கிறார்.

    'வைட்டமின் ஏ, சி, கே, புரதம், கார்போஹைட்ரேட், நீர்ச் சத்து என மனிதனுக்குத் தேவையான ஒன்பது சத்துக்கள் நிறைந்த ஒரே பழம் 'கிவி’தான். பெரிய சைஸ் சப்போட்டா பழம்போலத் தெரியும், கிவிப் பழத்தில், நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. உடல் பருமனாக உள்ளவர்கள், கொழுப்பு அதிகம் உள்ளவர்கள், எடை குறைக்க நினைப்பவர்கள் இதைச் சாப்பிடலாம்'' என்கிற ஜெயந்தி தினகரன், கிவிப் பழத்தின் பலன்களைப் பட்டியலிட்டார்.

    நம் உடலில், 'ஃப்ரீ ராடிக்கல்ஸ்’ என்ற நச்சுப் பொருள் உருவாகிறது. இதுவே பல்வேறு நோய்களுக்குக் காரணம். கிவி பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட் என்று அழைக்கப்படும் வைட்டமின்களான ஏ, சி, ஈ சத்துக்கள் உள்ளதால், ஃப்ரீ ராடிக்கல்ஸை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

    ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே இதிலும் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், முதுமைக் கால கண் நோய்கள், தோல் நோய்களைப் போக்கும்.

    தினமும் ஒரு கிவிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தாலே, அன்றைய தினத்துக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும். வைட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட பெரிதும் அவசியம். ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு நீங்கி, சுவாசம் சீரடையும்.

    இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து, சருமம் இளமைப் பொலிவுடன் இருக்கவும் கருவுறுதலுக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

    ஃபோலிக் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதில் நிறைவாக இருப்பதால், குழந்தைகளின் மூளை செல்களின் வளர்ச்சியைத் தூண்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    வாழைப் பழத்தில் உள்ளதைவிட, பொட்டாசியம் தாது உப்பு அதிக அளவில் உள்ளது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பாலிபீனால்கள் இதய தசை மற்றும் ரத்தக் குழாய்களைப் பாதுகாத்து, மாரடைப்பு வராமல் தடுக்க உதவும்.
    contd..



  7. #1177
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    நார்ச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலைத் தீர்க்கும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை நீக்கும்.

    சர்க்கரைக் குறியீடு இதில் குறைவாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை, கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

    'கிவி’ ஆன கதை

    சீனாவின் தேசியப் பழம் இது. இந்தப் பழத்தை சீனர்கள், 'யாங் டா’ (Yang Tao) என்று அழைக்கின்றனர். 1930-களில் நியூசிலாந்தில் அதிக அளவில் விளைவித்துள்ளனர். இரண்டாம் உலகப் போரின்போது நியூசிலாந்தில் இருந்த அமெரிக்க ராணுவத்தினர் விரும்பிச் சாப்பிட்டுள்ளனர். அமெரிக்கர்கள் இந்தப் பழத்தை விரும்பிச் சாப்பிடுவதால் நியூசிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு இந்தப் பழம் ஏற்றுமதி செய்யப்பட்டது. நியூசிலாந்தின் சின்னமான 'கிவி’ பறவையின் தோற்றத்தைப் போன்று, அதே நிறத்தில் இருந்ததால், இந்தப் பழத்துக்கு, 'கிவி’ என்று பெயர் வைத்தனர். 'சீனத்து நெல்லிக்கனி’ என்றும் இதை அழைக்கின்றனர்.


  8. #1178
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த ஆரோக்கிய உணவுகள்!

    நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது.

    தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேயே, அல்சைமர் நோயானது பரம்பரை காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், இதர காரணிகளும் அல்சைமர் நோயை உண்டாக்கலாம் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் சத்துணவு, கல்வி, நீரிழிவு நோய், உளவியல் செயல்பாடுகள், உடலியல் செயல்பாடுகள் போன்றவை அடங்கும்.

    மேலும் அல்சைமர் நோயை, டிமென்ஷியா/முதுமை மறதி (dementia) என்றும் அழைப்பார்கள். இப்போது இந்த அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதிலிருந்து விடுபடலாம்.

    தானியங்கள்:

    மற்றும் நட்ஸ் தானிய வகைகள், குறிப்பாக கோதுமையானது புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் கோதுமையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகிய நட்ஸ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவைகளும் புதிய செல் உற்பத்திக்கு உதவி புரிகின்றன.


    ப்ளூபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. எனவே அவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கின்றன. மேலும் இப்பழம் வயதிற்கும், உடலிலுள்ள செல்களின் அளவுக்கும் உள்ள சமநிலையைப் பேணவும் மிகவும் உதவியாக உள்ளது
    contd..



  9. #1179
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    செர்ரி:

    செர்ரிப் பழத்தில் உடலுக்குத் தேவையான பண்புகள்அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் இதய நோய்கள் மற்றும் டிமென்ஷியா நோய் ஏற்படுவதைத்தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது.

    மீன்கள்:

    மீன்களில் குறிப்பாக சால்மன், சூரைமீன் போன்றவற்றை உண்பதன் மூலம், மூளை நன்றாக வளரும். ஏனெனில் மீன்களில் கால்சியமும், புரதச்சத்தும் நிறைந்துள்ளன. இவ்விரண்டு சத்துக்களும்மூளை வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பதுஇன்றியமையாதது.

    தக்காளி:

    தக்காளியில் லைகோபைன்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள்பாதிக்கப்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கின்றன. மேலும் இவை டிமென்ஷியா மற்றும்அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.

    முட்டைகள் முட்டைகளில் வைட்டமின் பி12 மற்றும் கோலைன் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவைமூளைச் செல்களின் உற்பத்தியைத் தூண்டி, நினைவாற்றலைஅதிகரிக்கும் தன்மை உடையது.
    ப்ராக்கோலி:

    ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது, மூளைவளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுகளுக்கும் மிகவும்நல்லது.

    தயிர்:

    தயிரில் உள்ள அமினோ அமிலங்கள், மன இறுக்கத்தைக் குறைக்கின்றன. பொதுவாக மன இறுக்கம்அதிகமானால், மூளைச் செல்கள் சீக்கிரம் முதுமையடைந்துவிடுகின்றனவாம். ஆகவே தயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

    சாக்லெட்:

    அதிகமான சாக்லெட்டுக்கள் சாப்பிடுவது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நம் அனைவருக்கும்நன்றாகத் தெரியும். இருப்பினும், டார்க்சாக்லெட்டுகள் மூளைக்கு மிகவும் நல்லவை. இவற்றில் உள்ள ஃப்ளேவோனால்கள், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கஉதவுகின்றன.

    காபி:

    டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும்அபாயத்தைக் காபி குறைக்கிறது. காபியில், காஃப்பைன்மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இருப்பினும் காபி உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது என்பதால், காபியை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.

    உடற்பயிற்சி:

    மேற்கூறியவற்றுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொண்டால், அல்சைமர் நோய் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் அண்டாமல்தடுக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முறையான உடற்பயிற்சிகளுடன், மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை முடிந்தவரை அதிகமாகஉணவில் சேர்த்து, அல்சைமர்நோயை வாழ்க்கையிலிருந்து தவிர்த்து விடுங்கள்



  10. #1180
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல் என்றும் புத்துணர்ச்சியுடன் திகழ !!!

    மணத்தக்காளி, முருங்கைக் கீரை இதில் ஏதேனும் ஒன்றைச் சுத்தம் செய்துவிட்டு நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்பு தேவையான அளவு வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், இஞ்சி இவற்றுடன் கீரையையும் ஒன்றாகச் சேர்த்து வேக வைக்கவும். அவை வெந்தவுடன் மிக்சியிலே கடைந்து கூழாக்கும் நிலை பெற்றவுடன் ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்துவிட, கமகமக்கும் "சூப்' இம்முறையில் கிடைத்துவிடும். இந்த "சூப்'பை தினசரி அருந்துவோர் உடல் என்றும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    பூசணிச்சாறு

    சாம்பல் பூசணிக்காயை பட்டை, விதைகளுடன் வெட்டி மிக்சியில் போட்டு சட்னிபோல் அரைத்த பிறகு அதைத் துணியால் வடிகட்டிவிட நல்ல சாறு கிடைக்கும். அல்சர் நோய் உள்ளவர்கள் இந்த டானிக் சாறை அடிக்கடி உமிழ்நீருடன் சுவைத்து அருந்த, வயிற்றில் உற்பத்தியாகும் அமிலங்களை நன்கு ஜீரணிக்க வைத்து அல்சர் வராது காக்கும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter